search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்...

    • இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
    • பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

    இந்தநிலையில் சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார்.

    அதற்கான லோகோவை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில், "தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.." என்ற தலைப்பில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

    Live Updates

    • 19 Feb 2024 10:39 AM IST

      கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.13,720 கோடி ஒதுக்கீடு

    • 19 Feb 2024 10:37 AM IST

      ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் ரூ.7,190 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.

    • 19 Feb 2024 10:37 AM IST

      மதுரை, சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

    • 19 Feb 2024 10:37 AM IST

      கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.946 கோடி நிதி ஒதுக்கீடு

    • 19 Feb 2024 10:34 AM IST

      நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.

    • 19 Feb 2024 10:34 AM IST

      ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் அடுத்த 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு வீட்டின் மதிப்பீடு ரூ.3.5 லட்சமாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

    • 19 Feb 2024 10:32 AM IST

      வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி ஒதுக்கீடு

    • 19 Feb 2024 10:32 AM IST

      சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு

    • 19 Feb 2024 10:31 AM IST

      சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் தங்கம் தென்னரசு

    • 19 Feb 2024 10:28 AM IST

      குடிசை இல்லா தமிழகம் இலக்கை எட்ட 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.

    Next Story
    ×