search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ராணி எலிசபெத் உடல் அடக்கம் - லண்டனில் இருந்து புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
    X

    ஜனாதிபதி திரவுபதி முர்மு

    ராணி எலிசபெத் உடல் அடக்கம் - லண்டனில் இருந்து புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

    • ராணி எலிசபெத் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்
    • கடந்த 11-ம் தேதி ராணி எலிசபெத் மறைவுக்கு இந்தியா சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    ராணி எலிசபெத் உடல் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியின் உடல் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் சென்றார். அவர் ராணி எலிசபெத் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தியபின், வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் அடக்க நிகழ்ச்சி முடிந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டனில் இருந்து விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.

    Next Story
    ×