search icon
என் மலர்tooltip icon

    வங்காளதேசம்

    • முதலில் ஆடிய இந்தியா 186 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    டாக்கா:

    இந்தியா, வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து187 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் தவறவிட்ட கேட்ச் இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்துள்ளது.

    வங்காளதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி வெற்றிபெற்றுவிடும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி வீரராக களமிறங்கிய ரஹ்மானுடன் ஜோடி சேர்ந்த மெஹிடி ஹசன் மிர்சா அதிரடியாக ஆடினார். அவர் ரன்களை வேகமாக அடிக்க இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு நழுவிக்கொண்டே இருந்தது.

    ஷர்துல் தாகூர் வீசிய 43-வது ஓவரின் 3-வது பந்தை ஹசன் மிர்சா விளாசினார். அது கேட்ச் நோக்கிச் சென்றது. அந்த பந்தை கேட்ச் பிடிக்க விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் வேகமாக ஓடிச்சென்றார். அவர் கேட்ச் பிடிக்க முயற்சித்தபோது பந்து அவரது கையில் இருந்து நழுவி கீழே விழுந்தது. கேட்ச் தவறவிட்டதை தொடர்ந்து, அதிரடியை தொடர்ந்த ஹசன் மிர்சா வங்காளதேசத்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    ஹசன் மிர்சா - ரஹ்மான் ஜோடி கடைசி விக்கெட்டில் 51 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

    முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அணி மீதும், கேப்டன் ரோகித் சர்மா மீதும், கேட்சை தவறவிட்ட கே.எல்.ராகுல் மீதும் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    • இந்தியா தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 73 ரன்கள் அடித்தார்.
    • வங்காளதேசம் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

    மிர்புர்: 

    வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே மிர்புரில் இன்று முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே வங்காள தேச வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஷேகர் தவான் 7 ரன்னுடன் வெளியேற கேப்டன் ரோகித் சர்மா 27 ரன்னுக்கு அவுட்டானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 9 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

    ஷ்ரேயஸ் அய்யர் 24 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்னும் அடித்தார். தாக்குப் பிடித்து விளையாடிய கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார். 


    இந்திய அணி 41.2 ஓவர் முடிவில் 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்களை கைப்பற்றினார். ஹூசைன் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 186 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வங்களாதேசம் அடுத்ததாக விளையாடுகிறது.

    • டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பினர்.

    மிர்புர்:

    வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கும் இடையே மிர்புரில் இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்கிறது.

    நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி உள்ள இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இதனால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்தியா, வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வரும் 4-ம் தேதி நடக்கிறது.
    • ஒருநாள் தொடருக்கு வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    டாக்கா:

    இந்திய அணி வங்காளதேசம் சென்று 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா, வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 4-ம் தேதி மிர்புரில் நடக்கிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பயிற்சியின்போது வழக்கமான கேப்டன் தமீம் இக்பால் காயம் அடைந்ததால் அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிட்ரங் சூறாவளி புயலுக்கு பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
    • இந்தியாவின் அசாம் உள்பட 4 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டது.

    டாக்கா:

    வங்காள தேசத்தில் சிட்ரங் புயல் நேற்று கரையை கடந்தது. இந்தப் புயலால் காற்றின் வேகம் மணிக்கு 100 கி.மீ. வரை அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து புயல் வலுவிழந்தது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் புயல் கரையை கடந்ததால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இந்த புயலால் டாக்கா நகரம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன.

    இந்நிலையில், வங்காளதேசத்தில் சிட்ரங் சூறாவளி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில், கமில்லா நகரை சேர்ந்த ஒரே குடும்பத்தின் 3 பேர், போலா நகரை சேர்ந்த 2 பேர் மற்றும் நரைல், ஷரியத்பூர், பர்குனா மற்றும் டாக்கா நகரங்களை சேர்ந்த தலா ஒருவர் உள்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

    புயலில் இருந்து கடலோர பகுதி மக்களை பாதுகாக்க 15 கடலோர மாவட்டங்களில் 7,030 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுவரை 2 லட்சம் பேர் வெளியேற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    மேலும் இந்தியாவின் அசாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 576 பாதுகாப்பு முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
    • மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மேற்கு வங்க அரசு வலியுறுத்தல்.

    வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சிட்ரங் புயலாக வலுவடைந்துள்ளது. வங்காளதேசத்தை இன்று அது கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டின் காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வந்த 28,155 மக்களும் 2,736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    இதற்காக 576 முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், காக்ஸ் பஜார் துணை ஆணையர் மாமுனூர் ரஷீத் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால், கல்வி நிறுவனங்கள் தங்குமிடங்களாகப் பயன்படுத்த தயாராக வைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் மக்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் உதவ வேண்டும்104 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. 323 டன் அரிசி உள்பட உணவு பொருட்களும் விநியோகிக் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் சிட்ரங் புயல் காரணமாக மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். முன்னேற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது என்றும் தேவையில்லாமல் வெளியில் செல்வதையோ அல்லது கடல் பகுதிகளுக்கு செல்வதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    • இலங்கையை வீழ்த்திய இந்தியா 7-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
    • 7-வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    சில்ஹெட்:

    8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. இந்தியா சார்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா 8.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்று 7-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது.

    7-வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    இந்நிலையில், ஆசிய கோப்பை வெற்றி குறித்து தீப்தி ஷர்மா கூறுகையில், அணியின் ஒட்டுமொத்த கூட்டு முயற்சியால் ஆசிய கோப்பையை வெல்ல முடிந்தது. தற்போதைய நிலையில் இந்தியா உலக கோப்பையை வெல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் சேர்த்தது.
    • தொடரின் சிறந்த வீராங்கனை விருது தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

    சில்ஹெட்:

    வங்காளதேசத்தில் பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வியூகத்துடன் களமிறங்கிய இலங்கை, சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 8.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. ஸ்மிருதி மந்தனா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் ஏழாவது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது.

    இன்றைய போட்டியின் சிறந்த வீராங்கனையாக ரேணுகா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரின் சிறந்த வீராங்கனை விருது தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

    • டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    சில்ஹெட்:

    வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன. இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வியூகத்துடன் களமிறங்கிய இலங்கை, சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    6 ரன்னில் அவுட் ஆனதும் மனமுடைந்து வெளியேறிய இலங்கை அணி கேப்டன் சமாரி அட்டப்பட்டு

    6 ரன்னில் அவுட் ஆனதும் மனமுடைந்து வெளியேறிய இலங்கை அணி கேப்டன் சமாரி அட்டப்பட்டு

    இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார்.

    இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது. 

    • இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக திகழ்கிறது.
    • இலங்கை அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் ஹர்ஷிதா சமரவிக்ரமா நிலாக்‌ஷி டி சில்வா ஆகியோரையே அதிகம் நம்பி இருக்கிறது.

    சில்ஹெட்:

    8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் கடந்த 1-ந் தேதி தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் (பாகிஸ்தானுக்கு எதிராக) முதலிடம் பிடித்தது. தொடர்ந்து அரையிறுதியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை பந்தாடி 7-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.

    சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அணி லீக் சுற்றில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் (இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக) 3-வது இடம் பெற்றது. அந்த அணி அரையிறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பழிதீர்த்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக திகழ்கிறது. பேட்டிங்கில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (215 ரன்கள்), ஷபாலி வர்மா (161 ரன்கள்) நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் தீப்தி ஷர்மா (13 விக்கெட்), ராஜேஸ்வரி கெய்க்வாட் (7 விக்கெட்), சினே ராணா உள்ளிட்டோர் மிரட்டுகிறார்கள்.

    இலங்கை அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் ஹர்ஷிதா சமரவிக்ரமா (201 ரன்கள்), நிலாக்‌ஷி டி சில்வா (124) ஆகியோரையே அதிகம் நம்பி இருக்கிறது. கேப்டன் சமாரி அட்டப்பட்டு எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை. பந்து வீச்சில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் இனோகா ரனவீரா (12 விக்கெட்) கலக்கி வருகிறார்.

    ஆசிய கோப்பை தொடரில் கடைசியாக 2018-ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் மட்டும் இந்திய அணி, வங்காளதேசத்திடம் தோல்வி கண்டது. மற்றபடி இறுதி சுற்றில் இந்தியா தோல்வியே சந்தித்தது கிடையாது. மேலும், லீக் ஆட்டத்தில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இருப்பதால், இறுதி ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி 7-வது முறையாக கோப்பையை வெல்லும் என்பதே பெரும்பாலானவர்களின் கணிப்பாக உள்ளது.

    அதே நேரத்தில், அண்மையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை ஆண்கள் அணி மகுடம் சூடியது போல், இலங்கை பெண்கள் அணியும் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    பிற்பகல் 1 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டி.டி.ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

    • முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 122 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 121 ரன் எடுத்து ஒரு ரன்னில் தோற்றது.

    சில்ஹெட்:

    பெண்கள் ஆசிய கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் மாதவி அதிகபட்சமாக 35 ரன்னும், அனுஷ்கா சஞ்சீவனி 26 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் நஷ்ரா சந்து 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. கேப்டன் பிஸ்மா மரூப் மட்டும் தாக்குப் பிடித்து 42 ரன்கள் எடுத்தார்.

    கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்காள தேசத்தில் காளி கோயிலுக்குள் புகுந்த ஒரு கும்பல் சிலையை சேதப்படுத்தியது.
    • தசரா விழா முடிந்த மறுதினம் காளி சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டாக்கா:

    அண்டை நாடான வங்காள தேசத்தில் கடந்த சில வருடங்களாக ஹிந்து கோயில்கள் உட்பட சிறுபான்மையின வழிபாட்டு தலங்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், வங்காள தேசத்தின் ஜெனைடாவில் காளி கோயில் அமைந்துள்ளது. தசரா விழா முடிந்து நேற்று காலை கோயில் நிர்வாகத்தினர் திறந்தனர்.

    அப்போது அங்குள்ள காளி சிலை பல துண்டுகளாக உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோயிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சிலையின் துண்டுகளை மர்ம நபர்கள் வீசியிருந்தனர்.

    தகவலறிந்து போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தசரா விழா நிறைவடைந்த மறுநாள் காளி சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    ×