என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
குவைத் தீ விபத்து.. உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் - முதல்வர் உத்தரவு
- உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Live Updates
- 13 Jun 2024 12:14 PM IST
குவைத் தீவிபத்தில் கேரளாவை சேர்ந்த 24 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 13 Jun 2024 11:39 AM IST
குவைத்தில் தமிழர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளில், பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று குவைத் அரசிடம், தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
- 13 Jun 2024 11:11 AM IST
குவைத் தீ விபத்தில் மரணம் அடைந்தவர்களின் பலரது உடல்களை அடையாளம் காணமுடியாத அளவுக்கு நிலைமை உள்ளது. இதனால் இறந்த உடல்களை அடையாளம் காண்பதற்கு குவைத் அரசு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் மூலம் இறந்தவர்கள் உடல்களை விரைந்து அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 13 Jun 2024 10:59 AM IST
குவைத் தீ விபத்து தொடர்பாக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கேரளா அமைச்சரவை கூட்டம் கூடியது. அதில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலத்தை இந்தியா கொண்டுவருவது தொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், மீட்பு பணிகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக கேரளா அமைச்சர்கள் குவைத் செல்ல வேண்டுமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
- 13 Jun 2024 10:57 AM IST
குவைத் தீவிபத்தில் காயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவை தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை ஏற்கும் என அறிவிப்பு
- 13 Jun 2024 10:49 AM IST
குவைத் தீவிபத்து: தமிழகத்தை சேர்ந்த கருப்பணன், சின்னத்துரை, வீராசாமி மாரியப்பன், முகமது ஷெரீப், புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார்.
- 13 Jun 2024 10:39 AM IST
குவைத் தீவிபத்து தொடர்பாக முகாம் அலுவலகத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
- 13 Jun 2024 10:37 AM IST
கடந்த 12 ஆண்டுகளாக குவைத் நாட்டில் மங்காப் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் போர்மேன்-ஆக பணியாற்றி வரும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் ஜாபர் பேக் தெருவை சேர்ந்த முகமது ஷெரிபை தொடர்பு கொள்ள முடியாததால் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.
- 13 Jun 2024 9:37 AM IST
குவைத் தீவிபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்:-
இந்தியாவிற்குள்: +91 1800 309 3793
வெளிநாடு: +91 80 6900 9900, +91 80 6900 9901
- 13 Jun 2024 9:37 AM IST
குவைத் தீவிபத்தில் தமிழர்கள் இரண்டு பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் தீவிபத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த தீவிபத்தில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்