search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உலகளவிலான 2024 மிஸ் இந்தியா போட்டி: த்ருவி பட்டேல் பட்டம் வென்றார்

    • பாலிவுட் நடிகையாக வேண்டும். யுனிசெஃப் (UNICEF) தூதராக வேண்டும் என வெற்றி பெற்றவர் தெரிவித்தார்.
    • சுரிநாமில் இருந்து கலந்து கொண்ட லிசா அப்தியோல்ஹாக் 2-வது இடம் பிடித்தார்.

    இந்தியாவிற்கு வெளியில் வசிக்கும் இந்தியர்களுக்கான உலகளவிலான 2024 மிஸ் இந்தியா போட்டி நடத்தப்பட்டது. இதில் அமெரிக்காவில் வசித்து வரும் கம்ப்யூட்டர் தகவல் சிஸ்டம் (Computer Information System) மாணவி த்ருவி பட்டேல் பட்டம் வென்றார்.

    அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள எடிசனில் நடைபெற்ற இந்த உலகளவிலான 2024 மிஸ் இந்தியா போட்டியில் த்ருவி பட்டேல் வாகை சூடிய நிலையில், சுரிநாமில் இருந்து கலந்து கொண்ட லிசா அப்தியோல்ஹாக் 2-வது இடம் பிடித்தார். நெதர்லாந்தில் இருந்து வந்த மாளவிகா ஷர்மா 3-வது இடம் பிடித்தார்.

    முதல் இடம் பிடித்த த்ருவி பட்டேல் "பாலிவுட் நடிகையாக வேண்டும். யுனிசெஃப் (UNICEF) தூதராக வேண்டும்" என தனது ஆசைகளை வெளிப்படுத்தினார்.

    திருமணம் முடிந்தவர்கள் பிரிவில் டிரினிடாட் அண்டு டொபாகோவில் இருந்து வந்திருந்த சுஆன் மவுட்டெட் பட்டம் வென்றார். இங்கிலாந்தில் இருந்து சென்றிருந்த ஸ்னேகா நம்பியார் 2-வது இடமும், பவன்திப் கவுர் 3-வது இடத்தையும் பிடித்தார்.

    டீன் பிரிவில் (Teen category) குவாதலூப்பு என்ற கரிபியன் தீவில் இருந்து வந்த சியாரா சுரேத் பட்டம் வென்றார். நெதர்லாந்தில் இருந்து வந்த ஷ்ரேயா சிங் 2-வது இடமும், சுரிநாமில் இருந்து வந்திருந்த ஷ்ரதா தெட்ஜோ 3-வது இடமும் பெற்றனர்.

    இந்த அழகு போட்டிகள் நியூயார்க்கில் உள்ள இந்திய விழாக்குழு (India Festival Committee) சார்பில் நடத்தப்பட்டது. இந்த அழகு போட்டி திருவிழா 31-வது போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×