search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கலைஞர் மகளிர் உரிமை தொகை.. விண்ணப்பிக்காதவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்
    X

    கலைஞர் மகளிர் உரிமை தொகை.. விண்ணப்பிக்காதவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்

    • இதுவரை 1,13,84,300 பேருக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.
    • அக்டோபர் 25-ம் தேதி வரை மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.

    தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி துவங்கி வைத்தார். அப்போது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்கிற்கு மாதம் ரூ. 1000 அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் விடுபட்டவர்களுக்கு கடந்த 10-ம் தேதி 2-வது கட்டமாக பணம் வழங்கப்பட்டது. இதில் 7 லட்சத்து 35 ஆயிரம் பெண்களுக்கு ரூ. 1000 வழங்கப்பட்டது. அந்த வகையில் இரண்டு கட்டங்களை சேர்த்து 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் இதுவரை மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.


    இதுதவிர கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. இதற்காக கடந்த அக்டோபர் 25-ம் தேதி வரை மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான புதிய விண்ணப்பம் ஜனவரிக்கு பிறகு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து இருக்கிறார். தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    Next Story
    ×