search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    காசா பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 22 பேர் பலி
    X

    காசா பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 22 பேர் பலி

    • காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இந்தப் போரில் சுமார் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    காசா:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 251 பேரை பிணைக்கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.

    இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், ஒப்பந்த அடிப்படையில் 105 பிணைக்கைதிகளை மீட்டது. அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் பிணைக்கைதிகள் 8 பேரை இஸ்ரேல் மீட்டது. மேலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடியில் சிக்கியிருப்பதாகவும், அதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்தது.

    இதற்கிடையே, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் சுமார் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், காசாவில் உள்ள செய்டவுன் என்ற பகுதியில் உள்ள பள்ளிக்கூடம்மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுதொடர்பாக, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஒரு பழைய பள்ளிக்கூட வளாகத்திற்குள் செயல்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பினரின் கட்டளை மட்டும் கட்டுப்பாட்டு மையத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×