என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
ஃபேமிலியாடா நீங்களாம்..? 34 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த குடும்பத்தை உதறித் தள்ளிய நபர்
- மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஒரு பணக்கார குடும்பத்திற்கு கடத்தல் கும்பலால் விற்கப்பட்டடார்.
- பெரும் போராட்டங்களுக்கு நடுவே குடும்பதை தேடுவதை நிறுத்தாத யூ ஒரு கட்டத்தில் தனது பிறந்த குடும்பத்தை கண்டுபிடித்தார்.
34 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்த சீன நபர், ஒரு வருடத்திற்குப் பிறகு உறவைத் துண்டிக்க முடிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
37 வயதான யூ தனது பிறந்த குடும்பத்தை கண்டுபிடித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் அவரது உண்மையான பெயரைக் கண்டுபிடிக்கும் வரை 34 ஆண்டுகளாக லி கியாங் என்று அழைக்கப்பட்டார். அவர் இரண்டு வயதாக இருந்தபோது சிச்சுவான் மாகாணத்தில் உள்ள அவரது தாத்தா பாட்டி வீட்டில் இருந்து கடத்தப்பட்டு, மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஒரு பணக்கார குடும்பத்திற்கு கடத்தல் கும்பலால் விற்கப்பட்டடார்.
அங்கு பல்வேறு கொடுமைகளை அனுபவித்த யூவுக்கு ஐந்து வயதில் தத்தெடுக்கப்பட்டதாகவும், 11 வயதில் அவரை வேறொரு குடும்பத்திற்கு அனுப்பியதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அக்குடும்பத்தை விட்டு வெளியேறிய யூ டெலிவரி ரைடராக வாழ்க்கை நடத்தி வந்தார்.
பெரும் போராட்டங்களுக்கு நடுவே குடும்பதை தேடுவதை நிறுத்தாத யூ ஒரு கட்டத்தில் தனது பிறந்த குடும்பத்தை கண்டுபிடித்தார். குடும்பத்தை கண்டுபிடித்த உடன் அவரது முதல் ஆசை அவரது தாயின் மடியில் "நன்றாக தூங்க வேண்டும்" என்பது தான்... ஆனால் குடும்பத்துடன் சேர்ந்த யூ-வுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
தனது தாய் தனது மற்ற இரண்டு மகன்களிடம் ஒரு சார்புடையவராக இருப்பதை உணர்ந்து ஏமாற்றமடைந்ததாக கூறும் யூ அவரை பணத்திற்காக தொடர்ந்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி குடும்பத்தை விட்டு பிரிவதாக கூறியுள்ளார்.
மேலும் பணத்தைச் சேமிக்க விரும்புவதாகவும், தனது வாழ்க்கையில் துன்பத்தை ஏற்படுத்திய கடத்தல்காரர்களைக் கண்டுபிடித்து அவர்களை நீதியின் முன் நிறுத்த விரும்புவதாகவும் யூ கூறினார்.