என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
15 லட்சத்துக்கு மேல் 'லைக்ஸ்'களை அள்ளிய பிரதமர் மோடி-அதிபர் ஜெலன்ஸ்கி புகைப்படம்
- உக்ரைன் சென்ற பிரதமர் மோடியுடன் அதிபர் ஜெலன்ஸ்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
- பிரதமர் மோடி-அதிபர் ஜெலன்ஸ்கியின் இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் சாதனை படைத்துள்ளது.
கீவ்:
பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக உக்ரைன் நாட்டுக்குச் சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடியுடன் அதிபர் ஜெலன்ஸ்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அந்தப் புகைப்படத்தை அதிபர் ஜெலன்ஸ்கி தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில், இந்தியா-உக்ரைன் இடையிலான உறவுகள் மற்றும் பேச்சுவார்த்தையை வலுப்படுத்துவதற்கு எங்கள் சந்திப்பு முக்கியமானது' என குறிப்பிட்டிருந்தார்.
அதிபர் ஜெலன்ஸ்கியின் இந்தப் பதிவு சில மணி நேரங்களில் 15 லட்சத்துக்கு மேற்பட்ட 'லைக்ஸ்'களைப் பெற்றது. இது அவரது சமூக வலைதள பதிவுகளில் சாதனையாக மாறியது.
இதற்கு முன் 7.8 லட்சம் 'லைக்ஸ்'களை பெற்றதே அவரது அதிகபட்சமாக இருந்தது. தற்போது பிரதமர் மோடியுடனான புகைப்படம் அதை முறியடித்துள்ளது.
சமூக வலைதளத்தில் அதிக பாலோயர்ஸ் கொண்ட உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.