search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    வெள்ள மீட்பு பணிகளை முடுக்கி விடுமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த செல்லூர் ராஜூ
    X

    வெள்ள மீட்பு பணிகளை முடுக்கி விடுமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த செல்லூர் ராஜூ

    • செல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்திருந்தது.
    • அண்ணே எல்லாம் பண்ணிகிட்டு இருக்கோம் என அவரிடம் அமைச்சர் மூர்த்தி பதில் அளித்தார்.

    மதுரை மாநகரில் நேற்று வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. நேற்று மாலை ஒரு மணி நேரத்தில் மதுரை மாநகரில் மட்டும் 4.5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. குறைந்த மணி நேரத்தில் அதிகனமழை பெய்ததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் மதுரையில் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக செல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்திருந்தது. அந்த தண்ணீரே வடியாத நிலையில் நேற்று பெய்த மழையால் மீண்டும் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை வரை செல்லூர், அய்யர்பங்களா, நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தண்ணீர் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    மாவட்ட நிர்வாகம் தண்ணீரை வெளியேற்றும் பணியை முடுக்கி விட்டுள்ளது. நவீன மின் மோட்டார்கள் மூலம் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மதுரை மாநகர மக்களுக்கு இந்த பருவமழையால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மதுரை செல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் வெள்ள மீட்பு பணிகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவரிடம் வெள்ள மீட்பு பணிகளை முடுக்கி விடுமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்தார்.

    அதிகாரிகளிடமும் வெள்ள மீட்பு பணிகள் தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ வலியுறுத்தினார்.

    அண்ணே எல்லாம் பண்ணிகிட்டு இருக்கோம் என அவரிடம் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

    Next Story
    ×