என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
ஓஹோ கதை அப்படி போகுதா.. உக்ரைனுக்கு பறந்த போன் கால்.. அங்கிட்டு டிரம்ப்.. கூடவே மஸ்க் - ஸ்டன் ஆன ஜெலன்ஸ்கி
- நான் புதிய போர்களை தொடங்கமாட்டேன், நடக்கும் போர்களை நிறுத்தவே வந்துள்ளேன்
- மஸ்க்கை சுட்டிக்காட்டி புதிய நட்சத்திரம் உதயமாகி உள்ளதாக பேசினார்.
அதிபர் தேர்தல்
நடந்து முடிந்த அமரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்றார் இரண்டாவது முறையாக அதிபராகும் டிரம்ப் அமெரிக்காவின் 47 வது அதிபர் ஆகிறார். இந்நிலையில் காசா போர், உக்ரைன் போர் உள்ளிட்டவற்றை டிரம்ப் எப்படி கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
நான் புதிய போர்களை தொடங்கமாட்டேன், நடக்கும் போர்களை நிறுத்தவே வந்துள்ளேன் என்று தனது வெற்றி உரையில் டிரம்ப் பேசினார். இதற்கிடையே டிரம்ப்பின் வெற்றிக்கு ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
உக்ரைன் அதிபர்
தற்போது புளோரிடாவில் எலான் மஸ்க்குடன் மார் இ லாகோ பால்ம் கடற்கரை ரிசார்ட்டில் ஓய்வெடுத்து வரும் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த போன் உரையாடலில் எலான் மஸ்க்கும் இருந்துள்ளார். இந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக குதிரை மீது பந்தயம் கட்டுவது போல் சுமார் 118 மில்லியன் டாலர் வரை செலவு செய்துள்ளார்.
புதிய நட்சத்திரம்
வெற்றி பெற்ற குதிரையை வைத்து வருங்கால திட்டங்களை மஸ்க் தீட்டி வருகிறார். மஸ்க்குக்கு அமைச்சரவையில் முக்கிய பதவி வழங்கப்படும் என்று டிரம்ப் வெற்றி பெறுவதற்கு முன்பே அறிவித்திருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு அதிகரித்து வருகிறது. டிரம்ப்பின் நம்பிக்கைக்குரிய நபராக எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார். தனது வெற்றி உரையின்போது பேசிய டிரம்ப், மஸ்க்கை சுட்டிக்காட்டி புதிய நட்சத்திரம் உதயமாகி உள்ளதாக மெய் சிலிர்த்துப் பேசினார்.
இந்நிலையில்தான் ஜெலன்ஸ்கியுடன் போனில் பேசிய டிரம்ப், உக்ரைனுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று பேசியுள்ளாராம். தொடர்ந்து லைனை எலான் மஸ்க்கிடம் கொடுத்துள்ளார். ஜெலன்ஸ்கியுடன் பேசிய மஸ்க், உக்ரைனுக்கு தனது ஸ்டார் லிங்க் நிறுவனம் டிரோன் கண்கணிப்பு உள்ளிட்ட சாட்டிலைட் தொழில்நுட்ப உதவிகளை விரிவுபடுத்தும் என்று உறுதி அளித்துள்ளாராம்.
இந்த மூவரது உரையாடல் சுமார் அரை மணி நேரம் நீடித்ததாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. தான் டிரம்ப் உடன் பேசியதாகவும் அவர் ஆதரவு வழங்குவதாக உறுதி அளித்தார் என்றும் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக பெரும் பணக்காரர் நினைத்தால் உலக வல்லரசாக இருப்பினும் அதன் ஜனநாயகத்தில் தனது ஆதிக்கத்தை நிறுவிக் கொள்ள முடியும் என்பது தெளிவாகிறது. அடுத்ததாக கனடா பிரதமர் ட்ரூடோ அடுத்த தேர்தலில் தோற்பார் என்றும் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் போர்
உக்ரைன் நேட்டோ நாடுகளுடன் சேர்வது தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரில் இரு நாடுகளும் அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்