search icon
என் மலர்tooltip icon

    சீனா

    • துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் தோமர் வெண்கலம் வென்றார்.
    • சீனா தங்கமும், கொரியா வெள்ளிப் பதக்கமும் வென்றது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய இதுவரை 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் பிரதாப் சிங் தோமர் 228.8 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.

    சீனா தங்கமும், கொரியா வெள்ளிப் பதக்கமும் வென்றது.

    இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என 9 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • துடுப்பு படகு போட்டியில் இந்திய ஆண்கள் அணி இரண்டாவது வெண்கலம் வென்றது.
    • சீனா தங்கமும், உஸ்பெகிஸ்தான் வெள்ளியும் வென்றது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய இதுவரை 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இன்று நடைபெற்ற துடுப்பு படகுப் போட்டியில் ஆண்கள் நாற்கர ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய வீரர்கள் இரண்டாவது வெண்கலம் வென்றனர். இந்தியாவின் சத்னம் சிங், பர்மிந்தர் சிங், ஜாகர் கான், சுக்மீத் ஆகியோர் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    சீனா தங்கமும், உஸ்பெகிஸ்தான் வெள்ளியும் வென்றது.

    இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 8 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • துடுப்பு படகு போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெண்கலம் வென்றது.
    • உஸ்பெகிஸ்தான் தங்கப் பதக்கமும், சீனா வெள்ளிப் பதக்கமும் வென்றது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய இதுவரை 6 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இன்று நடைபெற்ற துடுப்பு படகு போட்டியில் ஆண்கள் காக்லெஸ் 4 பிரிவில் இந்திய வீரர்கள் வெண்கலம் வென்றனர்.

    ஜஸ்விந்தர் சிங், பீம்சிங், புனித்குமார் மற்றும் ஆஷிஷ் ஆகியோர் 3ம் இடம் பிடித்து வெண்கலம் வென்றனர்.

    உஸ்பெகிஸ்தான் தங்கப் பதக்கமும், சீனா வெள்ளிப் பதக்கமும் வென்றது.

    இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • துப்பாக்கிச் சுடுதலில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றது.
    • கொரியா வெள்ளிப் பதக்கமும், சீனா வெண்கலப் பதக்கமும் வென்றது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய இதுவரை 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய ஆண்கள் அணி சார்பில் திவ்யான்ஷிங் பன்வார், ருத்ரான்க்ஷ் பாட்டீல், பிரதாப் சிங் தோமர் ஆகியோர் 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று அசத்தினர்.

    கொரியா வெள்ளிப் பதக்கமும், சீனா வெண்கலப் பதக்கமும் வென்றது.

    இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 6 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • 9 குழந்தைகள் அந்த பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் பிறந்தவை என பதிவாகியிருந்தது
    • 2018 வருடம் முதல் 2 வருடங்களாக வயிற்று பகுதி வீங்கி கொண்டே வந்தது

    சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது.

    அதில் வழக்கத்திற்கு மாறாக மிக பெரும் வயிற்றுடன் உள்ள ஒரு பெண் காணப்பட்டார். அவர் கர்ப்பிணி என்றும் அவர் 9 குழந்தைகளை சுமக்கிறார் என்றும் அந்த வீடியோவுடன் ஒரு குறுஞ்செய்தி பதிவாகியிருந்தது. அதே வீடியோவில் சிறிது நேரம் கழித்து வரும் காட்சியில் 9 பிறந்த குழந்தைகள் காணப்பட்டனர். அக்குழந்தைகள் அந்த பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் பிறந்தவை என கூறி, தாய்மையை போற்றிய ஒரு குறுஞ்செய்தியும் பதிவாகியிருந்தது.

    ஆனால், ஆய்வில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

    சீனாவின் அன்ஷுன் (Anshun) பிராந்தியத்தில் உள்ள ஸாங்கி (Songqi) டவுனிற்கு அருகே உள்ளது டாசி (Dazhi) கிராமம். இங்கு வசித்து வந்தவர் ஹுவாங் குவோக்சியன் (Huang Guoxian). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு 2018 வருடம் முதல் 2 வருடங்களாக வயிற்று பகுதி வீங்கி கொண்டே வந்தது. தீவிர மருத்துவ பரிசோதனையில் இவருக்கு சினைப்பை புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது வயிற்றில் இருந்த நோய் கட்டிகள் அகற்றப்பட்டு, தேங்கிய திரவங்கள் வெளியேற்றப்பட்டன.

    2020ல் இவரது நோய்க்கான சிகிச்சைக்கு மக்களிடம் பண உதவி கேட்டு இவர் சார்பில் வெளியிடப்பட்ட வீடியோவை பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தைகள் உள்ள வேறு ஒரு வீடியோவுடன் இணைத்து தவறாக பரப்பியுள்ளனர்.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • இதில் இந்தியாவின் ஸ்மித் நாகல் 6-0, 6-0 என்ற கணக்கில் வென்றார்.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்மித் நாகல், மக்காவ் நாட்டின் மார்கோ லியூங்குடன் மோதினார்.

    இதில் ஸ்மித் நாகல் 6-0, 6-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி உஸ்பெகிஸ்தானுடன் மோதியது.
    • இதில் 16- 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி உஸ்பெகிஸ்தான் அணியுடன் மோதியது.

    ஆரம்பம் முதலே இந்திய அணியின் அதிரடியாக ஆடி கோல்களை போட்டனர். முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 7-0 என முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 16-0 என அபார வெற்றி பெற்றது.

    லலித் உபாத்யாய், வருண் குமார் ஆகியோர் தலா 4 கோல்களும், மன்தீப் சிங் 3 கோல்களும், அபிஷேக், அமித் ரோஹிதாஸ், ஷம்ஷெர் சிங், சஞ்சய் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

    • துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி 3 பதக்கங்கள் வென்றுள்ளது.
    • துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி 2 பதக்கங்களை வென்றுள்ளது.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. 8 வீரர்களுக்கான துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி வென்றுள்ளது. 5.43 நிமிடங்களில் இலக்கை கடந்து இந்தியா பதக்கம் வென்றுள்ளது.

    இதேபோல், துடுப்பு படகு போட்டியில் இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. ஆண்கள் இணை துடுப்பு படகு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பாபு பால் மற்றும் லெக் ராம் ஜோடி வெண்கல பதக்கம் வென்றது. 6:50.41 நேரத்தில் இலக்கை கடந்து இந்திய அணி வெண்கலம் வென்றது.

    துடுப்பு படகு போட்டியின் லைட் வெயிட் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் மற்றும் அரவிந்த் சிங்; வெள்ளி பதக்கம் வென்றது.

    இந்திய அணி இதுவரை மொத்தம் 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது.

    • துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ரமிதா தனிநபர் பிரிவு மற்றும் குழு பிரிவில் பதக்கம் வென்றார்.
    • துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி 3 பதக்கங்கள் வென்றுள்ளது.

    ஹாங்சோவ்:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று தொடங்கியது. இப்போட்டி அக்டோபர் 8-ம் தேதி வரை நடக்கிறது.

    இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா தனிநபர் பிரிவு மற்றும் குழு பிரிவில் 2 பதக்கங்களை வென்று அசத்தினார்.

    பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் ரமிதா மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதேபோல், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்ஷி  அணிவெள்ளி வென்றது.

    • ஆசிய விளையாட்டு போட்டிகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அங்கீகரித்து உள்ளது.
    • ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை 672 பதக்கங்களை வென்று இருக்கிறது.

    ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951 முதல் நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு முதன்முதலாக உருவாக்கப்பட்ட பிறகு இந்த தொடர் நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டிகள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த விளையாட்டுகள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியா 672 பதக்கங்களை வென்று மொத்த வெற்றியாளர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

     

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 19-வது ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த நிலையில், 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளின் துவக்க விழா சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாக துவங்கியது. துவக்க விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் விழா துவங்கியது. இதைத் தொடர்ந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகளின் தேசிய கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. ஆசிய விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரம் விழா கோலம் பூண்டுள்ளது.

    • எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் 3 வயது கொண்ட சீன சிறுவர்கள் 2 பேரின் சமையல் திறன் பயனர்களை வியக்க வைத்துள்ளது.
    • நெய்ஜியாங் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சமையல் பாத்திரத்தை பெரியவர்களை போன்று கையாள்கின்றனர்.

    சமூக வலைதளங்களில் எண்ணற்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட சில வீடியோக்கள் பயனர்களை அதிகம் ரசிக்க செய்யும்.

    அந்த வகையில் தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் 3 வயது கொண்ட சீன சிறுவர்கள் 2 பேரின் சமையல் திறன் பயனர்களை வியக்க வைத்துள்ளது. நெய்ஜியாங் பகுதியை சேர்ந்த அந்த சிறுவர்கள் சமையல் பாத்திரத்தை பெரியவர்களை போன்று கையாள்கின்றனர்.

    அவர்கள் ப்ரைடு ரைஸ் செய்வது, அதனுடன் முட்டைகளை சேர்த்து கிளறுவது என சமையலில் அசத்தும் காட்சிகளை பார்த்த பயனர்கள் அவர்களை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • இன்று காலை 7.30 மணிக்கு பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல் நிலை ஆட்டம் இந்தியா- நேபாளம் இடையே நடைபெற்றது.
    • ஐந்து போட்டிகள் கொண்ட முதல் நிலை சுற்றில், இந்தியா மற்றும் நேபாள வீரர்கள் விளையாடினர்.

    19வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று சீனாவின் ஹாங்சோவ் நகரில் அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது. இன்று தொடங்கி அக்டோபர் மாதம் 8ம் தேதி வரை பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன.

    இருப்பினும், கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டுவிட்டது.

    இன்று மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறும் நிலையில், இன்று காலை 7.30 மணிக்கு பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல் நிலை ஆட்டம் இந்தியா- நேபாளம் இடையே நடைபெற்றது.

    ஐந்து போட்டிகள் கொண்ட முதல் நிலை சுற்றில், இந்தியா மற்றும் நேபாள வீரர்கள் விளையாடினர்.

    இதில், முதல் சுற்றில் நேபாளத்திற்கு எதிராக 11-1, 11-6, 11-8 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

    இதேபோல் 2வது சுற்றில் விளையாடிய இந்திய வீராங்கனை முகர்ஜி அய்ஹிகா 11-3, 2வது செட்டை11-7, 3வது செட்டை 11-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    நேபாளம் அணிக்கு எதிராக 2- 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை இருந்த நிலையில், 3வது சுற்றிலும் 11-1, 11-5, 11-2 என்ற கணக்கில் போட்டியை இந்தியா கைப்பற்றியது.

    இதன்மூலம், ஆசிய விளையாட்டு 2023- பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல்நிலை ஆட்டத்தில் நேபாள அணியை இந்தியா வீழ்த்தியது.

    இந்நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது இந்தியா.

    ×