search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மனிதாபிமானத்தை படுகொலை செய்யும் பேரழிவு திட்டம்.. காசா மக்களை  பட்டினி போட இஸ்ரேல் முடிவு
    X

    மனிதாபிமானத்தை படுகொலை செய்யும் பேரழிவு திட்டம்.. காசா மக்களை பட்டினி போட இஸ்ரேல் முடிவு

    • இஸ்ரேல் ஜெனெரல்களால் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது
    • கடந்த இரண்டு வாரங்களாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வருவது குறைக்கப்பட்டுள்ளதால் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது

    காசா - ஹமாஸ்

    பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடகாலமாக தாக்குதல் நடத்தி 41 ஆயுரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை கொன்ற பிறகும் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேலால் ஒழிக்க முடியவில்லை. முக்கியமாக காசா நகரின் வேர்களோடு கலந்திருக்கும் ஹமாஸ் சுரங்கப்பாதை கட்டமைப்பும், போர் யுக்திகளுக்கும் இஸ்ரேலுக்கு இன்னும் குழப்பமானதாகவே உள்ளது.

    அதனாலேயே பொதுமக்கள், ஹமாஸ் என பிரித்துப்பார்க்காமல் அனைவர் மீதும் கண்ணில் படும் அனைத்தின்மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரினால் காசாவின் அடிப்படை சுகாதார வசதிகள், உணவு ஆகியவை கிடைக்காமல் பெண்களும் குழந்தைகளும் கடும் சிரமத்தில் உள்ளனர்.

    ஜெனெரல்ஸ் பட்டினி திட்டம்

    இந்நிலையில் நிலைமையைத் தீவிரப்படுத்தும் வகையில் இஸ்ரேல் ஈவு இரக்கமற்ற புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. ஜெனெரல்ஸ் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திடம் வடக்கு காசாவுக்குள் எந்த ஒரு உணவும் அத்தியாவசிய பொருட்களும் செல்லாமல் அங்குள்ளவர்களைப் பட்டினி போடுவதே ஆகும்.

    இஸ்ரேல் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஜியோரா எய்லாண்ட் உள்ளிட்ட முக்கிய ஜெனெரல்கள் இந்த திட்டத்திற்கான மூளை. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட இந்தத்திடன்படி வடக்கு காசா மக்களுக்கு அங்கிருந்து மொத்தமாக வெளியேற 10 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதன்பின் அந்த பகுதி ராணுவ மண்டலமாக அறிவிக்கப்பட்டு முற்றிலுமாக மூடப்படும்.

    எனவே அதன்பின்னும் அங்கு இருப்பவர்கள் அனைவரும் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்களாகவே கருதப்படுவார்கள். அந்த ராணுவ மண்டலத்துக்குள் அதாவது வடக்கு காசாவுக்குள் செல்லும் உணவு,தண்ணீர், மருந்து என அனைத்தும் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டு நிறுத்தப்படும்.

    அழிவு

    அவர்கள் ஹமாஸ் என்று முத்திரை குத்தப்படுவதால் அவர்கள் மீது சர்வதேச சட்டப்படி எந்த தடையும் இல்லாமல் தாக்குதல் நடத்த முடியும். இதன்படி அங்குள்ள மக்களுக்கு இஸ்ரேல் இரண்டே வழியைத்தான் வழங்குகிறது. ஒன்று மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும், இல்லை பட்டினியால் அங்கேயே சாக வேண்டும். இந்த திட்டம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் வெகுவாக பாராட்டப்பட்டு அதைச் செயல்படுத்துவதற்குத் தீவிரம் காட்டப்படுகிறது.

    ஏற்கவே காசாவுக்குள் கடந்த இரண்டு வாரங்களாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வருவது குறைக்கப்பட்டுள்ளதால் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக ஐநா கூறியுள்ள நிலையில் இஸ்ரேலின் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் காசாவில் பேரழிவு ஏற்படும் என்று சர்வதேச சமூகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×