search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் கடும் போராட்டத்திற்கு பின் 2-1 என வெற்றி பெற்றார்
    • 3-வது செட்டில் 9-11 என டைபிரேக்கரில் வெற்றி வாய்ப்பை இழந்தார்

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல்நிலை வீராங்கனையான ஸ்வியாடெக் (போலந்து) 4-வது சுற்றில் 14-வது வரிசையில் உள்ள பெலிண்டா பென்சிக்கை எதிர்கொண்டார். இதில் ஸ்வியாடெக் 6-7 (4-7), 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் 4-வது வரிசையில் இருக்கும் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-1, 6-3 என்ற நேர்செட் கணக்கில் உக்ரைனை சேர்ந்த லெசியா சுரென்கோவை வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் வான்ட்ரூ சோவா (செக் குடியரசு), சுவிட்டோலினா (உக்ரைன்) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 19-வது வரிசையில் உள்ளவருமான அசரென்கா (பெலாரஸ்) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். அவர் 2-6, 6-4, 6(9)-7(11) என்ற செட் கணக்கில் சுவிட்டோலினாவிடம் தோற்றார்.

    கால்இறுதி ஆட்டத்தில் ஸ்வியாடெக்- சுவிட்டோலினா, பெகுவா- வாண்ட்ரூ சோவா மோதுகிறார்கள்.

    23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் போலந்தை சேர்ந்த 17-ம் நிலை வீரர் ஹூபர்ட் ஹூர்காசை எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 7-6(8-6), 7-6(8-6) என்ற செட் கணக்கில் முன்னணியில் இருந்தபோது ஆட்டம் நிறுத்தப்பட்டது. இரவு 11 மணி ஆனதால் போட்டி நிறுத்தப்பட்டது. இன்று அந்த ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.

    8-வது வரிசையில் உள்ள சின்னர் (இத்தாலி) 7-6 (7-4), 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கொலம்பியாவை சேர்ந்த டேனியல் கேலனை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்ற ஆட்டத்தில் ரூப்லெவ், ரோமன் சபியுலின் (ரஷியா), வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    • இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், மன்னர் சார்லஸ் III ஆகியோரை சந்திக்க உள்ளார்.
    • நேட்டோவில் உக்ரைனை இணைப்பது உள்ளிட்ட குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு.

    உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு லிதுவேனியா தலைநகர் வில்னியசில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில், நேட்டோ உறுப்பினராக உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இங்கிலாந்திற்கு சென்றடைந்தார்.

    நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ள இருக்கும் ஜோ பைடன், லிதுவேனியாவுக்குப் புறப்படுவதற்கு முன்பு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், மன்னர் சார்லஸ் III ஆகியோரை சந்திக்க உள்ளார்.

    அப்போது, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்திப்பின்போது உக்ரைன் போர் நிலவரம், நேட்டோவில் உக்ரைனை இணைப்பது உள்ளிட்ட குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இங்கிலாந்து வெற்றிபெற 251 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
    • ஹாரி புரூக் பொறுப்புடன் ஆடி அரை சதமடிக்க இங்கிலாந்து 254 ரன்கள் எடுத்து வென்றது.

    லண்டன்:

    ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்கள் எடுத்தது. மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 118 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 5 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடி 80 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    26 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டிராவிஸ் ஹெட் 77 ரன்னும், கவாஜா 43 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பிராட், கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டும், மார்க் வுட், மொயீன் அலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை ஆடியது. 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்தது

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. அணியின் எண்ணிக்கை 42 ஆக இருந்தபோது பென் டக்கெட் 23 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மொயீன் அலி 5 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய சாக் கிராலி 44 ரன்னில் வெளியேறினார்.

    அவரை தொடர்ந்து ஜோ ரூட் 21 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய ஹாரி புரூக் அரை சதமடித்து ஆறுதல் அளித்தார். 75 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இறுதியில், இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 254 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கிறிஸ் வோக்ஸ் 32 ரன்னும், மார்க் வுட் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தற்போது ஆஷஸ் தொடரில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.

    • இங்கிலாந்தைச் சேர்ந்த ஈசி ஜெட் விமான நிறுவனம் பிரபலமானது.
    • பயணிகள் எடை அதிகமாக உள்ளதாகக் கூறி 19 பயணிகளை இறக்கிவிட்டது.

    லண்டன்:

    ஸ்பெயினில் இருந்து லிவர்பூல் நகருக்கு பிரிட்டனைச் சேர்ந்த ஈசி ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் கடந்த 5-ம் தேதி புறப்பட தயாராக இருந்தது.

    விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் அங்கு தட்பவெப்ப நிலை மாறியதால் கடும் காற்றும் வீசியது. அதிவேகமாக வீசிய காற்று மற்றும் குறுகிய ரன்வே கொண்ட விமான நிலையம் என்பதால் அங்கு விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.

    பயணிகள் முழுவதுமாக இருந்தநிலையில், அங்கு நிலவிய காலச்சூழலுக்கு விமானம் இவ்வளவு எடையுடன் டேக் ஆப் ஆவது கடினம் என்பதை விமானி உணர்ந்தார். இதையடுத்து விமான நிறுவனத்திடம் பேசிய விமானி, விமானத்தில் உள்ள பயணிகளில் 20 பேர் இறங்கினால் எடை குறைந்து விமானம் சிக்கலின்றி டேக் ஆப் ஆகிவிடும் என்றார்.

    விமானத்திலிருந்து யார் இறங்க வேண்டும் என்பதை பயணிகளே முடிவுசெய்து கொள்ளலாம் என வலியுறுத்தினார். பயணிகளிடம் விமானி கோரிக்கை வைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    விமானத்தில் இருந்து இறங்கும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும், ஊக்கத்தொகையாக 500 யூரோக்கள் அளிக்கப்படும் என விமான நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து பயணிகளில் 19 பேர் விமானத்தில் இருந்து இறங்க சம்மதம் தெரிவித்தனர். அதன்பின், 2 மணி நேர தாமதத்திற்குப் பிறகு விமானம் பத்திரமாக டேக் ஆப் ஆகி புறப்பட்டுச் சென்றது.

    இதுகுறித்து விமானம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வானிலை நிலைக்கு ஏற்றவாறு விமானத்தின் எடையில் சில வரைமுறைகள் கொண்டு வருவது வழக்கமான நடைமுறைதான். பாதுகாப்பு காரணங்களுக்காக இதே முறையைதான் அனைத்து விமானங்களும் பின்பற்றுகின்றன என தெரிவித்துள்ளது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று போட்டி நடந்தது.
    • இதில் இத்தாலி வீரர் பெரெட்டினி, ஜெர்மனி வீரர் ஸ்வரேவை தோற்கடித்தார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவரேவ், இத்தாலி வீரர் மேட்டி பெரெட்டினியை எதிர் கொண்டார்.

    இதில் பெரெட்டினி 6-3, 7-௬ (7-4), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • 3-வது சுற்றில் மூன்று கிராண்ட் சிலாம் பட்டம் பெற்ற வாவ் ரிங்காவை (சுவிட்சர் லாந்து) எதிர் கொண்டார்.
    • 5-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    லண்டன்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், தர வரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் மூன்று கிராண்ட் சிலாம் பட்டம் பெற்ற வாவ் ரிங்காவை (சுவிட்சர் லாந்து) எதிர் கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    7-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லேவ் (ரஷியா), 8-ம் நிலை வீரரான சின்னர் (இத்தாலி) ஆகியோரும் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். 2-வது சுற்று ஆட்டங்களில் மெட்வதேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்) உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

    உலகின் முதல் நிலை வீராங்கனையான இகாஸ்வியா டெக் (போலந்து) 3-வது சுற்றில் குரோஷியாவை சேர்ந்த 30-வது வரிசையில் உள்ள பெட்ரா மேட்ரிச்சை எதிர்கொண்டார். இதில் ஸ்வியா டெக் 6-2, 7-5 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 4-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீராங்கனை எலிசா பெட்டாவை வீழ்த்தினார். விக்டோரியோ அசரென்கா (பெலாரஸ்), சுவிட்டோலினா (உக்ரைன்), ஆகியோரும் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    5-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். 32-ம் நிலை வீராங்கனை மரியா பவுஸ்கோவா (செக் குடியரசு) 7-6, (7-4), 4-6, 7-5 என்ற கணக்கில் கார்சியாவை தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    • கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் டிமிட்ரோவ் (பல்கேரியா) சக நாட்டு வீரர் இவாஷ்காவுடன் மோதினார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீராங்கனையான எலெனா ரைபகினா (கஜகஸ்தான்)-அலிஸ் கார்னெட் (பிரான்ஸ்) மோதினர். இதில் நடப்பு சாம்பியனான ரைபகினா 6-2, 7-6 (7-2) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாலை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் பிரான்சின் கார்சியா 3-6, 6-4, 7-6 (10-6) என்ற செட் கணக்கில் கனடாவின் பெர்னான்டசை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் பென்சிக் (சுவிட்சர்லாந்து), வெக்கிச் (குரோஷியா), லினெட் (போலந்து) பொடா போலா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் டிமிட்ரோவ் (பல்கேரியா) சக நாட்டு வீரர் இவாஷ்காவுடன் மோதினார். அதில் டிமிட்ரோவ் 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்ற ஆட்டங்களில் தியாபோ (பிரான்ஸ்), பெல்லா (அர்ஜென்டினா), டேவிட் கோபின் (பெல்ஜியம்), லாஸ்லோ டிஜெரே (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், இங்கிலாந்து அணி 195 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    ஹெட்டிங்லே: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கவாஜா களமிறங்கினர். டேவிட் வார்னர் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். கவாஜா 13 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த லபுசென் 21 ரன்னிலும், ஸ்மித் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. 5வது விக்கெட்டுக்கு இணைந்த டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் ஜோடி நிதானமாக ஆடி 155 ரன்களை சேர்த்தது.

    மார்ஷ் சதமடித்தார். தேநீர் இடைவேளைக்கு பிறகு மிட்செல் மார்ஷ் 118 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 39 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது.

    இதில் தொடக்க வீரர்களாக சாக் கிராலி, பென் டக்கெட் விளையாடினர். ஆனால், பென் டக்கெட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து வந்த ஹேரி புரூக்கும் 3 ரன்களில் அவுட்டானார். பின்னர் ஜோ ரூட் களமிறங்கினார். சாக் கிராலி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் போடப்பட்ட 19 ஓவர்களுக்கு 3 விக்கெட்டு இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.

    இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், இங்கிலாந்து அணி 195 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஹெட்டிங்லே:

    ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கவாஜா களமிறங்கினர். டேவிட் வார்னர் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். கவாஜா 13 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த லபுசென் 21 ரன்னிலும், ஸ்மித் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.

    5வது விக்கெட்டுக்கு இணைந்த டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் ஜோடி நிதானமாக ஆடி 155 ரன்களை சேர்த்தது. மார்ஷ் சதமடித்தார்.

    தேநீர் இடைவேளைக்கு பிறகு மிட்செல் மார்ஷ் 118 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 39 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்குகிறது.

    • ஏழு ஆண்டுகளின் வருவாயுடன் ஒப்பிடும்போது வாடகை மிகவும் உயர்ந்திருக்கிறது.
    • முழு நேர வேலையில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணின் வருவாயில் 3ல் 2 பங்கு வாடகைக்கு செலவாகிறது.

    இந்தியாவில் மட்டுமல்லாது, உயர்ந்து வரும் வீட்டு வாடகை என்பது உலகெங்கும் ஒரு பிரச்சனையாகி வருகிறது.

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வீட்டு வாடகை மிகவும் அதிகரித்து வருகிறது. சராசரி சம்பளம் வாங்கும் ஒரு பெண் இந்த உயர்வை ஈடு கட்ட வேண்டுமென்றால், தற்போது வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு வாங்கினால்தான் சமாளிக்க இயலும் எனும் நிலை உருவாகியுள்ளது.

    பாலின பாகுபாட்டால் ஒரே வேலைக்கு ஆண்களை விட பெண்கள் வாங்கும் சம்பளம் குறைவு.

    புளூம்பர்க் செய்திக்கான ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல்ஸ் எனும் அமைப்பு அளிக்கும் தகவல்களின்படி, அங்கு குடியிருப்புகளுக்கான வாடகை சமீபத்திய மாதங்களில் பெரிதும் அதிகரித்துள்ளது. ஏழு ஆண்டுகளின் வருவாயுடன் ஒப்பிடும்போது வாடகை மிகவும் உயர்ந்திருக்கிறது. மே மாத கணக்கின்படி, கிரேட்டர் லண்டன் பகுதி முழுவதும் சராசரி வாடகை சுமார் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் என அதிகரித்திருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 13% அதிகமாகும். இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். முழு நேர வேலையில் ஈடுபட்டுள்ள ஒரு பெண்ணின் வருவாயில் 3ல் 2 பங்கு வாடகைக்கு செலவாகிறது.

    "ஊதிய உயர்வு தேக்கம் மற்றும் அதிகரிக்கும் வாடகையினால் தங்களின் வருமானத்தின் பெரும்பகுதி பறிபோவதால் ஆண், பெண் இருபாலரும் மிகவும் சிரமப்படுகின்றனர்" என்று ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல்ஸின் ஆராய்ச்சித் தலைவர் அனீஷா பெவரிட்ஜ் தெரிவிக்கிறார்.

    சராசரி 5 ஆண்டு நிலையான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.01% ஆக உயர்ந்த பிறகு, நாட்டில் அடமான செலவுகள் 14 ஆண்டு உச்சத்தை நெருங்கியிருக்கிறது.

    வரும் காலங்களில் குறைந்தளவே புதிய வீடுகளுக்கான தேவை இருக்கும் என்பதால், கட்டுமான நிறுவனங்கள் புதிய வீடுகளை கட்டுவதை கணிசமாக குறைத்துள்ளன.

    கடந்த 10 ஆண்டுகளாக, ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதிகளைத் தவிர நாட்டின் பிற பகுதிகளில் பெண்கள் பெறும் சம்பளத்தில் 30 சதவிகிதத்திற்கும் குறைவாக வாடகை இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல்நாட்டு கூட்டு முயற்சி தேவைப்படுவதாக பிரிட்டனின் தூதர் பார்பரா உட்லேண்ட் கூறியிருக்கிறார்.
    • செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு உரிமம் வழங்கும் அமைப்பை உருவாக்க ஓபன்ஏஐ ஆலோசனை வழங்கி உள்ளது.

    செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து உலகெங்கிலும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் வரக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை, முதல் முறையாக ஒரு கூட்டத்தை நடத்த இருக்கிறது. இந்த கூட்டத்தை பிரிட்டன் அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது.

    செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டினால் வரக்கூடிய அனுகூலங்களை உணர்ந்திருந்தாலும், அவற்றை அணு ஆயுதங்களை கட்டுப்படுத்த பயன்படுத்தும் போது அதனால் வரக்கூடிய ஆபத்துக்கள் குறித்தும் கவலை கொள்ள வேண்டியுள்ளதால் இந்த கூட்டம் பிரிட்டனால் நடத்தப்படுகிறது.

    "விஞ்ஞானிகளும், நிபுணர்களும், அணுசக்தியால் ஏற்படக்கூடிய போர் அபாயத்திற்கு இணையாக செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என அறிவித்து, இதனை கட்டுப்படுத்தும் விதமாக செயல்பட உலகிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்" என்று ஐ.நா. தலைவர் கூறியிருக்கிறார்.

    செப்டம்பரில் செயற்கை நுண்ணறிவு குறித்த ஒரு ஆலோசனைக் குழுவை நியமிக்க திட்டமிருப்பதாகவும் ஐ.நா. பொதுச்செயலாளர், அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்தார்.

    "செயற்கை நுண்ணறிவு விளைவிக்கப்போகும் சாதக, பாதகங்களை குறித்து தீர்மானிக்க ஒரு பல்நாட்டு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது" என பிரிட்டனின் தூதர் பார்பரா உட்வார்ட் கூறியிருக்கிறார்.

    ஓபன்ஏஐ (OpenAI) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறும்போது, "அமெரிக்க அல்லது உலகின் சில நாடுகளின் கூட்டு முயற்சியால் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு உரிமம் வழங்கவும், தேவைப்பட்டால் அந்த உரிமத்தை ரத்து செய்யவும் அதிகாரம் உள்ள ஒரு அமைப்பை உருவாக்கலாம்" என ஆலோசனை வழங்கியுள்ளார்.

    பிரிட்டன் பிரதம மந்திரி ரிஷி சுனக் கூறுகையில், "உலகளாவிய பலதரப்பு விவாதத்தை நாங்கள் நடத்த முடியும். இதற்காக இந்த ஆண்டின் பிற்பகுதியில் செயற்கை நுண்ணறிவு பற்றிய உச்சிமாநாட்டை பிரிட்டன் நடத்தும்" என்று தெரிவித்தார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • முதல் சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக்கும், சீனாவின் லின் ஜூவும் மோதினர்.

    பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் ஸ்வியாடெக் முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் மழை குறுக்கிட்டடால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது. அதன்பின் மைதானத்தின் மேற்கூரை மூடப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது.

    இறுதியில், இகா ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வென்று 2-வது சுற்றை எட்டினார்.

    மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் விக்டோரியா அசரென்கா, சீனாவின் யு யுவானைச் சந்தித்தார்.

    இதில் அசரென்கா 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    ×