search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேசிய விழிப்புணர்வு நடைபயணத்தில் பங்கேற்ற விஜய் வசந்த்
    X

    தேசிய விழிப்புணர்வு நடைபயணத்தில் பங்கேற்ற விஜய் வசந்த்

    • அரசு ஒரு உயர் மட்ட நிபுணர் குழுவை அமைத்து பாலத்தின் உறுதிதன்மையை ஆய்வு செய்ய வேண்டும்.
    • பொதுமக்களுக்கு அதிகமாக சிரமம் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தினை ஒழுங்கு செய்ய வேண்டும்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

    மார்த்தாண்டம் மேம்பாலம் மீண்டும் பழுதடைந்துள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினருடன் கலந்து கொண்டேன். மேலும் இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாற்று நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினேன்.

    கடந்தமுறை போன்று இம்முறையும் தற்காலிகமாக பணிகள் செய்து போக்குவரத்திற்கு பாலத்தை திறந்து விடுவதை தவிர்த்து, அரசு ஒரு உயர் மட்ட நிபுணர் குழுவை அமைத்து பாலத்தின் உறுதிதன்மையை ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் ஆய்வு அறிக்கையை ஆராய்ந்து அதன் பின்னர் இந்த பாலத்தினை பழுது பார்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    அதுவரை பொதுமக்களுக்கு அதிகமாக சிரமம் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தினை ஒழுங்கு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட கமிட்டிகள் சார்பில் நாகர்கோவில், வேற்கிளம்பி மற்றும் குளச்சல் பகுதிகளில் நடைபெற்ற தேசிய விழிப்புணர்வு நடைபயணங்களில் கலந்து கொண்டேன்.

    Next Story
    ×