என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சீனா
- செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.
- இதில் யூகி பாம்ப்ரி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பீஜிங்:
செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று அரையிறுதி போட்டிகள் நடந்தன.
இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி, பிரேசிலின் ரப்லேல் மாடோஸ்-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடியுடன் மோதியது.
இதில் பாம்ப்ரி-ஒலிவெட்டி ஜோடி 6-3, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பாம்ரி ஜோடி, பிரான்சின் சாடியோ டொம்பியா-பேபியன் ரிபோல் ஜோடியை எதிர்கொள்கிறது.
- கடந்த ஜனவரியில் வெளியான ஆவணப்படம் மூலமே ஜாங் யாங் பற்றிய உண்மைகள் வெளிப்பட்டது.
- 52 வயதான அவர் 58 ஆண் துணை அதிகாரிகளுடன் விவகாரங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சீனாவில் பெண் அதிகாரிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ரூ,1.18 கோடி) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கைதான ஜாங் யாங், தனது தோற்றத்திற்காக "அழகான கவர்னர்" என்று செல்லப்பெயர் பெற்றார். கியானன் மாகாணத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) ஆளுநராகவும் துணை செயலாளராகவும் பணியாற்றினார். இந்நிலையில், அவர் உடன் பணிபுரியும் 58 ஆண் துணை அதிகாரிகளுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும், கிட்டத்தட்ட 60 மில்லியன் யுவான் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
52 வயதான அவர் 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இறுதியில் தேசிய மக்கள் காங்கிரஸில் (NPC) துணை பதவிக்கு உயர்ந்தார். விவசாயிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டவராக இருந்ததால் பிரபலமாக அறியப்பட்டார். அதேபோல் உதவி தேவைப்படும் வயதானவர்களுக்கு ஆதரவாக தனது சொந்த பணத்தை செலவழித்தார் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஜனவரியில் வெளியான ஆவணப்படம் மூலமே ஜாங் யாங் பற்றிய உண்மைகள் வெளிப்பட்டது. அதில் ஜாங் லஞ்சம் பெற்றதாகவும், தனது விருப்பமான நிறுவனங்களை தனது பதவியைப் பயன்படுத்தை லாபகரமான ஒப்பந்தங்களை பெற்றுத்தந்ததாகவும் கூறப்பட்டடது. மேலும் தன்னுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்த ஒரு தொழிலதிபருக்கு உயர் தொழில்நுட்ப தொழிற்பேட்டையில் நிலத்தை மேம்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.
மேலும், 52 வயதான அவர் 58 ஆண் துணை அதிகாரிகளுடன் விவகாரங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரால் பெற்ற பலன் காரணமாக சிலர் அவரது காதலராகத் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது, மற்றவர்கள் அவருடைய அதிகாரத்திற்கு பயந்து தயக்கத்துடன் உறவு கொண்டதாகவும் கூறப்படுகிறது.
- ஷான்வேய் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
- சில பார்வையாளர்கள் தங்களுக்கான கட்டணத்தை திருப்பித் தர வேண்டும் என்று முறையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
பாண்டாக்களின் பூமியாக கருதப்படுகிறது சீனா. ஆனால் அங்கு நிஜ பாண்டாக்களுக்குப் பதிலாக நாய்களுக்கு வர்ணம் பூசி கரடியாக்கி காட்சிக்கு வைத்த வினோதம் நிகழ்ந்துள்ளது.
ஷான்வேய் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பார்வைக்கு விடப்பட்டிருந்த பாண்டாக்களில் ஒன்று நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு மூச்சிரைக்கும் காட்சியும், திடீரென நாய்போல குரைக்கத் தொடங்கியதும் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
அப்போதுதான் அது வர்ணம் பூசப்பட்ட நாய் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த கூண்டில் இருந்த நாய்க் கரடிகளை வீடியோவாக எடுத்து பகிர்ந்து வைரலாக்கினார்கள். அது உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது. அதன்பிறகு பூங்கா நிர்வாகம் நாய்களுக்கு பெயிண்ட் பூசிய உண்மையை ஒப்புக்கொண்டது. சில பார்வையாளர்கள் தங்களுக்கான கட்டணத்தை திருப்பித் தர வேண்டும் என்று முறையிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
NEW: China zoo forced to admit the truth after one of their "pandas" started panting and barking.
— Collin Rugg (@CollinRugg) September 19, 2024
The Shanwei zoo admits they painted dogs white and black to make them look like pandas.
The zoo initially tried claiming that the dogs were a unique breed of pandas called… pic.twitter.com/MMoQLD7zuR
- சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பன்சோத் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியுடன் மோதினார்.
இதில் பன்சோத் 10-21, 16-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பன்சோத் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஸ்காட்லாந்து வீராங்கனை கில்மோரை எதிர்கொண்டார்.
இதில் பன்சோத் 21-17, 19-21, 21-16 என்ற கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் பன்சோத், ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியுடன் மோதுகிறார்.
- செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை பெற்று அப்பெண் கர்ப்பம் தரித்துள்ளார்.
- நாயின் உரிமையாளர் மீது அப்பெண் வழக்கு தொடர்ந்தார்.
சீனாவில் லீ என்பவரின் நாய், 41 வயதான கர்ப்பிணியை பயமுறுத்தியதால் அவரின் 4 மாத கரு கலைந்துள்ளது.
கர்ப்பமடைவதற்காக மூன்று வருடங்களுக்கும் மேல் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குழந்தையை இழந்ததாக யான் என்ற பெண் வேதனை அடைந்துள்ளார்.
இதனையடுத்து நாயின் உரிமையாளர் லீ மீது அப்பெண் வழக்கு தொடர்ந்தார். பொது இடங்களில் நாயை கட்டி வைக்காமல் அவிழ்த்து விட்டு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கர்ப்பிணிக்கு இழப்பை ஏற்படுத்தியதால் அவருக்கு சுமார் 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று லீக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
- சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பன்சோத் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் மாளவிகா பன்சோத், இந்தோனேசிய வீராங்கனை துங்ஜங்கை எதிர்கொண்டார்.
இதில் பன்சோத் 26-24, 21-19 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் 2வது சுற்றில் பன்சோத், ஸ்காட்லாந்து வீராங்கனை கில்மோருடன் மோத உள்ளார்.
- இவரை "ஆர்டர் கிங்" என்று அன்பாக அழைப்பார்கள்.
- யுவானின் மறைவு குறித்து அறிந்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சீனாவில் தொடர்ந்து 18 மணிநேரம் உணவு டெலிவரி வேலை பார்த்துவிட்டு களைப்பில் பைக்கிலேயே தூங்கியபோது 55 வயதுடைய நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பைக்கிலேயே அவர் சடலமாக கிடந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் இந்த துயர சம்பவம் தெரியவந்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் கிழக்கு சீனாவில் உள்ள ஹாங்ஷோவில் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவரின் பெயர் யுவான். யுவான் இடைவிடாமல் செய்த வேலைக்காரணமாக ஒரு நற்பெயரை பெற்றுள்ளார். இவரை "ஆர்டர் கிங்" என்று அன்பாக அழைப்பார்கள்.
யுவானின் மறைவு குறித்து அறிந்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், 'ஆர்டர் கிங்' விழுந்துவிட்டார். உண்மையில் இந்த அவலங்களைத் தவிர்க்க வழி இல்லையா?" என்றும் மற்றொருவர், "அவர் தனது 50 களில், தனது குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்தார், இரவும் பகலும் உழைத்து, அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அவரது அடுத்த வாழ்க்கையில், அவர் இதுபோன்ற காலத்தை எதிர்த்து ஓட வேண்டியதில்லை" என்றும் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் டெலிவரி செய்பவர்களின் நலன் மற்றும் சட்ட உரிமைகள் பற்றிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது
- முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சீனா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சீனா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 5 ஆவது முறையாக இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
இதற்கு முன்பு இந்தியா 2011, 2016, 2018, 2023, ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
- பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் அந்த பகுதி வெள்ளக்காடாக மாறின.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாங்காய் நகரில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
பீஜிங்:
சீனாவில் உருவான பெபின்கா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி ஷாங்காய் நகரில் புயல் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது.
அப்போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் அந்த பகுதி வெள்ளக்காடாக மாறின. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாங்காய் நகரில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையே புயல் காரணமாக அங்கு மோசமான வானிலை நிலவியது. இதனால் சுமார் 100 விமானங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டன. புயல் கரையை கடக்கும்வரை மேலும் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
- முதல் அரையிறுதி போட்டி பாகிஸ்தானை வீழ்த்தி சீனா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- நாளை நடைபெறும் இறுதி போட்டியில் சீனாவை இந்தியா எதிர்கொள்கிறது.
8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரையிறுதி போட்டி பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்றது. இப்போட்டி 1 -1 எனற கணக்கில் சாமானில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க போட்டி பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது. அதில் 2-0 என்ற கணக்கில் சீனா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பின்னர் நடத்த 2 ஆவது அரையிறுதி போட்டியில் தென்கொரிய அணியை இந்தியா எதிர்கொண்டது. இப்போட்டியில் 4 - 1 என்ற கோல்கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை நடைபெறும் இறுதி போட்டியில் சீனாவை இந்தியா எதிர்கொள்கிறது.
- வானிலை சீரானதும் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
- சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
பீஜிங்:
கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்த சூறாவளி சுமார் 151 கி.மீ. வேகத்தில் இன்று கரையை கடக்கும் என சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கிழக்கு கரையோர பகுதிகளில் 254 மி.மீ. அளவிலான மழைப்பொழிவு பதிவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாங்காய் நகரில் இருந்து சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக ஷாங்காய் நகரில் உள்ள விமான நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பெபின்கா சூறாவளி கரையை கடக்கும் வரை சுமார் 600 விமானங்கள் ரத்துசெய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வானிலை சீரானதும் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்