search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
    X

    குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

    • அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
    • ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குள் நேற்று மாலையில் பெய்த கன மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், இன்று காலையில் மழை அளவு குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ளதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து முதற்கட்டமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும், பழைய குற்றால அருவியில் நேற்று திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக அந்த பகுதியில் கற்கள் மற்றும் மணல்கள் காணப்பட்டதால் அதனை அப்புறப்படுத்திய பின் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    Next Story
    ×