என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
நாங்கள் அமைதியின் பக்கம் நிற்கிறோம் என்ற மோடி- இந்தியா எங்கள் பக்கம்... ஜெலன்ஸ்கி கூறுவது என்ன?
- இந்த போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்று மோடி தெரிவித்தார்
- விரைவில் இந்தியா வந்து இந்திய மக்களிடம் அதற்கான ஆதரவைக் கோருவேன் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார்
பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக போலாந்து சென்று அங்கிருந்து 7 மணி நேரம் ரெயில் பயணமாக நேற்று [ஆகஸ்ட் 23] உக்ரைன் சென்றடைந்தார். அங்கு தலைநகர் கீவில் அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். இரு தலைவர்களும் தனியாகவும், உயர்மட்டக் குழுவினருடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைனில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.
மோடி பேசுகையில், இந்த போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. தொடக்கத்தில் இருந்தே ஒருபக்க சார்பாகவேதான் இருக்கிறோம். அது அமைதியின் பக்கமே ஆகும். நாங்கள் புத்தரின் நிலத்தில் இருந்து வந்திருக்கிறோம். அங்கே போருக்கு இடமில்லை. மகாத்மா காந்தியின் தேசத்தில் இருந்து வந்திருக்கிறோம், அவர் ஒட்டுமொத்த உலகுக்கும் ஒரு அமைதியின் செய்தியை வழங்கியவர். எனவே இரு தரப்பும் ஒன்றாக அமர்ந்து பேசி இந்த நெருக்கடிகளில் வெளிவருவதற்கான வழிகளை தேட வேண்டும். உக்ரைனில் அமைதி திரும்புவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உக்கரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மோடி புதின் பக்கம் இருப்பதை விட அமைதியின் பக்கமே அதிகம் நிற்கிறார். நடுநிலைமையாக அன்றி இந்த போரில் இந்தியா எங்கள் பக்கம் நிற்க வேண்டும். இந்தியா உக்ரைனுக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். விரைவில் இந்தியா வந்து இந்திய மக்களிடம் அதற்கான ஆதரவைக் கோருவேன். இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா பெரும்பங்காற்ற வேண்டும். இந்தியா உலகில் முக்கியமான நாடு. இந்தியாவால் நிச்சயம் அமைதியைக் கொண்டுவர முடியும் என்று தெரிவித்துள்ளார்.