search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அர்ஜென்டினா அதிபருடன், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
    X

    பிரதமர் மோடி, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ்

    அர்ஜென்டினா அதிபருடன், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

    • ஜெர்மனி சென்றுள்ள பிரதமர், அர்ஜென்டினா அதிபரை சந்தித்தார்.
    • இந்தியாவுடன் யோகா, தியானம், உள்பட கலாச்சார தொடர்பை அர்ஜென்டினா மேற்கொண்டுள்ளது.

    முனீச்:

    ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, முனீச் நகரில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டசை சந்தித்த பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, விவசாயம், பருவநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கை மற்றும் உணவு பாதுகாப்பு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

    இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகள், அரசியல்,பொருளாதாரம், கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்தும் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளை சேர்ந்த உயர்மட்டக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

    இந்தியாவில் அர்ஜென்டினாவின் சுமார் 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்துள்ளது. இரு நாடுகளும் யோகா, தியானம், ஆகியவற்றுடன் கலாச்சார தொடர்பைக் கொண்டுள்ளன.

    அர்ஜென்டினாவில் இந்திய தத்துவம், ஆன்மீகம், நடனம் மற்றும் இசை ஆகியவை பிரபலமாக உள்ளன. அர்ஜென்டினாவில் சுமார் 2,600 வெளிநாடு வாழ் இந்தியர்களும் மற்றும் இந்திய வம்சாவளியினரும் வசிக்கின்றனர்.

    Next Story
    ×