search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    தன்னை பார்க்க வராத பேரக்குழந்தைகளுக்கு தாத்தா வழங்கிய தண்டனை
    X

    தன்னை பார்க்க வராத பேரக்குழந்தைகளுக்கு தாத்தா வழங்கிய தண்டனை

    • முதியவர்கள், தங்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் தங்களை காண வர வேண்டும் என விரும்புவார்கள்
    • 5 லட்சம் பவுண்டு மதிப்புள்ள சொத்தில் 50 பவுண்டுகள் மட்டுமே எழுதி வைத்தார்

    இந்திய வாழ்க்கை முறையில் குடும்ப உறவுகளின் மேன்மை மிகவும் போற்றப்படுகிறது.

    பணி, தொழில், திருமணம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக தாத்தா பாட்டி போன்றவர்களை விட்டு விட்டு தொலைதூரம் வருபவர்கள், இந்தியாவில் பண்டிகைக்கால விடுமுறைகளில் உறவினர்களை காண சொந்த ஊர்களுக்கு செல்வது வாடிக்கை.

    உலகெங்கும் வயதானவர்களுக்கு தங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் தங்களை பார்க்க அடிக்கடி வர வேண்டும் என்பது விருப்பம்.

    இங்கிலாந்தில் ராணுவத்தில் பணியாற்றியவர் ஃபிரெடரிக் வார்டு (Frederick Ward). இவரது மகன் ஃபிரெடரிக் ஜூனியர் 2015ல் காலமானார்.

    மகனின் மரணத்திற்கு பிறகு ஃபிரெடரிக்கின் பேரக்குழந்தைகள் ஃபிரெடரிக்கை பார்க்க வரவில்லை.

    நுரையீரல் சிக்கலால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

    தன்னை பார்க்க பேரக்குழந்தைகள் வருவதில்லை என்பதால் அவர்களுக்கு வெறும் 50 பவுண்டுகள் மட்டுமே உயில் எழுதி வைத்தார்.

    5 லட்சம் பவுண்டு மதிப்புள்ள சொத்தில் 50 பவுண்டுகள் மட்டுமே தங்களுக்கு எழுதி வைத்ததற்காக அந்த உயிலுக்கு எதிராக அவரது பேரக்குழந்தைகள் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பார்க்க வராத பேரன்களுக்கு சொத்தில் பங்கில்லை என ஃபிரெடரிக் எடுத்த முடிவு சரியானது என்றும் அவரது பார்வையில் அது நியாயமானதுதான் என்றும் தீர்ப்பளித்தது.

    உறவுகளுக்கு மதிப்பளிக்காமல் சொத்திற்கு மட்டுமே மதிப்பளிக்கும் தற்கால சந்ததியினருக்கு இது நல்ல பாடம் என சமூக வலைதளங்களில் இந்த தீர்ப்பு குறித்து பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×