search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வடகொரியாவுக்கு பரிசாக குதிரைகளை வழங்கிய ரஷியா
    X

    வடகொரியாவுக்கு பரிசாக குதிரைகளை வழங்கிய ரஷியா

    • போரில் ரஷியாவுக்கு உதவிடும் வகையில் வடகொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது.
    • இருநாடுகளுக்கிடையே கூட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உக்ரைன் உடன் போரிடுவதற்காக வடகொரியா ரஷியாவிற்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் அதற்கு பரிசாக குதிரைகள் வழங்கப்பட்டு உள்ளதாக தென் கொரியா தெரிவித்து உள்ளது. இது குறித்து தென் கொரியா தெரிவித்து இருப்பதாவது: ரஷியா உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

    இந்த போரில் ரஷியாவுக்கு உதவிடும் வகையில் வடகொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஷியாவில் இருந்து ஓர்லோவ் டிராட்டர் வகையை சேர்ந்த 24 குதிரைகள் வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    வடகொரியா அதிபர் கிம் ஜாங்-க்கு குதிரைகள் என்றால் கொள்ளை பிரியமாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்கனவே புதின் 30 குதிரைகளை அனுப்பி உள்ளார். இவை அனைத்தும் வடகொரியா அனுப்பிய ஆயுதத்திற்கான பணம் என தென் கொரியா தெரிவித்து உள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் அரசு ஊடக நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்து இருப்பதாவது:

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஷிய அதிபர் புதின் வடகொரியாவுக்கு வந்திருந்தார். அப்போது இருநாடுகளுக்கிடையே கூட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் ரஷிய அதிபர் புதினுக்கு ஒரு ஜோடி நாய்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதிலாக ஆகஸ்ட் மாதத்தில் 447 ஆடுகளை புதின், கிம் ஜாங் உன்னுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×