search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்...

    • இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
    • பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

    இந்தநிலையில் சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார்.

    அதற்கான லோகோவை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில், "தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.." என்ற தலைப்பில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

    Live Updates

    • 19 Feb 2024 5:32 AM GMT

      தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்படும்

    • 19 Feb 2024 5:32 AM GMT

      இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.440 கோடி நிதி ஒதுக்கீடு

    • 19 Feb 2024 5:31 AM GMT

      கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ. 1,100 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு

    • 19 Feb 2024 5:30 AM GMT

      ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2500 கோடி ஒதுக்கீடு

    • 19 Feb 2024 5:28 AM GMT

      புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.370 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    • 19 Feb 2024 5:25 AM GMT

      பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு

    • 19 Feb 2024 5:24 AM GMT

      உயர் கல்வித்துறைக்கு 8,212 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

    • 19 Feb 2024 5:23 AM GMT

      தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.

    • 19 Feb 2024 5:23 AM GMT

      அரசு பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த தமிழ் புதல்வன் என்ற திட்டம் அறிமுகம்

    • 19 Feb 2024 5:20 AM GMT

      கோவையில் பிரமாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு

    Next Story
    ×