என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
வீட்டிற்கு வந்த முதலையை விரட்டியடித்த நாய்
- நாய் குரைத்ததும் வாசலுக்கு வந்த நடாலியா வெளியே முதலை நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போனார்.
- நாய்க்கு பயந்து முதலை சென்றுவிட்டதால் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
வீட்டிற்குள் நுழைய முயன்ற முதலையை நாய் குரைத்து விரட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாடாலியா ரோஜாஸ் என்பவரின் பண்ணைவீடு ஒரு குளத்தை ஒட்டி உள்ளது. அதில் இருந்து வெளியேறிய முதலை ஒன்று அவரது வீட்டின் முற்றத்திற்கு வந்தது. கண்ணாடி கதவுக்கு வெளியே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த முதலையை வீட்டில் வளர்த்த நாய் கவனித்தது. உடனே அது பயங்கரமாக குரைக்கத் தொடங்கியதால் முதலை மிரண்டுபோய் குளத்தை நோக்கி ஓடி மறைந்தது. நாய் குரைத்ததும் வாசலுக்கு வந்த நடாலியா வெளியே முதலை நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். நாய்க்கு பயந்து முதலை சென்றுவிட்டதால் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
வீட்டில் இருந்த கேமராவில் பதிவான இந்த காட்சிகளை அவர் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் வெளியிட்டார். வீடியோ வைரலானது. பல லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
"நாய் குரைத்ததால் முதலை ஓடியிருக்கலாம், ஆனால் நாய்க்காகத்தான் முதலை உங்கள் வீட்டிற்கு வந்தது" என்று ஒருவர் கருத்து பதிவிட்டு இருந்தார். மேலும் பலர் நாயின் தைரியத்தை பாராட்டி பதிவிட்டு இருந்தனர்.