என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
சீனாவில் இரண்டு இடங்களில் தீ விபத்து: 32 பேர் பலி
Byமாலை மலர்18 April 2023 8:45 PM IST
- தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தொழிற்சாலையில் பெயிண்ட் உள்ளிட்ட மூலப்பொருட்களால் தீ பரவியிருக்கலாம் என தெரிகிறது.
பீஜிங்:
சீனாவில் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை ஆகிய இடங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பீஜிங்கின் பெங்டாய் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். சுமார் 2 மணி நேரம் நடந்த மீட்பு பணியில் 71 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு, வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், ஜெஜியாங் மாகாணம் ஜின்ஹுவா நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மரக் கதவுகள் தயாரிக்கப்படும் பகுதியில், பெயிண்ட் உள்ளிட்ட மூலப்பொருட்களால் தீ பரவியிருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி விசாரணை நடத்தப்படுகிறது.
Next Story
×