search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்கள் இடையே பிளவை ஏற்படுத்த காலிஸ்தான் குழுக்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சீக்கியர்களிடையே பதற்றத்தை உருவாக்கி இந்தியாவுக்கு எதிராக உணர்வுகளை தூண்டுகின்றன.

    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் கைது செய்ய முயற்சித்ததை கண்டித்து நடந்த போராட்டத்தில் இந்திய தூதரகத்தில் இருந்த தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்கள் இடையே பிளவை ஏற்படுத்த காலிஸ்தான் குழுக்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் காலின் ப்ரூம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காலிஸ்தான் குழுக்கள், இங்கிலாந்தில் அதிகாரத்தை விரும்புகின்றன. இதனால் சீக்கியர்களிடையே பதற்றத்தை உருவாக்கி இந்தியாவுக்கு எதிராக உணர்வுகளை தூண்டுகின்றன. அவர்கள் ஒரு பெரிய பிளவை உருவாக்க விரும்புகிறார்கள். இதனால் அதிக பதற்றம் உருவாக்கப்படுகிறது. இது இறுதியில் அதிகார போராட்டத்திற்கு வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    • லண்டனில் ஜெகன்நாத் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்படுகிறது.
    • இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் இதுவரை கோவில் கட்ட அதிக நிதியை யாரும் வழங்கியதில்லை.

    லண்டன்:

    ஒடிசாவை சேர்ந்தவர் பிஸ்வநாத் பட்நாயக். தொழிலதிபர். பைனஸ்ட் கம்பெனியின் நிறுவனரான இவர் லண்டனில் கோவில் கட்ட ரூ.250 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இந்நிதியில் லண்டனில் ஜெகன்நாத் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்படுகிறது.

    அட்சய திருதியையொட்டி இந்த நிதியுதவியை அவர் வழங்கினார்.

    இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் இதுவரை கோவில் கட்ட அதிக நிதியை யாரும் வழங்கியதில்லை. இவர்தான் முதன்முதலில் ரூ.250 கோடி வழங்கி யுள்ளார். இந்த கோவில் கட்ட ரூ.70 கோடியில் 15 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. லண்டனின் புறநகரில் இந்த கோவில் கட்டப்படுகிறது.

    • அடுத்த மாதம் 6-ந்தேதி, மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா நடைபெறுகிறது.
    • கோஹினூர் வைரத்தின் எடை 105.6 கேரட்.

    லண்டன் :

    இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து, மக்களின் மனங்களையும் கவர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந் தேதியன்று ஸ்காட்லாந்தில் உள்ள பால் மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார்.

    அதைத் தொடர்ந்து அவரது மூத்த மகனும், பட்டத்து இளவரசருமான சார்லஸ் (வயது 73), அந்த நாட்டின் மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அவர் மன்னர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. அப்படியே அழைக்கப்படுகிறார்.

    அடுத்த மாதம் 6-ந் தேதி, மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா லண்டனில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது.

    இந்த முடிசூட்டும் விழாவில் மறைந்த ராணியும், தனது மாமியாருமான இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தைத்தான், ராணி கமீலா பார்க்கர் அணிவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அதை அவர் அணியப்போவதில்லை என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கிரீடத்துக்கு பதிலாக ராணி மேரி அணிந்திருந்த கிரீடத்தைத்தான் ராணி கமீலா பார்க்கர் அணியப்போகிறார் என உறுதியாகி இருக்கிறது.

    இந்த கோஹினூர் வைரம், இந்தியாவில் பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில், கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும். இதன் எடை 105.6 கேரட். இந்த வைரத்தை சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் வைத்திருந்தார் என்றும், அது 1857-ம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்குப் பின்னர் விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது மிகவும் விலை உயர்ந்ததாகும்.

    இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரத்தை இங்கு மீட்டுக்கொண்டு வர வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. ஆனால், இந்த வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து திட்டவட்டமாக அறிவித்து விட்டது. ஆனாலும் சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை.

    இந்த நிலையில்தான் ராணி கமீலா பார்க்கர், இந்த வைரம் பதித்த கிரீடத்தை அணிவதைத் தவிர்த்துள்ளார்.

    இதன் பின்னணி குறித்து பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

    *கோஹினூர் வைரம் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம் என்று அரண்மனை அறிந்து இருக்கிறது. எனவே முடிசூட்டும் விழாவில் ராணி கமீலா பார்க்கர் அந்தக் கிரீடத்தை அணிந்து, அது ஒரு சர்ச்சை ஆக வேண்டாம் என்று அரண்மனை நினைக்கிறது.

    * அடிப்படையில், கிரீடத்தில் உள்ள நகைகளைப் பற்றி தனி விவாதம் செய்யாமல், பாதுகாப்பான மற்றும் விவேகமான காரியத்தைச் செய்ய அரண்மனை முடிவு செய்துள்ளது.

    * முடிசூட்டும் விழா முடிந்தவரையில், பலதரப்பட்ட சமூக நம்பிக்கைகளையும் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் மன்னரின் விருப்பமாகத் தெரிகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மே 6-ந்தேதி மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது.
    • இந்த இந்திய ஓட்டல் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    லண்டன் :

    இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்த ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி அன்று ஸ்காட்லாந்து அரண்மனையில் மரணம் அடைந்தார். அதற்கு பிறகு, இங்கிலாந்தின் மன்னராக சார்லஸ் அரியணை ஏறினாலும், அதிகாரபூர்வமாக அவர் இதுவரை முடிசூட்டிக்கொள்ளவில்லை.

    அவரது முடிசூட்டு விழா அடுத்த மாதம் (மே) 6-ந்தேதி நடைபெறவுள்ளது. 70 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பாரம்பரிய விழா என்பதால் லண்டன் நகரம் இப்போதிலிருந்தே விழாக்கோலம் பூண்டு வருகிறது.

    முடிசூட்டு விழாவின்போது லண்டன் வீதிகளில் சிறப்பு விருந்து, கச்சேரி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் லண்டனில் இயங்கி வரும் சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்திய ஓட்டல் ஒன்று கவனம் பெற்று வருகிறது.

    லண்டனில் மையப்பகுதியில் கடந்த 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'வீராசாமி' ஓட்டல் இந்தியா-இங்கிலாந்து இடையிலான உணவு கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக ஆங்கிலோ-இந்திய உணவு வகைகளை வழங்கி வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓட்டலின் பின்னணியில் இருக்கும் பெண் தொழிலதிபர் கேமிலியா பஞ்சாபி மற்றும் இந்திய சமையல் வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளரான அனுதி விஷால் ஆகிய இருவரும் இணைந்து இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான சமையல் தொடர்புகளை கவனத்தில் கொள்ளும் விதமாக ஆங்கிலோ-இந்திய உணவு வகைகளை தயாரித்து வழங்கி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் டேங்கர் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • வாகன நெரிசல் மிக்க தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    லண்டன்:

    லண்டனில் கனெக்டிகட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அருகில் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து டேங்கர் லாரி மீது வேகமாக மோதியது.

    இதில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் டேங்கர் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

    வாகன நெரிசல் மிக்க தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீப்பற்றி எரிந்த டேங்கர் லாரியில் இருந்து கரும்புகை பரவி அந்த பகுதியே புகை சூழ்ந்து காணப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். படுகாய மடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாலத்தின் மீது டேங்கர் லாரி தீப்பற்றி எரியும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஆலிவர் டவுடன் தற்போது ரிஷி சுனக் அரசாங்கத்தில் கேபினட் அலுவலக அமைச்சராக பணியாற்றுகிறார்.
    • அலெக்ஸ் சாக் புதிய நீதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி என்பவரை கடந்த நவம்பரில் பிரதமர் ரிஷி சுனக் நியமித்தார்.

    இந்த விசாரணையின் அறிக்கையை பிரதமரிடம் கடந்த வியாழக்கிழமை ஆடம் டாலி சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வெளியாகவில்லை.

    இந்நிலையில், துணை பிரதமர் டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    டொமினிக் ராப் ராஜினாமா செய்ததை அடுத்து ஆலிவர் டவுடன் இங்கிலாந்து துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அதே அறிவிப்பில், சட்டமியற்றுபவர் அலெக்ஸ் சாக் புதிய நீதித்துறை அமைச்சராக நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    • இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா செய்தார்.
    • ரிஷி சுனக் அமைச்சரவையில் இருந்து விலகும் 3-வது நபர் டொமினிக் ராப் ஆவார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை மந்திரியுமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி என்பவரை கடந்த நவம்பரில் பிரதமர் ரிஷி சுனக் நியமித்தார். இந்த விசாரணையின் அறிக்கையை பிரதமரிடம் கடந்த வியாழக்கிழமை ஆடம் டாலி சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வெளியாகவில்லை.

    இந்நிலையில், துணை பிரதமர் டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, டொமினிக் ராப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விசாரணையில் ஏதேனும் கொடுமைப்படுத்துதல் கண்டறியப்பட்டால் ராஜினாமா செய்வதாக உறுதியளித்திருந்தேன். என் சொல்லைக் காப்பாற்றுவது முக்கியம் என்று நான் நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவியேற்ற பிறகு, அவரது அமைச்சரவையில் இருந்து விலகிய 3-வது முக்கிய நபர் டொமினிக் ராப் ஆவார்.

    • இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார்.
    • சேலை அணிந்து கொண்டு அவர் மாரத்தான் ஓடியது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

    இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். இவர் கைத்தறியிலான சம்புல்வரி வகை சேலை அணிந்து இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய மான்செஸ்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் ஓடி உள்ளார். சேலை அணிந்து கொண்டு அவர் மாரத்தான் ஓடியது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தனது மாரத்தான் அனுபவம் குறித்து மதுஸ்மிதா ஜெனா கூறுகையில், சேலை அணிந்து மாரத்தான் ஓடிய ஒரே நபர் நான் தான். இவ்வளவு நீண்ட தூரம் ஓடுவது ஒரு தொடர் வேலை.. ஆனால் சேலையில் இவ்வாறு செய்வது இன்னும் கடினமானது. முழு தூரத்தையும் 4.50 மணி நேரத்தில் முடிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    எனது பாட்டி, தாயார் எப்போதும் சேலை அணிந்திருந்ததால் அவர்களை பார்த்து இந்த ஆடையை தேர்ந்தெடுத்தேன். பெண்கள் சேலை அணிந்து கொண்டு ஓட முடியாது என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் முடிவு தவறானது என நிரூபித்துள்ளேன் என்றார். 

    • இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
    • பட்ஜெட்டில் குழந்தை பராமரிப்பாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    லண்டன் :

    இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குழந்தை பராமரிப்பாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. பிரபல குழந்தை பராமரிப்பு மையமான கோரு கிட்ஸ் நிறுவனத்தில் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி பங்குதாரராக உள்ளார். இந்த பட்ஜெட் அறிவிப்பு மூலம் அக்ஷதா மூர்த்தி பயனடையும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    இங்கிலாந்து நாடாளுமன்ற நடத்தை விதியின்படி, அவை நடடிவக்கை (பட்ஜெட்) மூலம் உறுப்பினர்கள் எந்த வகையில் பலனடைந்தாலும் அது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பது முக்கியமாகும். ஆனால் அக்ஷதாவின் வர்த்தக பலன்களை ரிஷி சுனக் மறைத்ததால், அவருக்கு எதிராக நாாளுமன்ற குழு விசாரணை தொடங்கி உள்ளது.

    இதைத்தொடர்ந்து மனைவியின் வர்த்தக தொடர்பை ரிஷி சுனக் வெளியிட்டு உள்ளார். தற்போது வெளியிடப்பட்டு உள்ள இங்கிலாந்து மந்திரிகளின் சொத்து பட்டியலில் ரிஷி சுனக் மனைவியின் வர்த்தக தொடர்புகள் சேர்க்கப்பட்டு உள்ளன.அதன்படி, 'பிரதமரின் மனைவி ஒரு முதலீட்டாளர். கேடமரன் வென்ச்சர்ஸ் யுகே லிமிடெட் என்ற மூலதன முதலீட்டு நிறுவனம் மற்றும் பல நிறுவனங்களில் நேரடி பங்குகளை அவர் வைத்திருக்கிறார்' என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மன்னர் சார்லசை நோக்கி வாலிபர் ஒருவர் முட்டை வீசினார்.
    • முட்டையை வீசிய பேட்ரிக் தெல்வெல்லை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கடந்த ஆண்டு வட கிழக்கு நகரமான யார்க்கிற்கு சென்றார். அவர் சாலையில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது மன்னர் சார்லசை நோக்கி வாலிபர் ஒருவர் முட்டை வீசினார். அந்த முட்டை, சார்லஸ் அருகே விழுந்தது. முட்டையை வீசிய பேட்ரிக் தெல்வெல்லை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    இதுதொடர்பாக வழக்கு யார்க் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவில் தலைமை மாஜிஸ் திரேட்டு நீதிபதி பால் கோல்ட்ஸ் பிரிங் தீர்ப்பு அளித்தார். அதில் பேட்ரிக் தெல்வெல்லை குற்றவாளி என்று அறிவித்த நீதிபதி, அவர் 100 மணிநேரம் ஊதியம் பெறாத சமூகப் பணிகளை செய்ய வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.

    • பரிசோதனையில் அவருக்கு 4-வது நிலை வாய் மற்றும் கழுத்து புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
    • 90 சதவீத நாக்கின் பகுதியை இழந்திருந்தார். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தை சேர்ந்த ஜெம்மா வீக்ஸ் என்ற 37 வயதான பெண், நாக்கில் புற்றுநோயால் பாதிக்கப் பட்டார்.

    அவருக்கு நாக்கில் வெள்ளை திட்டுக்கள் தோன்றின. பல ஆண்டுகளில் அந்த பிரச்சினையுடன் இருந்த அவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாக்கில் ஒரு பெரிய துளை உருவானது.

    இதனால் அவரால் சாப்பிட முடியவில்லை. பரிசோதனையில் அவருக்கு 4-வது நிலை வாய் மற்றும் கழுத்து புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதில் அவர் 90 சதவீத நாக்கின் பகுதியை இழந்திருந்தார். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    நாக்கின் பெரும்பகுதியை அகற்றிவிட்டு, அங்கு கையில் இருந்து திசு ஒட்டுதல்களை எடுத்து நாக்கில் பொருத்தப்படும் என்று தெரிவித்த டாக்டர்கள், மீண்டும் அவரால் பேச முடியாது என கூறினார்கள். இந்த அறுவை சிகிச்சையில் கை தசைகளை நாக்கில் வெற்றி கரமாக டாக்டர்கள் பொருத்தினார்கள். மீண்டும் பேச முடியாது என்று டாக்டர்கள் கூறியிருந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு சில நாட்களில் ஜெம்மாவால் பேச முடிந்தது. அவரை பார்க்க வந்த உறவினர்களிடம் ஹலோ என்று கூறினார்.

    இதுகுறித்து ஜெம்மா வீக்ஸ் கூறும்போது, "அறுவை சிகிச்சைக்கு பிறகு என்னால் பேசவே முடியவில்லை. அது அப்படியே இருக்கும் என்று டாக்டர்கள் நினைத்தனர். சில நாட்களில் என் வருங்கால கணவரும், மகளும் என்னை பார்க்க வந்தபோது அவர்களிடம் ஹலோ என்று கூறினேன். அந்த குரல் முன்பு போல் இல்லை. ஆனால் அது நல்ல முன் னேற்றமாக இருந்தது. உண்மையில் நான் பேசு வதை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியும் என்றார்.

    • இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.
    • இந்தக் கோலாகலத்தை காண ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தயாராகி வருகிறது.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின், அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியபோதும், அதிகாரபூர்வ முடிசூட்டு விழா பல மாதங்களாக நடைபெறாமலே இருந்து வந்தது.

    மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் (மே) 6-ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 1953-ம் ஆண்டு மறைந்த ராணி 2-ம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா நடந்தது. அதனை தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த பாரம்பரிய விழா நடைபெற இருக்கிறது. இந்தக் கோலாகலத்தை காண ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தயாராகி வருகிறது.

    சார்லசின் முடிசூட்டு விழாவுக்காக இங்கிலாந்து மன்னர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த 700 ஆண்டுகள் பழைமையான தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயார்படுத்தப்பட்டிருக்கிறது. மன்னர் 3-ம் சார்லஸ் பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல் ஏந்தி அந்த சிம்மாசனத்தில் அமர்வார். அதை தொடர்ந்து, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு மன்னர் ஆசீர்வதிக்கப்படுவார். அதன்பிறகு, புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் 3-ம் சார்லசுக்கு சூட்டப்படும்.

    மேலும், பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து கொண்டு, நாட்டு மக்களுக்கு புதிய மன்னர் சார்லஸ் உரையாற்றுவார். அன்றைய தினமே மன்னர் சார்லசின் மனைவியான கமிலாவும் இங்கிலாந்து ராணியாக முறைப்படி அறிவிக்கப்படுவார்.

    இதற்கிடையே, மன்னரின் முடிசூட்டு விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது.

    இந்நிலையில், இளவரசர் ஹாரி, மே 6-ம் தேதி தனது தந்தை 3-ம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

    ×