search icon
என் மலர்tooltip icon

    சீனா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • F51 கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
    • சவுதி அரேபியாவின் ராதி அலி அல்ஹர்தி 23.77 மீட்டர் தூரம் எறிந்து 4வது இடத்தைப் பிடித்தார்.

    சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நேற்று முதல் பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வரும் 28ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டில் இந்தியாவில் இருந்து 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், பாரா ஆசிய போட்டியில் பதக்க வேட்டையை இந்தியா தொடங்கியுள்ளது. இதில், ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ் குமார் தங்கம் வென்றுள்ளார். தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம், ராம் சிங் வெண்கலமும் வென்றார்.

    ஆடவர் உயரம் தாண்டுதலில் 3 பதக்கங்களையும் இந்தியா வென்று அசத்தியது. இதைதொடர்ந்து, ஆடவர் F51 கிளப் எறிதல் போட்டியிலும் இந்தியா தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

    அதன்படி, F51 கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா தங்கம் வென்று அசத்தியுள்ளார். பிரணவ் சூர்மா 30.01 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். தொடர்ந்து, தரம்பிட் 28.76 மீட்டரும், அமித் குமர் 26.93 மீட்டரும் எறிந்து வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

    இந்த போட்டியில் மொத்தம் 4 போட்டியாளர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். சவுதி அரேபியாவின் ராதி அலி அல்ஹர்தி 23.77 மீட்டர் தூரம் எறிந்து 4வது இடத்தைப் பிடித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாரா ஆசிய போட்டியில் பதக்க வேட்டையை இந்தியா தொடங்கியுள்ளது.
    • ஆடவர் உயரம் தாண்டுதலில் 3 பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளது இந்தியா.

    சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நேற்று முதல் பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வரும் 28ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டில் இந்தியாவில் இருந்து 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், பாரா ஆசிய போட்டியில் பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது இந்தியா.

    இதில், ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ் குமார் தங்கம் வென்றுள்ளார். தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம், ராம் சிங் வெண்கலம் வென்றார்.

    ஆடவர் உயரம் தாண்டுதலில் 3 பதக்கங்களையும் இந்தியா வென்று அசத்தியுள்ளது.

    • அரசு அனுமதி பெற்றுத்தான் கிராஃபைட் ஏற்றுமதி இனி நடைபெற முடியும்
    • 65 சதவீத கிராஃபைட் சீனாவிலிருந்துதான் கிடைக்கிறது

    செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு அவசிய தேவையான செமிகண்டக்டர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா பலவித கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இத்துறையில் சீனா நுழைவதை தடுக்கும் விதமாக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனையடுத்து, மின்சார வாகனங்கள், மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான 'கிராஃபைட்', தன் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு செல்வதை தடுக்கும் விதமாக, சீனா, அதன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    "தேசிய பாதுகாப்பு மற்றும் தேச நலனுக்காக 2 வகையான கிராஃபைட்களை ஏற்றுமதி செய்ய சீன ஏற்றுமதியாளர்கள் இனி அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். இந்த கொள்கை மாற்றம் எந்த குறிப்பிட்ட தேசத்தையும் குறி வைத்து கொண்டு வரப்படவில்லை" என சீனாவின் வர்த்தக துறை அறிவித்துள்ளது.

    அரசு அனுமதியை கோரும் போது எந்த நாடுகளுக்கு அவை செல்கின்றன என்பதை சீனா தீவிரமாக கண்காணிக்க முடியும்.

    வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகன உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. அவற்றில் உள்ள பேட்டரிகளுக்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான கிராஃபைட்டின் உற்பத்தி தன் வசம் உள்ளதால் சீனா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. உலகிற்கு தேவைப்படும் கிராஃபைட் உற்பத்தியில் 65 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு சீனாவிலிருந்துதான் கிடைக்கிறது.

    வேறு நாடுகளில் கிராஃபைட் கிடைக்கும் வரை சீனாவின் இந்த நடவடிக்கை கண்டிப்பாக மாற்று எரிசக்தி துறையில் அந்நாட்டின் ஆதிக்கம் அதிகரிக்கவே வழி செய்யும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று சீனா சென்றடைந்தார்.
    • சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்தார்.

    பீஜிங்:

    சீனா தனது பெல்ட் ரோடு திட்டத்திற்கு 130 நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்று அழைப்பு விடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக,

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று சீனா சென்றடைந்தார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சீனா சென்றுள்ளார்.

    இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.

    ரஷியா, சீனா இடையிலான உறவை வலுப்படுத்தும் விதமாக, அங்கு நடைபெறும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டிலும் அதிபர் புதின் பங்கேற்றார்.

    அப்போது பேசிய அதிபர் புதின், பெல்ட் ரோடு திட்டத்தை சீனா வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. ரஷியா அதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது என தெரிவித்தார்.

    உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பின் ரஷியாவை பல்வேறு நாடுகள் தனிமைப்படுத்தி இருக்கும் நிலையில், புதின்-ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

    • சீனாவின் ஹாங்சோ பகுதியில் உள்ள கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டி பகுதியில் தான் குடியிருப்பு எஸ் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.
    • 10 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்பு கட்டப்பட்டபோது அங்கு 20 ஆயிரம் பேர் வசித்தனர்.

    உலக மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவில் பிரமாண்டமான பல கட்டிடங்கள் உள்ளன. அந்த வகையில் 36 மாடிகளை கொண்ட ஒரு பிரமாண்ட குடியிருப்பு பற்றிய தகவல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

    காரணம், இந்த பிரமாண்ட குடியிருப்பில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனராம். சீனாவின் ஹாங்சோ பகுதியில் உள்ள கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டி பகுதியில் தான் இந்த குடியிருப்பு எஸ் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குடியிருப்பு கட்டப்பட்டபோது அங்கு 20 ஆயிரம் பேர் வசித்தனர். தற்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    இவ்வளவு பேர் ஒரே குடியிருப்பில் வசித்தாலும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த குடியிருப்புக்குள்ளேயே இருப்பதுதான் அனைவரையும் வியக்க வைக்கிறது.

    இந்த குடியிருப்பின் பெரிய உணவு விடுதி, நீச்சல் குளம், சலூன், பல்பொருள் அங்காடி மற்றும் கம்ப்யூட்டர் சென்டர் என பல்வேறு வசதிகளும் உள்ளது.

    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று தலைநகர் பீஜிங் சென்றடைந்தார்.
    • அங்கு நடைபெறும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டிலும் அதிபர் புதின் பங்கேற்கிறார்.

    பீஜிங்:

    சீனா தனது பெல்ட் ரோடு திட்டத்திற்கு 130 நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்று அழைப்பு விடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று சீனா சென்றடைந்தார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் சீனா சென்றுள்ளார்.

    ரஷியா, சீனா இடையிலான உறவை வலுப்படுத்தும் விதமாக, அங்கு நடைபெறும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டிலும் அதிபர் புதின் பங்கேற்கிறார்.

    உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பின் ரஷியாவை பல்வேறு நாடுகள் தனிமைப்படுத்தி இருக்கும் நிலையில், புதின்-ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆன்டனி பிளிங்கன் கடந்த வாரம் சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யீவுடன் பேசினார். அப்போது சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல்-ஹமாஸ் போர் 5-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது
    • இந்தியா இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளது

    கடந்த சனிக்கிழமை, பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியதில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள். இதை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர் தொடர்ந்திருக்கிறது.

    தற்போது 5-வது நாளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஹமாஸ் அமைப்பை கத்தார், ஈரான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் ஆதரிக்கின்றன.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என தெரிவித்தார். ஆனால், இந்தியாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்திருக்கிறது.

    இந்நிலையில், சீனா இப்போரில் யாரை ஆதரிக்கிறது என இதுவரை தெளிவாக கூறவில்லை.

    "இரு தரப்பும் அமைதி காக்க வேண்டும். பகைமையை கைவிட்டு பொது மக்களை காக்கவும், தற்போதைய சூழ்நிலை மேலும் மோசமடையாமல் கண்காணிக்கவும் இரு தரப்பையும் கேட்டு கொள்கிறோம். அனைத்து விதமான வன்முறையையும் பொதுமக்களின் மீதான தாக்குதலையும் கண்டிக்கிறோம்" என சீனா அறிக்கை வெளியிட்டு நிறுத்தி கொண்டது.

    ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பினரின் பெயரையும் குறிப்பிடாமல் ஒரு தெளிவற்ற அறிக்கையை வெளியிட்டதன் மூலம் சீனா நடுநிலை வகிக்க முயல்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • அரசாங்கத்தின் முரண்பாடான சில கொள்கைகளே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
    • கிராமப்புற இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாதது.

    பீஜிங்:

    உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு வேலை இல்லாமல் தவிப்பதாக நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக்கழகம் தனது ஆய்வறிக்கையில் கூறி உள்ளது. இது கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட சுமார் இரு மடங்கு அதிகம் ஆகும்.

    இதற்கு அரசாங்கத்தின் முரண்பாடான சில கொள்கைகளே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அதில் ஒன்று கிராமப்புற இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாதது. மற்றொன்று ஒரே குழந்தை திட்டம். இது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னரே அரசால் கைவிடப்பட்டாலும் அதன் தாக்கம் மக்களிடம் இன்னும் உள்ளது.

    சீனாவில் ஏற்பட்டுள்ள இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் உலகளாவிய வினியோக சங்கிலியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மற்ற நாடுகளின் வெற்றிகரமான முயற்சிகளில் இருந்து சீனா உரிய முடிவை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 5 ஓவரில் 48 ரன்கள் எடுத்தது.
    • மழை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வங்காளதேசம் எட்டியது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்திருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்ததால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்காளதேசம் 5 ஓவரில் 65 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஆடிய வங்காளதேசம் கடைசி ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்காளதேச அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.

    • வில்வித்தையில் இந்தியா இன்று 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வென்றது.
    • பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடித்து வருகிறது.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் 661 பேர் கலந்து கொண்டனர். 35 விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    நேற்றைய 14-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் ஆக மொத்தம் 95 பதக்கங்களைப் பெற்று பதக்க பட்டியலில் தொடர்ந்து 4-வது இடத்தில் இருந்தது. நேற்று ஒரே நாளில் 9 பதக்கங்களைப் பெற்றது.

    ஆசிய விளையாட்டு போட்டியின் 15-வது நாளான இன்று காலை இந்தியாவுக்கு மேலும் 5 பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் 100 பதக்கங்களைக் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தது.

    3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆக மொத்தம் 5 பதக்கம் கிடைத்தது. இதை தொடர்ந்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 100-யை தொட்டது.

    2018-ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 70 பதக்கம் வென்றதே சாதனையாக இருந்தது. கடந்த 4-ம் தேதி இதை முந்தி இந்தியா சாதனை படைத்து இருந்தது. தற்போது 100 பதக்கங்களைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.

    பெண்கள் கபடியில் இன்று இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. இறுதிப் போட்டியில் சீன தைபேயை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

    இறுதியில் இந்தியா 26-25 என்ற புள்ளிக் கணக்கில் சீன தைபேயை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை பெற்றது. முதல் பாதியில் இந்தியா 14-9 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-வது பாதி ஆட்டத்தில் சீன தைபே சவால் கொடுத்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆண்கள் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஈரானை எதிர்கொள்கிறது.

    முன்னதாக, வில்வித்தையில் 2 தங்கமும், ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் கிடைத்தது.

    பெண்கள் காம்பவுண்ட் தனிநபர் வில்வித்தை போட்டியில் ஜோதி சுரேகா தங்கம் வென்றார். அவர் இறுதிப் போட்டியில் 149-145 என்ற புள்ளிக்கணக்கில் தென் கொரியா வீராங்கனை சேவோனை வீழ்த்தினார்.

    இதே இந்தியாவுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது. வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் 146-140 என்ற கணக்கில் இந்தோனேசியாவை சேர்ந்த ரைத் ஜில்காட்டியை தோற்கடித்தார்.

    ஆண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கமும், வெள்ளியும் கிடைத்தது. இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் ஒஜாஸ் பிரவின்-அபிஷேக் வர்மா மோதினார்கள்.

    இதில் ஒஜாஸ் 149-147 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கம் வென்றார். அபிஷேக் வர்மாவுக்கு வெள்ளி கிடைத்தது.

    வில்வித்தை போட்டியில் மட்டும் இந்தியாவுக்கு 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 9 பதக்கம் கிடைத்தது.

    பெண்கள் கபடி பிரிவில் பெற்ற தங்கம் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 100 ஆக அதிகரித்தது. பிற்பகலில் மேலும் பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரிக்கும்.

    நாளையுடன் ஆசிய விளையாட்டு போட்டி முடிவடைகிறது. கடைசி நாளில் கராத்தே போட்டிகள் மட்டும் நடைபெறுகிறது.

    • வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் காம்பவுண்டு பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் பெற்றது.
    • இதே பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வெள்ளி வென்றார்.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    நேற்று 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றது.

    இந்நிலையில், இன்று காலை வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் காம்பவுண்டு பிரிவில் இந்தியா தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றது.

    ஏற்கனவே, வில்வித்தை பெண்கள் காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்தியா தங்கமும், வெண்கலமும் வென்றுள்ளது.

    இந்திய அணி இதுவரை 24 தங்கம், 35வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 99 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    • வில்வித்தை பெண்கள் ஒற்றையர் காம்பவுண்டு பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் பெற்றது.
    • ஏற்கனவே வில்வித்தையில் இந்தியாவின் அதிதி கோபிசந்த் சுவாமி வெண்கலம் வென்றார்.

    பீஜிங்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    நேற்று 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றது.

    இந்நிலையில், இன்று காலை வில்வித்தை காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம் கொரிய வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

    காம்பவுண்டு தனிநபர் பிரிவு, பெண்கள் காம்பவுண்டு மற்றும் காம்பவுண்டு கலப்பு அணி ஆகியவற்றில் ஜோதி சுரேகா வெண்ணாம் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே, வில்வித்தை காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்தியாவின் அதிதி கோபிசந்த் சுவாமி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இந்திய அணி இதுவரை 23 தங்கம், 34 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

    ×