search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இல்ல பரவால்ல.. அடுத்த விவாதத்துக்கு அடம்பிடிக்கும் கமலா ஹாரிஸ் - ஜகா வாங்கிய டிரம்ப்!
    X

    இல்ல பரவால்ல.. அடுத்த விவாதத்துக்கு அடம்பிடிக்கும் கமலா ஹாரிஸ் - ஜகா வாங்கிய டிரம்ப்!

    • இரண்டாவது விவாதத்தை வரும் ஆக்டொபர் 23 ஆம் தேதியன்று ஏற்பாடு செய்ய சிஎன்என் தொலைக்காட்சி முன்வந்துள்ளது.
    • கமலா ஹாரிஸுடன் மீண்டும் விவாதிக்க துணிச்சல் இல்லாமல் டிரம்ப் பின்வாங்கியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    இருவரும் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி ஏபிசி தொலைக்காட்சி ஏற்பாடு செய்த நேருக்கு நேர் விவாதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் கமலா ஹார்ஸ் டிரம்புடன் காரசாரமான விவாதங்களை நடத்தி பாராட்டுகளைப் பெற்றார். இந்த விவாதத்துக்குப் பின்னர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகரிட்டுள்ளதாக சர்வே கூறுகிறது.

    இந்த நிலையில் மேலும் ஒரு விவாதத்தில் இருவரும் கலந்துகொள்வார்களா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ஆனால் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தல் முடியும் வரை கமலா ஹாரிஸ் உடன் நேருக்குநேர் விவாதம் கிடையாது ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையில் இரண்டாவது விவாதத்தை வரும் ஆக்டொபர் 23 ஆம் தேதியன்று ஏற்பாடு செய்ய சிஎன்என் தொலைக்காட்சி முன்வந்துள்ளது.

    இந்த விவாதத்தில் பங்கேற்க கமலா ஹாரிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.மிச்சிகனில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய கமலா ஹாரிஸ், டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன் என கூறினார் எனவே டிரம்ப் விவாதத்தை ஏற்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஏற்கனவே மிகவும் தாமதம் ஆகிவிட்டது. சில மாகாணங்களில் வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது, எனவே மீண்டும் விவாதம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    ஜோ பைடனுடன் விவாதிக்கும்போது தைரியமாகப் பேசிய டிரம்ப், கமலா ஹாரிஸுடன் மீண்டும் விவாதிக்க துணிச்சல் இல்லாமல் பின்வாங்கியுள்ளார் என்று ஜனநாயகவாதிகள் டிரம்பை சமூக வலைதளங்களில் கிழித்தெடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×