search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தந்தை ஸ்தானத்தில் இருந்து உருவாக்கியது தமிழ்ப் புதல்வன் திட்டம்- மு.க.ஸ்டாலின்
    X

    தந்தை ஸ்தானத்தில் இருந்து உருவாக்கியது தமிழ்ப் புதல்வன் திட்டம்- மு.க.ஸ்டாலின்

    • 6- 12 அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
    • 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இருந்து, இன்று தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த விழாவுக்கு வருவதற்கு முன்பு நேற்று இரவே வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்க உத்தரவிட்டுவிட்டேன்.

    நாள்தோறும் ஏராளமான திட்டங்களை தீட்டினாலும் ஒரு சில திட்டங்கள் தான் மனதிற்கு நெருக்கமாக இருக்கும்.

    இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க கோவையை தேர்ந்தெடுக்க காரணம், என் பாசமான மக்கள் கோவையை சேர்ந்தவர்கள்.

    தொழில் துறையில் சிறந்த மாவட்டம் கோவை. தலை சிறந்த கல்வி நிறுவனங்கள் இங்கு உள்ளன. மக்களுக்கு நேரடியாக பயனளிக்கக்கூடிய திட்டங்களை திராவிட மாடல் அரசு தொடங்கி வைத்து வருகிறது.

    திராவிட மாடல் அரசு என்றாலே அது சமூக நீதிக்கான அரசு தான். பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேறுவதில் பார்த்து பார்த்து செய்கிறோம்.

    முதலமைச்சர் ஆனதும் முதல் கையெழுத்தே பெண்களுக்கான விடியல் பயணம் திட்டத்திற்கு தான்.

    6- 12 அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

    புதுமைப் பெண் திட்டத்தை பார்த்து மாணவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    திராவிட மாடல் வழியில் முதலமைச்சரான நானும் ஒரு தந்தை நிலையில் உருவாக்கிய திட்டம் தமிழ் புதல்வன். நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து மாணவர்கள் கல்வி பயில உருவாக்கிய திட்டம்.

    விழா நடைபெறும் இந்த அரசுக் கல்லூரி 173 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    மேலைநாடுகளுக்கு இணையான கட்டமைப்பு வசதி உள்ள மாநிலமாக தமிழ்நாடு உயரும்.

    அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும்- இதுதான் என்னுடைய கனவு.

    மாணவர்களின் கல்விக்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது. இதற்கு உறுதுணையாக நான் இருக்கிறேன். உங்கள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை விட, நான் அதிகம் வைத்துள்ளேன்.

    உங்கள் வெற்றிக்கு பின்னால் என்னுடைய திராவிட மாடல் இருக்கிறது. மறந்துவிட வேண்டாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×