search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அடேங்கப்பா, எவ்வளவு நீளம்? முடி வளர்ப்பில் கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண்
    X

    அடேங்கப்பா, எவ்வளவு நீளம்? முடி வளர்ப்பில் கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண்

    • மானிஸ் கடைசியாக 1990 பிப்ரவரியில் சிகை திருத்தும் நிலையம் சென்றார்
    • அர்கன் எண்ணெயை கொண்ட கண்டிஷனரை பயன்படுத்தி வந்தார்

    அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னிசி மாநிலத்தின் நாக்ஸ்வில் பகுதியை சேர்ந்தவர் 58 வயதான டேமி மானிஸ்.

    1980களிலும் 1990களிலும் தலையின் முன்புறத்திலும், பக்கவாட்டிலும், உச்சியிலும் குறைவாகவும், பின்புறத்தில் மட்டும் அதிக நீளமாகவும் இருக்கும் ஒரு வகை சிகை வளர்ப்பு முறை பிரபலமாக இருந்தது. அப்போதைய நடிகர்களில் பேட்ரிக் ஸ்வேஸ், இசைத் துறையை சேர்ந்த பில்லி ரே சைரஸ் உட்பட பல பிரபலங்கள் இந்த சிகை முறையை மேலும் பிரபலப்படுத்தினர்.

    1985-இல் வெளியான "வாய்சஸ் கேரி" எனும் இசை ஆல்பத்தின் டில் டியூஸ்டே பாடல் வீடியோவை கண்டு "முல்லெட்" என அழைக்கப்படும் இந்த சிகை வடிவத்தின் மீது மானிஸ் ஆர்வம் கொண்டார். தானும் இதே போன்று சிகையை நீளமாக வளர்த்து கொள்ள வேண்டும் என விரும்பினார்.

    இதன் காரணமாக 1990 பிப்ரவரி மாதம், அவர் கடைசியாக ஒரு முறை சிகை திருத்தும் நிலையத்திற்கு சென்று இதற்கேற்றவாறு சில மாற்றங்களை செய்து கொண்டார். அதற்கு பிறகு அவர் தனது சிகையின் அளவை வெட்டி கொள்ளவோ, திருத்தி கொள்ளவோ இல்லை. தற்போது இவரது சிகையின் நீளம் 5 அடி 8 அங்குலம் (172.7 சென்டிமீட்டர்).

    உலகில் நிகழ்த்தப்படும் அனைத்துவிதமான சாதனைகளையும் பதிவு செய்யும் கின்னஸ் உலக சாதனை பதிவேட்டிற்கு மானிஸ் தனது சிகையின் நீளம் தெரியும்விதமாக ஒரு வீடியோவை அனுப்பினார். இதனையடுத்து, கின்னஸ் அமைப்பு, உலகிலேயே முல்லெட் வகை சிகைகளில் மிக நீளமான சிகை உள்ளவராக மானிஸை அதிகாரபூரமாக அறிவித்தது. 2024 கின்னஸ் புத்தகத்தில் இது வெளியிடப்படும்.

    இத்தகைய நீளத்திற்கு காரணம், வழிவழியாக தான் வந்த குடும்ப மரபுகளின் அடிப்படை என்றும், தென்மேற்கு மொரோக்கோ நாட்டின் காடுகளில் உள்ள அர்கன் மர எண்ணெயை மூலப்பொருளாக கொண்ட ஒரு கண்டிஷனரை மட்டுமே தான் உபயோகிப்பதாகவும் மானிஸ் தெரிவித்தார்.

    உலகெங்கிலும் பெரும்பான்மையான பெண்கள், தங்கள் சிகையின் நீளம் அதிகரித்து கொள்ள பல்வேறு வழிமுறைகளை தேடும் நிலையில், மானிசின் புகைப்படம் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

    Next Story
    ×