என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
இந்தோனேசியாவிலும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டுபிடிப்பு
- குரங்கு அம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியது.
- இந்தோனேசியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
ஜகார்த்தா:
ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தோனேசியாவில் முதன்முறையாக குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அண்டை நாடான சிங்கப்பூரில் கடந்த மாதம் முதல் குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது. அங்கு ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 15 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
மேலும், தென்கிழக்கு நாடுகளான பிலிப்பைன்ஸ், மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.