search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    யூ டியூபர் டிடிஎஃப் வாசன் ஜாமினில் விடுதலை: மீண்டும் பைக் ஓட்டுவேன் என்கிறார்
    X

    யூ டியூபர் டிடிஎஃப் வாசன் ஜாமினில் விடுதலை: மீண்டும் பைக் ஓட்டுவேன் என்கிறார்

    • சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாசன், நேற்று ஜாமினில் விடுதலை ஆனார்
    • கை போனதைவிட, லைசென்ஸ் போனபோது கண் கலங்கிவிட்டேன்

    பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடி எஃப் வாசன் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது விபத்திற்கு உள்ளானார். இதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், போக்குவரத்துத்துறை அவரது லைசென்ஸ் உரிமையை 10 வருடத்திற்கு ரத்து செய்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு ஜெயலில் அடைக்கப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    ஜாமின் கிடைத்த நிலையில், டிடிஎஃப் வாசன் நேற்று சிறையில் இருந்து வெளியில் வந்தார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், சர்வதேச லைசென்ஸ் பெற்று மீண்டும் பைக் ஓட்டுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பைக்கும் ஓட்டுவேன். படத்திலும் நடிப்பேன். ஆர்வத்தை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது. சர்வதேச லைசென்ஸ் எடுக்கலாம். இல்லையெனில் மேல்முறையீடு செய்யலாம். கை போனதைவிட, லைசென்ஸ் போனபோது கண் கலங்கிவிட்டேன். எல்லாவற்றிலும் உறுதியாக இருப்பேன். ஆனால் 10 வருடம் லைசென்ஸ் ரத்து என்றபோது சற்று வருத்தமாக இருந்தது.

    இவ்வாறு டிடிஎஃப் வாசன் தெரிவித்தார்.

    ஆனால், சர்வதேச லைசென்ஸ் வைத்து தமிழகத்தில் வாகனம் ஓட்ட முடியாது என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×