search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    டுவிட்டரில் தொடரும் பணி நீக்கம்: முன்னறிவிப்பின்றி 5500 ஒப்பந்த ஊழியர்களை நீக்கினார் எலான் மஸ்க்
    X

    டுவிட்டரில் தொடரும் பணி நீக்கம்: முன்னறிவிப்பின்றி 5500 ஒப்பந்த ஊழியர்களை நீக்கினார் எலான் மஸ்க்

    • முதல் கட்டமாக தலைமை பொறுப்பில் இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார்.
    • பிற துறைகளில் பணிபுரியும் அமெரிக்காவை தளமாக கொண்ட மற்றும் உலகளாவிய ஊழியர்களை இது பாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்தை தொழில் அதிபர் எலான் மஸ்க் ரூ.3.50 லட்சம் கோடிக்கு சமீபத்தில் கையகப்படுத்தினார்.

    திவாலாகி கொண்டு இருக்கும் நிறுவனத்தை சீரமைக்க அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.

    முதல் கட்டமாக தலைமை பொறுப்பில் இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அடுத்தப்படியாக 50 சதவீத பணியாளர்களை வேறு வழியில்லாமல் வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதன் காரணமாக 3,788 பேர் வேலை இழந்தனர்.

    இந்த நிலையில் மேலும் 5,500 ஒப்பந்த ஊழியர்களை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    ரியல் எஸ்டேட், மார்க்கெட்டிங், பொறியியல் மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் அமெரிக்காவை தளமாக கொண்ட மற்றும் உலகளாவிய ஊழியர்களை இது பாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×