search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்...

    • இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
    • பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

    இந்தநிலையில் சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார்.

    அதற்கான லோகோவை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில், "தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.." என்ற தலைப்பில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

    Live Updates

    • 19 Feb 2024 10:27 AM IST

      சிங்கார சென்னை திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

    • 19 Feb 2024 10:27 AM IST

      முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்த ரூ.27,000 கோடி நிதி ஒதுக்கீடு

    • 19 Feb 2024 10:26 AM IST

      தமிழகத்தில் 4,458 கிலோ மீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படும்.

    • 19 Feb 2024 10:25 AM IST

      கலைஞர் மேம்பாடு திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

    • 19 Feb 2024 10:24 AM IST

      தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 5 லட்சம் ஏழைகள் மீட்டெடுக்கப்படுவார்கள்

    • 19 Feb 2024 10:24 AM IST

      5000 நீர் நிலைகள் புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு

    • 19 Feb 2024 10:22 AM IST

      தேசிய ஊரக வேலைவாய்ப்புக்கு 3300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

    • 19 Feb 2024 10:22 AM IST

      ஊரக பகுதிகளில் உள்ள குளம் மற்றும் நீர்நிலைகளை தூர்வார 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு

    • 19 Feb 2024 10:21 AM IST

      மாநகராட்சி பகுதிகளில் 300 கோடி ரூபாயில் சாலை உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.

    • 19 Feb 2024 10:21 AM IST

      ஊரகப்பகுதியில் 2000 நீர்த்தக்க தொட்டிகள் கட்டி தரப்படும்

    Next Story
    ×