search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை விட மோசமானது ஹமாஸ் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
    X

    'ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை விட மோசமானது ஹமாஸ்' - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

    • போர் 12-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • குழந்தைகளைக் கூட ஹமாஸ் அமைப்பினர் கொலை செய்துள்ளனர் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டார்.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் 12-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசிய ஜோ பைடன், இஸ்ரேலுடன் அமெரிக்கா துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.

    தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய நெதன்யாகு, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை விட ஹமாஸ் மிகவும் மோசமானது என்றார். கடந்த 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு 1,400 இஸ்ரேல் மக்களை கொன்றுள்ளது என்றும், குழந்தைகளைக் கூட ஹமாஸ் அமைப்பினர் கொலை செய்துள்ளனர் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டார்.

    மேலும் இந்த கடினமான சூழலில் இஸ்ரேலுக்கு வருகை தந்து தனது ஆதரவை தெரிவித்ததோடு, இஸ்ரேல் மக்களுக்கு என்றும் துணை நிற்போம் என உறுதியளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவிப்பதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×