search icon
என் மலர்tooltip icon

    துபாய்

    • 1965ம் ஆண்டு ஆடவர் ஒற்றையர் பிரிவில் தினேஷ் கன்னா தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
    • சாத்விக் மற்றும் சிராக் 2022ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றனர்.

    துபாய்:

    துபாயில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

    இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஓங் யியூ சின்-டியோ யி ஜோடியை 16-21, 21-17, 21-1 என்ற செட்கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் 58 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்கள் ஆசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இந்த சீசனில் சாத்விக்-சிராக் வென்றுள்ள இரண்டாவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    இதற்கு முன்பு லக்னோவில் 1965ம் ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தினேஷ் கன்னா என்ற வீரர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதன்பின்னர் முதல் முறையாக இந்த ஆண்டு இந்திய வீரர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    ஆசிய சாம்பியன்ஷிப் பட்டம் தவிர, சாத்விக் மற்றும் சிராக் 2022ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றனர். உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் உலக சுற்றுப்பயணத்தில் ஐந்து பட்டங்களை வென்றுள்ளனர்.

    • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்றது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய ஜோடி இறுதிக்கு முன்னேறியது.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாட்விக்-சிராக் ஜோடி, சீன தைபே ஜோடியுடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் சாட்விக், சிராஜ் ஜோடி 21-18 என முதல் செட்டை கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் 13-14 என இருந்த நிலையில் காயம் காரணமாக சீன தைபே ஜோடி விலகியது. இதையடுத்து, இந்திய ஜோடி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாட்விக், சிராக் ஜோடி, இந்தோனேசிய ஜோடியுடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் சாட்விக், சிராஜ் ஜோடி 21-11, 21-12 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
    • நேற்று நடந்த காலிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தென்கொரிய வீராங்கனை ஆன் செ யங்குடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து முதல் செட்டை 21-18 என கைப்பற்றினார். ஆனால் அடுத்த இரு செட்களை 5-21, 9-21 என்ற செட் கணக்கில் இழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
    • நேற்று நடந்த போட்டியில் பி.வி.சிந்து, பிரனாய் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன வீராங்கனை யூ ஹானுடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், இந்தோனேசிய வீரர் வர்டயோவுடன் மோதினார். இதில் பிரனாய் 21-16, 5-21, 21-18 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 14- 21, 22-20, 9-21 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

    • தனது மகளை போதைப்பொருள் வழக்கில் 2 பேர் சிக்க வைத்ததாக தெரிவித்தார்.
    • கிரிசன் பெரிராவிடம் கொடுத்த கோப்பையில் போதைப்பொருள் மறைத்து வைத்து அனுப்பி உள்ளனர்.

    சார்ஜா:

    இந்தி நடிகையான கிரிசன் பெரிரா, கடந்த 1-ந்தேதி துபாய்க்கு சென்ற போது போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். அவர் வைத்திருந்த கோப்பையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து நடிகை கிரிசன் பெரிராவை கைது செய்து சார்ஜா சிறையில் அடைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைத்தார்.

    இதுதொடர்பாக நடிகையின் தாய் பிரமிளா, மும்பை போலீசில் அளித்த புகாரில், தனது மகளை போதைப்பொருள் வழக்கில் 2 பேர் சிக்க வைத்ததாக தெரிவித்தார். விசாரணையில் அது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    நடிகையின் தாய்க்கும் அவரது வீட்டுக்கு அருகே வசிக்கும் அந்தோனி பவுல் என்பவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் அந்தோனி பவுல் தனது நண்பர் ரவி போபதே மூலம் பழிவாங்க திட்டமிட்டார்.

    அதன்படி ரவிபோபதே தன்னை வெப்தொடர் தயாரிப்பாளர் என்று நடிகையின் தாயிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு அவரது ஹாலிவுட் வெப் தொடர்களில் நடிக்க வைப்பதாக கூறியுள்ளார்.

    நடிகை கிரிசன் பெரிராவை வெப் தொடர் வாய்ப்புக்கு துபாய்க்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தார். அப்போது கிரிசன் பெரிராவிடம் கொடுத்த கோப்பையில் போதைப்பொருள் மறைத்து வைத்து அனுப்பி உள்ளனர்.

    இதையடுத்து அந்தோனி பவுல், ரவிபோபதேவை போலீசார் கைது செய்தனர். மேலும் சார்ஜா ஜெயிலில் அடைக்கப்பட்ட கிரிசன் பெரிரா மீட்டுக்கொண்டு வரும் நடவடிக்கையில் மும்பை போலீசார், குடும்பத்தினர் ஈடுபட்டனர்.

    கிரிசன் பெரிராவை போதைப்பொருள் கடத்தலில் சிக்கவைத்து அவருக்கு தெரியாமல் போதைப்பொருளை மறைத்து கொடுத்து அனுப்பியது பற்றி சார்ஜாவில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் கிரிசன் பெரிரா, சார்ஜா ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து விரைவில் மும்பைக்கு வருகிறார்.

    • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாட்விக், சிராக் ஜோடி, மலேசிய ஜோடியுடன் மோதியது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த போட்டியில் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தைவான் வீராங்கனை ஹு வென் சீயுடன் மோதினார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லக்ஷ்யா சென் 21-15, 22-20 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், பஹ்ரைன் வீரர் அட்னன் இப்ரஹமுடன் மோதினார். இதில் கிடாம்பி 21-13, 21-8 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • துபாயில் பி 7 பதிவு எண் கொண்ட காரின் நம்பர் பிளேட் ரூ.122 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
    • இது உலகின் விலை உயர்ந்த நம்பர் பிளேட் என்ற கின்னஸ் சாதனை படைத்தது.

    துபாய்:

    தற்போது ரம்ஜான் காலம் என்பதால் துபாய் அரசு உலக பட்டினியைப் போக்க முடிவு செய்தது. அதற்காக 100 கோடி உணவுகளைத் தயாரித்து வழங்கும் திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    அதில் ஒன்று, அந்நாட்டில் உள்ள கார்களுக்கு பேன்சியான நம்பர் பிளேட்களை ஏலம் விடுவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நம்பர் பிளேட்களை ஏலம் விடும் பொறுப்பு எமிரேட்ஸ் ஆக்ஷன் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஏலத்தை நடத்தினர்.

    இந்த ஏலத்தில் ஏகப்பட்ட நம்பர் பிளேட்கள் இடம்பெற்றன. 10 இரட்டை இலக்க நம்பர்களான ஏஏ 19, ஏஏ 22, ஏஏ 80, ஓ 71, எக்ஸ் 36, டபிஎல்யூ 78, எச் 31, இசட் 37, ஜே 57 மற்றும் என் 41 ஆகிய நம்பர் பிளேட்டும், மற்ற ஸ்பெஷல் நம்பர் பிளேட்களான ஒய் 900, கியூ 22222 ஆகிய நம்பர்களும் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டது.

    இந்த ஏலத்தில் ஏஏ19 என்ற நம்பர் பிளேட் 4.9 மில்லியன் திராம்ஸ் (இந்திய மதிப்பில் ரூ10.92 கோடி)க்கு ஏலம் போனது. அடுத்ததாக ஓ 71 என்ற நம்பர் பிளேட் 2.150 மில்லியன் திராம்ஸ், அதாவது ரூ4.79 கோடிக்கு ஏலம் போனது. கியூ 22222 என்ற நம்பர் பிளேட் 975,000 திராம்ஸ், அதாவது ரூ 2.17 கோடிக்கு ஏலம் போனது.

    உலகிலேயே இதுவரை அதிக விலையில் ஏலம் போனது கடந்த 2008-ம் ஆண்டு ஏலம் போன 1ம் நம்பர் பிளேட் தான். அந்த நம்பர் பிளேட் 52.2 மில்லியன் திராம்ஸ், அதாவது ரூ116.3 கோடி என்ற விலையில் ஏலம் போனது.

    இந்நிலையில், இந்த ஏலத்தில் பி 7 என்ற நம்பர் பிளேட் 55 மில்லியன் திராம்ஸ் என்ற விலையில் ஏலம் போயுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ122.6 கோடிக்கு இந்த ஏலம் போயுள்ளது. இதுதான் தற்போது உலகிலேயே அதிக விலைக்கு ஏலம்போன நம்பர் பிளேட் என்ற கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது.

    இந்த ஏலம் மூலம் வசூலான பணம் முழுவதும் அந்நாட்டின் 100 கோடி உணவு நன்கொடை திட்டத்திற்காக வழங்கப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு ஷகிப் அல் ஹசன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    • கேன் வில்லியம்சன், ஆசிப் கான் பெயர்களும் இந்தப் பட்டியலில் உள்ளன.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

    நியூசிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன், வங்காள தேசத்தின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் மற்றும் யுஏஇ-யை சேர்ந்த ஆசிப் கான் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

    இந்த மூவரில் அதிக வாக்குகள் பெறுபவருக்கு ஐசிசி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்படும்.

    இதேபோல், மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு சிபோனா ஜிம்மி (பப்புவா நியூ கினியா), ஹென்றிட் இஷிம்வே (ருவாண்டா), ரவினா ஓ (பப்புவா நியூ கினியா) ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    • விபத்தால் முகமதுவுக்கு மூளையில் பலத்த காயம் ஏறபட்டதால் படிப்பு தொடர முடியாமல் போனது.
    • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உச்ச நீதிமன்றம் காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

    இந்தியாவை சேர்ந்தவர் முகமது பைக் மிர்சா (20). பொறியியல் படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டில் துபாயில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற முகமது, ஓமனில் இருந்து ஐக்கிய அமிரகத்திற்கு பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தபேது பயங்கர விபத்து ஏற்பட்டது.

    இதில் 31 பயணிகளில் 17 பேர் உயிரிழந்தனர். இதில், 12 பேர் இந்தியர்கள் ஆவர். முகமது உள்பட பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3.4 மில்லியன் திர்ஹம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

    இந்த விபத்தில் படுகாயங்கள் அடைந்த முகமது துபாயில் உள்ள மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்தார். 14 நாட்கள் சுயநினைவின்றி இருந்தார். அதன் பிறகு மறுவாழ்வு மையத்திலும் சிகிச்சை பெற்றார்.

    விபத்தால் முகமதுவுக்கு மூளையில் பலத்த காயம் ஏறபட்டதால் படிப்பு தொடர முடியாமல் போனது. மேலும், அவரது மண்டை ஓடு, காதுகள், வாய், நுரையீரல், கைகள் மற்றும் கால்களில் ஏற்பட்ட காயங்களும் தடயவியல் மருத்துவ நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்பட்டன.

    முகமதுவின் மூளையில் 50 சதவீதம் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையின் அடிப்படையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உச்ச நீதிமன்றம் காப்பீட்டு நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

    இதன்மூலம் முகமதுவுக்கு ரூ.11 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பேட்மேன்ஸ்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
    • இதில் இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில் 4-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.

    இந்தப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் ஷுப்மன் கில் 4-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

    முன்னாள் கேப்டன் விராட் கோலி 6-வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 8-வது இடத்திலும் உள்ளனர்.

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ராஸி வான் டெர் டுசன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மற்றொரு பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் 3-ம் இடத்தில் உள்ளார்.

    பந்துவீச்சில் இந்தியாவின் முகமது சிராஜ் 3-வது இடத்தில் நீடிக்கிறார்.

    ×