search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேலுக்கு பிணைக் கைதிகள் சவப்பெட்டியில்தான் வருவார்கள் - ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை
    X

    'இஸ்ரேலுக்கு பிணைக் கைதிகள் சவப்பெட்டியில்தான் வருவார்கள்' - ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை

    • காசாவின் ரபா நகரில் உள்ள ஒரு சுரங்கத்திலிருந்து பயண கைதிகள் 6 பேரின் உடல் மீட்கப்பட்டது.
    • ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 97 பிணைக்கைதிகள் உள்ள நிலையில் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது

    போரும் பிணைக் கைதிகளும்

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து கடந்த வருடம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 மரணித்தனர். மேலும் 250 க்கும் மேற்பட்டடோர் பிணைக் கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இதில் அமெரிக்கர்கள் உள்பட வெளிநாட்டினர் சிலரும் அடங்குவர்.

    அவர்களை மீட்கும் முகமாகவும், தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்துடனும் கடந்த 10 மாதங்களாக காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 40,000 க்கும் அதிகமானபாலஸ்தீன பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். மேலும் அதிக எண்ணிக்கையிலான பாலஸ்தீனியர்கள் பிணைக்கைதிகளாக இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இதனிடையே சர்வதேச நாடுகளின் முயற்சியின் பலனாகக் கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார காலத்துக்கு தற்காலிகமாகப் போர் நிறுத்தப்பட்டது. அதற்கு ஈடாக ஹமாஸ் வசம் இருந்த சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அதன்பின் பிணைக்கைதிகள் பரிமாற்றத்தில் இதுவரை உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.

    மீட்பு

    சில தினங்களுக்கு முன்பு காசாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து கைத் பர்கான் அல்காதி என்ற 52 வயதான பணய கைதி உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால் தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஒரு சுரங்கத்திலிருந்து பயண கைதிகள் 6 பேரின் உடல் மீட்கப்பட்டது. அவர்களில் இஸ்ரேலிய-அமெரிக்கரான கோல்ட்பர்க்-போலினும் ஒருவர் ஆவார். தங்கள் வீரர்கள் சுரங்கத்தை சென்றடைவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக பிணைக்கைதிகள் 6 பேரையும் ஹமாஸ் அமைப்பினர் கொடூரமாகக் கொலை செய்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த படுகொலைக்காக ஹமாஸுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சூளுரைத்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் இஸ்ரேலிய மக்கள் நேதன்யாகு வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஹமாஸ்

    தற்போது ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 97 பிணைக்கைதிகள் உள்ள நிலையில் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹமாஸ் ஆயுதக் குழு [எசேதைன் அல் காசம் பிரிகேட்] செய்தி தொடர்பாளர் அபு ஒபைதா தெரிவித்துள்ளதாவது,'பிணைக்கைதிகளை மேற்பார்வையிடும் முஜாகிதீன் போராளிகளுக்கு, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம் அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி முன்னேறினால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளோம். ஒப்பந்தத்துக்கு முன் வராமல் நேதன்யாகு ராணுவத்தின் மூலம் அழுத்தம் கொடுப்பதைத் தொடர்ந்தால் பிணைக் கைதிகளை சவப்பெட்டிகளுக்குள் வைத்துத்தான் இஸ்ரேலுக்கு அனுப்புவோம் என்று ஹமாஸ் சார்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×