search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்...

    • இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
    • பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

    இந்தநிலையில் சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார்.

    அதற்கான லோகோவை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில், "தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.." என்ற தலைப்பில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

    Live Updates

    • 19 Feb 2024 10:21 AM IST

      2025-ம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு

    • 19 Feb 2024 10:17 AM IST

      தொல் மரபணுவியல் ஆய்வக மேம்பாட்டிற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.

    • 19 Feb 2024 10:16 AM IST

      கீழடியில் ரூ.17 கோடியில் திறந்த வெளி அரங்கம் அமைக்கப்படும்.

    • 19 Feb 2024 10:16 AM IST

      தொல்லியல் துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

    • 19 Feb 2024 10:14 AM IST

      அரிய நூல்களை பாதுகாக்க 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

    • 19 Feb 2024 10:14 AM IST

      தமிழ் மின் நூலக மேம்பாட்டிற்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

    • 19 Feb 2024 10:13 AM IST

      இனிவரும் காலங்களில் மேலும் 600 நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்

    • 19 Feb 2024 10:13 AM IST

      சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்க்க இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

    • 19 Feb 2024 10:12 AM IST

      கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    • 19 Feb 2024 10:10 AM IST

      காலை உணவு திட்டத்திற்கு 2023-ம் ஆண்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    Next Story
    ×