search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஹமாஸ் அமைப்பிடம் 120 பேர் பிணைக்கைதிகளாக உள்ளனர் - இஸ்ரேல் தகவல்
    X

    ஹமாஸ் அமைப்பிடம் 120 பேர் பிணைக்கைதிகளாக உள்ளனர் - இஸ்ரேல் தகவல்

    • காசாமுனை பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து 250-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை மீட்டு வந்தது.
    • ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதையடுத்து, காசாமுனை பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து 250-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை மீட்டு வந்தது.

    இந்நிலையில், ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், தற்போது காசாவில் 120-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஹமாஸ் அமைப்பால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர் என்பதை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிபடுத்தி உள்ளது என தெரிவித்தது.

    Next Story
    ×