search icon
என் மலர்tooltip icon

    சீனா

    • கணவர் தன்னுடன் அடிக்கடி சண்டைபோடுகிறார் என கூறி சென் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
    • 'எனது தவறின் விளைவுகளை நான் புரிந்துகொண்டேன். இனி இந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டேன்'

    திருமணங்களின் எண்ணிக்கையை விட விவகாரத்துக்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் சீனாவில் நடந்த சம்பவம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சீனாவை சேர்ந்த லீ [Li] மற்றும் சென் [Chen], ஆகிய இருவர் 20 வருடங்களாக கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது கணவர் தன்னுடன் அடிக்கடி சண்டைபோடுகிறார் என கூறி சென் சமீபத்தில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

    ஆனால் கணவர் லீ மனைவியை பிரிய துளியும் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்டது சிறிய பிரச்சனைதான் என்றும் அவர்கள் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்றும் அறிவுரை கூறி நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது. ஆனால் தனக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டும் என்று மனைவி சென் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

     

    இதுதொடர்பான விசாரணைக்கு கணவன் மனைவி ஆகிய இருவரும் நீதிமன்றத்துக்கு வந்த நிலையில், விசாரணையை நடக்கவிடாமல் செய்ய தனது மனைவி கணவர் துண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு நீதிமன்ற கட்டடத்தை விட்டு வெளியே ஓட முயற்சித்துள்ளார்.

    மனைவியை கையில் ஏந்திக்கொண்டு சத்தமாக கூச்சலிட்டபடி சென் நீதிமன்றத்தை விட்டு ஓட முயற்சித்ததை பார்த்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். கணவனின் காதலை பார்த்து வியந்த நீதிபதி, இனிமேல் மனைவியிடம் சண்டை போட மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்க உத்தரவிட்டுள்ளனர். அதனபடி, 'எனது தவறின் விளைவுகளை நான் புரிந்துகொண்டேன். இனி இந்த தவறை ஒருபோதும் செய்யமாட்டேன்' என்று கணவர் லீ  எழுதிக்கொடுத்துள்ளார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 4 வீராங்கனையான கோகோ காப் காலிறுதிக்கு முன்னேறினார்.

    பீஜிங்:

    பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றுப் போட்டியில் நம்பர் 4 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை ஒசாகா 6-3 என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக அடுத்த செட்டை கோகோ காப் 6-4 என கைப்பற்றினார்.

    அப்போது ஒசாகாவுக்கு தசை பிடிப்பு ஏற்பட்டதால் போட்டியில் இருந்து விலகினார். இதனால் கோகோ காப் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.

    நாளை மறுதினம் நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் கோகோ காப், உக்ரைன் வீராங்கனையை எதிர்கொள்கிறார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், சீனாவின் யுன்சகோடே பு உடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சின்னர் 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சின்னர், கார்லோஸ் அல்காரஸ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 2 வீராங்கனையான பெகுலா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 2 வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசாவுடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய படோசா 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    இவர் நாளை மறுதினம் நடைபெறும் காலிறுதியில் சீனாவின் ஷாங் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 2 வீரரான அல்காரஸ் அரையிறுதியில் வென்றார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் நம்பர் 2 வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், நம்பர் 3 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ் உடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் மெத்வதேவை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

    • சீனாவில் லீ என்ற பெண் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தது தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.
    • வருக்கு யூட்ரஸ் டைடெல்ஃபிஸ் {Uterus didelphys} என்ற பாதிப்பு உள்ளது.

    சீனாவில் லீ என்ற பெண் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தது தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. இதில் என்ன ஸ்பெஷல் என்று நீங்க கேட்கலாம்.

    அவருக்கு உலகத்திலயே அரிய வகையான மருத்துவ நிலை இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு யூட்ரஸ் டைடெல்ஃபிஸ் {Uterus didelphys} என்ற பாதிப்பு உள்ளது. இந்த நிலை உலகிலேயே வெறும் 0.3 சதவீத பெண்களுக்கு மட்டுமே ஏற்படும்.

    இந்த பாதிப்பு ஏற்பட்ட பெண்களுக்கு இரு கருப்பை இயற்கையாகவே இருக்கும். இதனால் லீ என்ற பெண்ணுக்கு இரு கருப்பையில் ஒரே சமயம் கருவுற்று, அவற்றில் குழந்தைகள் பிறந்துள்ளன. ஒரு கருப்பையில் ஆண் குழந்தையும் {3.3 கிலோ} மற்றொரு கருப்பையில் பெண் குழந்தையும் {2.4 கிலோ} எடையில் மிக ஆராக்கியமாக பிறந்துள்ளன.

    இதைப்பற்றி மருத்துவர் கூறும்போது "இந்த நிகழ்வு கோடியில் ஒருவருக்கு தான் நடக்கும். அதுவும் இயற்கை முறையில் கருத்தரித்த பெண் இரண்டு கருப்பையில் கர்ப்பம் ஆவது மிகவும் அரிது," என கூறியுள்ளார். இந்த நிகழ்வு சீனா மட்டுமின்றி சர்வதேச மருத்துவ உலகில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 2 வீரரான அல்காரஸ் காலிறுதிக்குள் நுழைந்தார்.

    பீஜிங்:

    பல முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த கார்லஸ் அல்காரஸ், டச்சு வீரரான கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.

    இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இவர் நாளை நடைபெறும் காலிறுதியில் கரேன் கச்சனோவ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

    மற்றொரு போட்டியில் ரஷிய வீரர் காரென் கச்சனாவ், அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோவை எதிர்கொண்டார். இதில் கச்சனாவ் 7-6 (7-4), 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீரரான சின்னர் காலிறுதிக்குள் நுழைந்தார்.

    பீஜிங்:

    சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், ரஷிய வீரர் ரோமன் சபியுலின் உடன் மோதினார். இதில் 2-6 என முதல் செட்டை இழந்த சின்னர், அடுத்த இரு செட்களையும் 6-2, 6-3 என கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் நம்பர் 3 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் அட்ரியன் மன்னார்னினோ உடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 7-6 (8-6), 6-2 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    தெற்கு சீனாவின் நான்னிங் நகரில் கழிவுநீர் குழாய்களை பதிப்பதற்காக பணியாளர்கள் அழுத்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செப்டிக் டேங்க் குழாய் திடீரென வெடித்துள்ளது. குழாய் வெடித்ததில் 33 அடி உயரத்திற்கு எழுந்த மலக்கழிவுகள் தூக்கி வீசப்பட்டு, சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது படிந்தது.

    இந்த கழிவு சாலையில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகளை முழுவதுமாக நனைத்தது. அதிர்ஷ்டவசமாக காரில் சென்றவர்கள் மனித கழிவுகளில் நனையாமல் தப்பினர். ஆனால் வேகமாக கழிவுகள் வந்து அடித்ததில் காரின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து அப்பகுதியை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இச்சம்பவத்தில் சேதமடைந்த காரின் டிரைவர் ஒருவர், எனது கார் மஞ்சள் நிறத்தில் உள்ளது. அது நாற்றம் வீசுகிறது. என்னால் அதை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்றார். மற்றொருவர் கோபமாக, "நான் பூவில் நனைந்திருக்கிறேன்" என்றார்.

    இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • சீன அரசாங்கம் பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
    • ஒவ்வொரு வகுப்புக்கு பின்னரும் விடப்படும் இடைவெளி சமீபத்தில் 15 நிமிடமாக உயர்த்தப்பட்டது.

    பீஜிங்:

    இன்றைய இளம் தலைமுறையினர் ஆன்லைன் விளையாட்டுகளையே பெரிதும் விரும்புகின்றனர். வெளியில் சென்று விளையாடாமல் இருப்பதால் அவர்களுக்கு கண் பாதிப்பு, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    இதனை களைய சீன அரசாங்கம் பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

    அதன்படி மாணவர்கள் தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் கட்டாயம் பங்கு பெற வேண்டும். மேலும் ஒவ்வொரு வகுப்புக்கு பின்னரும் விடப்படும் இடைவெளி சமீபத்தில் 15 நிமிடமாக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மாணவர்களின் கல்வி மற்றும் உடல்நலம் மேம்படும் என சீன கல்வித்துறை துணை மந்திரி வாங் ஜியாயி தெரிவித்துள்ளார்.

    • ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
    • இதில் இந்திய இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

    பீஜிங்:

    ஹாங்சோ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இறுதிப்போட்டி நடந்தது.

    இதில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் - விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி, ஜெர்மனியின் கான்ஸ்டன்டைன்-ஹென்ரிக் ஜெபென்ஸ் ஜோடியுடன் மோதியது.

    இதில் முதல் செட்டை இந்திய ஜோடி 4-6 என இழந்தது. ஆனாலும் சுதாரித்த இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 10-7 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
    • இதில் யூகி பாம்ப்ரி ஜோடி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது.

    பீஜிங்:

    செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதிப்போட்டி நடந்தது.

    இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி, பிரான்சின் சாடியோ டொம்பியா-பேபியன் ரிபோல் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் பாம்ப்ரி-ஒலிவெட்டி ஜோடி 4-6, 6-4, 4-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

    ×