என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கனமழை: தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
- தஞ்சை மாவட்டத்தில் இன்று தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
- சிவகங்கையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதன் தொடக்க காலத்தில் சில நாட்கள் மழை பெய்தது. அதன் பின்னர் விட்டு விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 11 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் இன்று தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். மழை தொடரும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பெய்யும் இடங்களில் விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.