search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    முழு சக்தியுடன் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக தாக்குதல் தொடரும்- நேதன்யாகு
    X

    முழு சக்தியுடன் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக தாக்குதல் தொடரும்- நேதன்யாகு

    • நெதன்யாகுவின் நிலைப்பாடு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்த முன்மொழிவுக்கான நம்பிக்கையை தகர்த்தது.
    • லெபனான் தெற்குப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொல்லப்பட்டார்.

    இஸ்ரேலுக்கும் அதன் அண்டை நாடான லெபனானுக்கும் இடையே தீராப்பகை நிலவியது. குறிப்பாக லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக கடுமையான மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் போர் தொடுக்க தொடங்கிய நாளில் இருந்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துகிறது. இருதரப்பு மோதல் பிராந்திய அளவில் பெரிய போராக வெடிக்கும் அபாயம் இருப்பதாக உலக நாடுகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.

    இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.



    இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான முழு வலிமையான ராணுவத் தாக்குதல்களை, அதன் ராக்கெட் வீச்சை நிறுத்தும் வரை தொடர இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், நாங்கள் முழு பலத்துடன் ஹிஸ்புல்லாவைத் தொடர்ந்து தாக்குவோம். எங்கள் எல்லா இலக்குகளையும் அடையும் வரை நாங்கள் நிறுத்த மாட்டோம், அவற்றில் முக்கியமானது வடக்கில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக திரும்புவது என்றார்.

    நேதன்யாகுவின் இந்த நிலைப்பாடு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்த முன்மொழிவுக்கான நம்பிக்கையை தகர்த்தது.

    முன்னதாக, அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. மாநாட்டின் இடையே அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அமைதி பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு ஏதுவாக 21 நாள் போர் நிறுத்தத்தை உடனடியாக அறிவிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

    லெபனான் தெற்குப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×