search icon
என் மலர்tooltip icon

    வங்காளதேசம்

    • வங்காளதேசத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்தடை ஏற்பட்டது.
    • இந்த மின்தடையால் சுமார் 13 கோடி பேர் பாதிப்பட்டதாக தகவல் வெளியானது.

    டாக்கா:

    உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்ததன் விளைவாக வங்காள தேசம் சமீபத்திய மாதங்களில் பெரும் மின் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

    இந்நிலையில், வங்காள தேசத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக சுமார் 13 கோடி பேர் மின்சாரம் இன்றி தவித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் தடை ஏற்பட்டதாகவும், 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    முக்கிய ஆடைத் துறை மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை சுமார் 10 மணி நேரம் நிறுத்தியது தொடர்பாக வங்காளதேச அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்வினியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்படாததால் எப்போதும் பிரகாசமாக ஒளிரும் டாக்கா நகர வீதிகள் மற்றும் பிற இடங்கள் இருளில் மூழ்கின. கடைகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்தும், செல்போன் டார்ச் மூலமும் உரிமையாளர்கள் பொருட்களை விற்பனை செய்தனர். பல மணி நேரமாக மின்இணைப்பு இல்லாமல் போனதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு முழுவதும் பல பகுதிகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும், நேற்று காலையில்தான் முழு அளவில் மின் இணைப்பு வந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • இந்திய அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா அரை சதமடித்தனர்.
    • ஐக்கிய அரபு அமீரக அணியை 104 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

    சில்ஹெட்:

    மகளிர் ஆசிய கோப்பை தொடர் வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய மகளிர் அணி முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் மலேசியா அணிகளை வீழ்த்தியது.

    இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 178 ரன்களை குவித்தது. பொறுப்புடன் ஆடிய தீப்தி ஷர்மா அரைசதம் அடித்தார். அவர் 49 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 64 ரன்கள் அடித்தார். அதிரடியாக ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், 45 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்களை குவித்தார்.

    இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐக்கிய அரபு அமீரக அணி களமிறங்கியது. 20 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுக்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதனால் இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. ஆட்ட நாயகியாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

    • மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
    • இந்திய வீராங்கனை மேகனா 69 ரன்கள் குவித்தார்.

    சில்கெட்:

    ஆசிய கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் தொடர் வங்களாதேசத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்று உள்ள இந்தத் தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி இன்று மலேசியாவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற மலேசிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது.

    அதிகபட்சமாக இந்திய தொடக்க வீராங்கனை சபனேனி மேகனா 69 ரன்கள் குவித்தார். ஷபாலி வர்மா 46 ரன்களும், ரிச்சா கோஷ் 33 ரன்களும் அடித்தனர். பின்னர் 182 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மலேசிய அணி களம் இறங்கியது. 5.2 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 16 ரன்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது.

    மழை தொடர்ந்ததால் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. இதன் மூலம் இந்த தொடரில் இந்திய பெண்கள் அணி 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலாவது ஆட்டத்தில் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றிருந்தது. நாளை ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விளையாடுகிறது.

    • இந்திய வீராங்கனை ஜெமிமா 53 பந்தில் 76 ரன்கள் குவித்தார்.
    • இலங்கை அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    சில்கெட்:

    ஆசிய கோப்பை பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி விளையாடிய இந்திய பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 53 பந்தில் 76 ரன்கள் குவித்தார். கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 33 ரன் எடுத்தார்.

    இதையடுத்து விளையாடிய இலங்கை பெண்கள் அணி 18.2 ஓவர் முடிவில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ஹர்ஷித சமரவிக்ரம 26 ரன்னும், ஹாசினி பெரேரா 30 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னுடன் பெவிலியன் திரும்பினர். இந்தியா தரப்பில் தயாளன் ஹேமலதா 3 விக்கெட்டும், பூஜா வஸ்த்ரகர், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து இந்திய பெண்கள் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • கரடோயா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆனது.
    • படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இரங்கல் தெரிவித்தார்.

    டாக்கா:

    வங்காளதேசத்தின் பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள போடா, பஞ்ச்பீர், மரியா மற்றும் பங்கரி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க படகு மூலம் போதேஸ்வரி கோவிலுக்கு பயணம் மேற்கொண்டனர்.

    கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த அவர்களது படகு, அதிக பாரம் காரணமாக கவிழ்ந்ததில் 8 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 24 பேர் நீரில் மூழ்கி இறந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் 25க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 20 பேரை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆனது.
    • படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமர் இரங்கல் தெரிவித்தனர்.

    டாக்கா:

    வங்காளதேசத்தின் பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள போடா, பஞ்ச்பீர், மரியா மற்றும் பங்கரி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க படகு மூலம் போதேஸ்வரி கோவிலுக்கு பயணம் மேற்கொண்டனர்.

    கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த அவர்களது படகு, அதிக பாரம் காரணமாக கவிழ்ந்ததில் 8 குழந்தைகள், 12 பெண்கள் உள்பட 24 பேர் நீரில் மூழ்கி இறந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    மேலும் 25க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, வங்காள தேச அதிபர் அப்துல் ஹமீது மற்றும் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • அதிக பாரம் காரணமாக படகு ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
    • காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.

    டாக்கா:

    வங்காளதேசத்தின் பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள போடா, பஞ்ச்பீர், மரியா மற்றும் பங்கரி பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க படகு மூலம் போதேஸ்வரி கோவிலுக்கு பயணம் மேற்கொண்டனர். கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த அவர்களது படகு, அதிக பாரம் காரணமாக கவிழ்ந்ததில் 8 குழந்தைகள், 12 பெண்கள் உட்பட 24 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். அவுலியார் காட் பகுதியில் இந்த கோர விபத்து நடந்தது.


    மேலும் 25க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. தீயணைப்புத்துறை வீரர்கள் உள்ளிட்ட மீட்பு படையினர் மூலம் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக பஞ்சகர் மாவட்ட துணை நிர்வாகத் தலைவர் சோலைமான் அலி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, வங்காள தேச அதிபர் அப்துல் ஹமீது மற்றும் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • 24-ந்தேதி முதல் வங்கிகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும்.
    • மின்சாரத்தை மிச்சப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.

    டாக்கா :

    உலகின் பல நாடுகளை போல நம் அண்டை நாடான வங்காளதேசமும் தற்போது மின்சார பற்றாக்குறையால் திணறி வருகிறது.

    இந்நிலையில் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.

    அதன் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரிகளை வாரம் 5 நாட்கள் மட்டும் இயங்க செய்யவும், சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடந்த மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    கூட்டத்துக்குப் பின் இம்முடிவை மந்திரிசபை செயலாளர் கண்டாகேர் அன்வருல் இஸ்லாம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    எப்போதில் இருந்து இந்த முடிவை நடைமுறைக்கு கொண்டுவருவது என கல்வி அமைச்சகம் தீர்மானிக்கும் என்றார் அவர்.

    மேலும், 24-ந்தேதி (நாளை) முதல் அனைத்து அரசு, தன்னாட்சி அலுவலகங்களும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்படும். வங்கிகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும்.

    மின்சார பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும்படி அனைத்து அலுவலகங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று அன்வருல் இஸ்லாம் கூறினார்.

    மின்சாரத்தை மிச்சப்படுத்தும்விதமாக ஏற்கனவே, கடைகள், வணிக வளாகங்களை இரவு 8 மணிக்கு மூடிவிடும்படி வங்காளதேச அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார்.
    • அடுத்த மாதம் 5-ம்தேதி அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

    டாக்கா:

    வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாட்கள் சுற்றுப்பய ணமாக அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத் தில் இந்தியா வருகிறார். அவர் 5-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்

    5-ந்தேதி அவர் டெல்லி யில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப் போது அவர் இரு நாடுகள் இடையேயான வர்த்தகம், எல்லை பிரச்சினை ராணு வம் உள்ளிட்ட பிரச்சினை கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். மேலும் இந்த பயணத்தின் போது இந்திய தலைவர்கள் பலரையும் ஷேக்ஹசீனா சந்திக்க உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்காளதேச அரசு கடந்த 5-ந்தேதி எரிபொருள் விலையை வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக உயர்த்தியது.
    • பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக பஸ் கட்டணம் உயர்ந்துள்ளது.

    டாக்கா:

    வங்காளதேச அரசு கடந்த 5-ந்தேதி எரிபொருள் விலையை வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக உயர்த்தியது. இதில் பெட்ரோல் விலை 51.7 சதவீதம் அதிகரித்தது. டீசல் விலையும் 50 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தது. மேலும் கியாஸ் விலையும் அதிகரித்துள்ளது.

    1971-ம் ஆண்டு வங்காள தேசம் சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது எரி பொருள் விலை உயர்ந்துள்ளது.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்துள்ளதால் பொது மக்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக பஸ் கட்டணம் உயர்ந்துள்ளது. மேலும் விலைவாசியும் அதிகரித்துவிட்டது. இதனால் பொதுமக்கள் திண்டாடி வருகிறார்கள்.

    விலை உயர்வு கடந்த 6-ந்தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த 5-ந்தேதி இரவு பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூட்டம் அதிகரித்தது. இதனால் நெரிசல் ஏற்பட்டது.

    வங்காள தேச பெட்ரோல் கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை பெட்ரோல்-டீசலை குறைவான விலைக்கு விற்றதாகவும், இதனால் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனை ஈடுகட்ட தற்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தியேட்டர் ஊழியர்கள் டிக்கெட் வழங்க மறுத்துவிட்டனர்.
    • முதியவருக்கு சினிமா டிக்கெட் வழங்காததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

    டாக்கா:

    வங்காளதேச நாட்டில் ஸ்டார் சினிபிளக்ஸ் நிறுவனம் நடத்தும் ஒரு சினிமா தியேட்டருக்கு சமன் அலி சர்கார் என்ற முதியவர் படம் பார்க்க சென்றார். அவர் லுங்கி அணிந்து வந்திருப்பதால் தியேட்டர் ஊழியர்கள் டிக்கெட் வழங்க மறுத்துவிட்டனர்.

    இதனால் அவர் படம் பார்க்க முடியாமல் வீடு திரும்பினார்.

    சமன் அலி சர்க்காருக்கு டிக்கெட் வழங்க மறுக்கப்பட்ட சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் சர்ச்சை வெடித்தது. முதியவருக்கு சினிமா டிக்கெட் வழங்காததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

    இதையடுத்து சினி பிளக்ஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்தது. இது தொடர்பாக அந்நிறுவனம் கூறும்போது, எங்கள் நிறுவனம் ஒரு நபர் உடையின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். லுங்கி அணிந்திருப்பதால் ஒருவருக்கு டிக்கெட் வாங்குவதற்கான உரிமையை மறுக்கும் கொள்கைகள் எங்கள் நிறுவனத்தில் இல்லை.

    சமூக ஊடகங்கள் மூலம் பரப்பரப்பாகும் இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமாக தவறாக புரிந்து கொண்டதால் ஏற்பட்டதாக இருக்கலாம். இந்த சம்பவத்தை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம் என்று தெரிவித்தது.

    இதையடுத்து சமன் அலி சர்கார் மற்றும் அவரது குடும்பத்தினர் அதே தியேட்டரில் படம் பார்க்க அழைக்கப்பட்டனர். லுங்கி அணிந்தபடி சமன் அலி சர்கார் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார்.

    • மிர்ஷாராய் மலைப் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது விபத்து.
    • இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே கேட்மேன் கைது செய்யப்பட்டார்.

    வங்காளதேசம் சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள ரெயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற மினி பஸ் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. ரெயிலில் சிக்கிய பஸ் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மினி பஸ்சில் பயணம் செய்தவர்கள், அமன் பஜார் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவார்கள். இவர்கள் மிர்ஷாராய் மலைப் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது விபத்தில் சிக்கி கொண்டனர்.

    உயிரிழந்தவர்களில் ஏழு மாணவர்களும், நான்கு ஆசிரியர்களும் உள்ளடங்குவர். உயிரிழந்தவர்களின் உடல்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டு மாலையில் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிட்டகாங் தீயணைப்புப் பிரிவு ஆலுவலகத்தின் துணை இயக்குநர் அனிசுர் ரஹ்மான் தெரிவித்தார்.

    இந்த விபத்து தொடர்பாக ரெயில்வே கேட்மேன் கைது செய்யப்பட்டார்.

    ×