search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நேபாளத்தில் அடுத்தடுத்து 2 முறை நில நடுக்கம் பதிவு
    X

    நேபாளத்தில் அடுத்தடுத்து 2 முறை நில நடுக்கம் பதிவு

    • பாக்லுங் மாவட்டத்தில் 2 முறை நிலநடுக்கம் பதிவானது.
    • பாதிப்பு தொடர்பாக விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

    காத்மண்டு:

    நேபாள நாட்டில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாக்லுங் மாவட்டத்தில் நள்ளிரவு ஒரு மணி முதல் 2 மணிக்குள் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    அதிகாரி சௌர் பகுதியில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவிலும், குங்கா பகுதியில் 2வதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவிலும் பதிவானது. இரண்டு முறை பதிவான நிலநடுக்கங்களால் உயிர் சேதமோ, வீடுகள், கட்டிடங்கள் குறித்த சேதமோ குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

    இதனிடையே நேபாள நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியிலும் அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 3.1 என்ற அளவில் பதிவானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×