search icon
என் மலர்tooltip icon

    துருக்கி

    • துருக்கியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற வேண்டும்.
    • எர்டோகனுக்கு எதிராக 6 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியினர் பொது வேட்பாளராக குடியரசு கட்சி தலைவர் கெமால் கிலிக்சதரோ களம் இறக்கப்பட்டுள்ளார்.

    அங்காரா:

    துருக்கியில் கடந்த 15-ந்தேதி அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் தய்யீப் எர்டோகனும், எதிர்க் கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கெமால் கிலிக்சத்ரோ இடையே கடும் போட்டி நிலவியது.

    துருக்கியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற வேண்டும்.

    இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் எர்டோகன் 49.50 சதவீத வாக்குகளும், கெமால் கிலிக்சதரோ 44.79 சதவீத வாக்குகளும் பெற்றனர். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 28-ந்தேதி (இன்று) அதிபர் தேர்தலின் 2-வது சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி இன்று துருக்கியில் அதிபர் தேர்தலின் 2-வது சுற்று வாக்குப் பதிவு நடந்தது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    எர்டோகன் கடந்த 2003-ம் ஆண்டு முதல் துருக்கியில் ஆட்சி செய்து வருகிறார். அங்கு 20 ஆண்டுக்கு பிறகு அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. எர்டோகனுக்கு எதிராக 6 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியினர் பொது வேட்பாளராக குடியரசு கட்சி தலைவர் கெமால் கிலிக்சதரோ களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் எர்டோகனுக்கு கடும் சவால் அளித்து வருகிறார்.

    2003 முதல் 2014-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த எர்டோகன், அப்ப தவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமான அதிபர் பதவியை கொண்டு வந்தார். அவர் சர்வாதிகாரி போல் செயல்படுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    • துருக்கி அதிபர் தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை.
    • இதனால் வரும் 28-ம் தேதி அதிபர் தேர்தலின் 2-வது சுற்று நடைபெற உள்ளது.

    அங்காரா:

    துருக்கியில் அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் எர்டோகனும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் கெமால் கிலிக்டரோக்லுவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    துருக்கியை பொறுத்தவரை அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற வேண்டும். இதில் அதிபர் எர்டோகன் சுமார் 49.50 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளார். எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட கெமால் கிலிக்டரோக்லு 44.79 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வரும் 28-ம் தேதி அதிபர் தேர்தலின் 2-வது சுற்று நடைபெறும் என அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் கடந்த 2003-ம் ஆண்டு முதல் அங்கு ஆட்சி செய்து வருகிறார்.
    • 2016-ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்ற முற்பட்டபோது அதனை முறியடித்து தனது பதவியை எர்டோகன் தக்க வைத்துக் கொண்டார்.

    அங்காரா:

    துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் (வயது 69) கடந்த 2003-ம் ஆண்டு முதல் அங்கு ஆட்சி செய்து வருகிறார். 2003-ல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட எர்டோகன் 2014-ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார். ஆனால் 2014-ல் பிரதமர் பதவி கலைக்கப்பட்டு நாட்டின் உச்சபட்ச அதிகாரமாக அதிபர் பதவி கொண்டு வரப்பட்டது.

    இதனையடுத்து 2014-ம் ஆண்டு எர்டோகன் துருக்கி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமுதல் கடந்த 9 ஆண்டுகளாக அவர் அங்கு அதிபராக செயல்பட்டு வருகிறார்.

    2016-ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்ற முற்பட்டபோது அதனை முறியடித்து தனது பதவியை எர்டோகன் தக்க வைத்துக் கொண்டார். அதன்பிறகு தனது அதிகாரத்தை மேலும் அதிகப்படுத்திக் கொண்டார். இவ்வாறு பிரதமர், அதிபர் என 20 ஆண்டுகளாக எர்டோகன் துருக்கியில் ஆட்சி செய்து வருகிறார்.

    தற்போது வேகமாக அதிகரித்து வரும் பண வீக்கம், நிலநடுக்கத்தின்போது போதுமான மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு என பொதுமக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் சர்வாதிகார ஆட்சி நடத்துவதாகவும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

    இந்த நிலையில் துருக்கியில் நேற்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. சர்வாதிகார நாடு என்ற நிலையை மாற்றுவதற்காக அங்குள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எர்டோகனுக்கு எதிராக கெமல் கிலிக்டரோக்லு தலைமையில் போட்டியிட்டனர். அதேபோல் எம்.பி.க்களுக்கான தேர்தலும் நேற்று துருக்கியில் நடந்தது.

    இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான கெமல் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த எர்டோகனின் சர்வாதிகாரம் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பில் பலர் உள்ளதாக கூறப்படுகிறது.

    • துருக்கியில் டீக்கடையில் ஒரு தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அங்காரா:

    துருக்கி நாட்டின் இஸ்மிர் மாகாணம் மென்டெரெஸ் பகுதியில் உள்ள டீக்கடையில் சிலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்ற இரு தரப்பினர் கடன் கொடுக்கல் வாங்கல் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். இதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தனர். இதனால் அங்கிருந்தோர் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    டீக்கடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 61 ஆவது சர்வதேச மாநாடு துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றது.
    • உக்ரைன் எம்பி கையில் வைத்திருந்த தேசிய கொடியை பறித்துக் கொண்டு, அங்கிருந்து செல்ல முயன்றார்.

    உக்ரைன் நாட்டு எம்பியிடம் இருந்து அந்நாட்டு கொடியை பறிக்க முயன்ற ரஷிய பிரதிநிதியால் சர்வதேச மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 61 ஆவது சர்வதேச மாநாடு துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றது. இதில் ரஷியா, உக்ரைன் மட்டுமின்றி அல்பேனியா, அர்மேனியா, அசர்பஜைன் உள்பட உறுப்பு நாடுகள் பங்கேற்றன.

    சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட உக்ரைன் எம்பி ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கை தனது நாட்டு கொடியை கையில் வைத்திருந்தார். இதனை பார்த்த ரஷிய பிரதிநிதி உக்ரைன் எம்பி கையில் வைத்திருந்த தேசிய கொடியை பறித்துக் கொண்டு, அங்கிருந்து செல்ல முயன்றார். பின் ரஷிய பிரதிநிதியை துரத்திச் சென்ற உக்ரைன் எம்பி அவர் கையில் வைத்திருந்த உக்ரைன் கொடியை மீண்டும் பறித்துக் கொண்டார்.

    மேலும் ரஷிய பிரதிநிதி செயலுக்கு உடனடியாக தக்க பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் எம்பி அவரது முகத்தில் கடுமையாக தாக்கினார். இருவரிடையே ஏற்பட்ட மோதலை அங்கிருந்த மற்ற அதிகாரிகள் தலையிட்டு தடுத்தனர்.

    ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச மாநாடு ஒன்றில் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் மோதலில் ஈடுபட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • 30 வயது நிரம்பிய ஆர்குட் பேசால் என்ற பாராகிளைடர் உயிரிழந்தார்.
    • மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    துருக்கியின் பெத்தியே மாவட்டத்தில் கடந்த மாதம் 29ம் தேதி பாராகிளைடர்கள் 2 பாராசூட்களில் பறந்து சாகசம் செய்தனர். ஒரு பாராசூட்டில் 2 பேரும், மற்றொரு பாராசூட்டில் ஒருவரும் பயணித்தனர். பாராசூட்கள் கீழ் நோக்கி வந்தபோது தரையை தொடுவதற்கு சுமார் 20 மீட்டர் தூரம் இருந்த நிலையில், பாராசூட்கள் ஒன்றுடன் ஒன்று சிக்கிக்கொண்டன. இதனால் இரண்டு பாராசூட்களும் நிலைதடுமாறி அருகில் உள்ள ஓட்டல் கட்டிடத்தில் மோதி, நீச்சல் குளத்தின் அருகில் விழுந்தன.

    இந்த விபத்தில் 30 வயது நிரம்பிய ஆர்குட் பேசால் என்ற பாராகிளைடர் உயிரிழந்தார். தாமஸ் அயிட்கென், அன்சால் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரிட்டனைச் சேர்ந்த தாமஸ் அயிட்கெனை கைது செய்தனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், பாராசூட்கள் மோதலுக்கான காரணம் அலட்சியமாக தரையிறக்கப்பட்டதா? என்பதுபோன்ற கோணங்களில் துருக்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சீன தைபேயின் சென் யி ஹூன்- சென் ஷிக் லுன் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.
    • 26 வயதான ஜோதி சுரேகா இந்த போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

    துருக்கியில் உள்ள அண்டால்யா நகரில் உலகக் கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம்-ஒஜாஸ் தியோதால் இணை 159-154 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேயின் சென் யி ஹூன்- சென் ஷிக் லுன் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.

    இதேபோல் காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் 149-146 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் சாரா லோபெஸ்சை (கொலம்பியா) வீழ்த்தி முதல்முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    26 வயதான ஜோதி சுரேகா இந்த போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

    • துருக்கியில் உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
    • தனிநபர் பெண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்.

    அன்டல்யா:

    துருக்கியில் உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தனிநபர் பெண்களுக்கான இறுதிப்போட்டி இன்று நடந்தது.

    இதில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள் கொலம்பியாவின் சாரா லோபசை 149-146 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார்.

    ஏற்கனவே இந்தியாவின் ஜோதி சுரேகா அரையிறுதியில் பிரிட்டன் வீராங்கனையை வீழ்த்தினார்.

    • துருக்கியில் உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
    • கலப்பு அணிகளுக்கான இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி தங்கம் வென்றது.

    அன்டல்யா:

    துருக்கியில் உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. கலப்பு அணிகளுக்கான இறுதிப்போட்டி இன்று நடந்தது.

    இதில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், ஓஜாஸ் டியோடால் ஜோடி, சீன தைபே ஜோடியை 159-154 என்ற கணக்கில் வீழ்த்தி

    தங்கம் வென்றது.

    கடந்த ஆண்டு பாரிசில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், அபிஷேக் வர்மா ஜோடி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி டைபிரேக்கர் முடிவில் 5-4 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
    • அரைஇறுதியில் 6-2 என்ற கணக்கில் நெதர்லாந்தையும் எளிதில் தோற்கடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 1) போட்டி துருக்கியில் உள்ள அண்டால்யா நகரில் நடந்து வருகிறது. இதில் ரிகர்வ் அணிகள் பிரிவில் அதானு தாஸ், தீரஜ், தருண்தீப் ராய் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணி நேரடியாக 2-வது சுற்றில் களம் கண்டது.

    இதில் இந்திய அணி டைபிரேக்கர் முடிவில் 5-4 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து கால்இறுதியில் 6-2 என்ற கணக்கில் சீன தைபேயையும், அரைஇறுதியில் 6-2 என்ற கணக்கில் நெதர்லாந்தையும் எளிதில் தோற்கடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    ரிகர்வ் அணிகள் பிரிவில் இந்திய அணி கடந்த 9 ஆண்டுகளில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் தங்கப்பதக்கத்திற்கான இறுதிசுற்றில் இந்திய அணி, சீனாவை சந்திக்கிறது. இதே போல் காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் அரைஇறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நில நடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
    • நில நடுக்கத்தால் பெரும் துயரத்துக்கு உள்ளான மக்களுக்கு மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது பீதியை உண்டாக்கி இருக்கிறது.

    அப்சின்:

    துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி கடந்த பிப்ரவரி 6-ந்தேதி சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவான இந்த நில நடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.

    நில நடுக்கத்தில் துருக்கி-சிரியாவில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பெறும் பாதிப்பை சந்தித்துள்ள துருக்கி, அதிலிருந்து மெல்ல மீண்டு வருகிறது.

    இந்த நிலையில் துருக்கியில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை அந்நாட்டின் அப்சின் நகரில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கே இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானதாக அமெரிக்க புவிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    10 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது. நில நடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி உடனடியாக தகவல் வெளியாக வில்லை. ஏற்கனவே நில நடுக்கத்தால் பெரும் துயரத்துக்கு உள்ளான மக்களுக்கு மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது பீதியை உண்டாக்கி இருக்கிறது.

    • படுகாயம் அடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகள் காரில் பயணம் செய்தனர். அவர்கள் துருக்கி- கிரீஸ் எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது அங்கு போலீசாரை கண்டனர். எனவே அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக தவறான பக்கத்தில் அதாவது சாலையின் மறுபுறமாக சென்றனர். அப்போது எதிரே வந்த மற்றொரு கார் எதிர்பாராதவிதமாக மோதினர்.

    இதில் காரில் இருந்த டிரைவர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×