search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • விநாயகர் சதுர்த்தி இம்மாதம் 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • இதன் எடை 20 கிராம் உள்ளது.

    லண்டன் :

    விநாயகர் சதுர்த்தி இம்மாதம் 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இங்கிலாந்தில் உள்ள ராயல் தங்கசாலை, விநாயகர் உருவம் பொறித்த 24 காரட் சுத்த தங்கத்தில் தங்க கட்டியை வெளியிட்டுள்ளது. விநாயகர் காலடியில் தட்டு நிறைய லட்டுகள் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதன் எடை 20 கிராம் உள்ளது. விலை 1,110.80 பவுண்டு (ரூ.1 லட்சத்து 8 ஆயிரம்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த தங்க கட்டி, ராயல் தங்க சாலையின் இணையதளத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு, லட்சுமி உருவம் பொறித்த தங்கக்கட்டியை ராயல் தங்கசாலை வெளியிட்டு இருந்தது.

    மேற்கண்ட 2 கடவுள்களின் உருவங்களும் வேல்ஸ் பகுதியில் உள்ள சுவாமி நாராயணன் கோவிவிலை சேர்ந்த நிலேஷ் கபாரியா ஆலோசனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    • கலப்பு பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் இந்தியா மலேசியாவுடன் மோதியது.
    • இதில் 1-3 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியுற்று வெள்ளிப்பதக்கம் வென்றது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

    கலப்பு பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி சிங்கப்பூரை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. மலேசிய அணி தங்கப்பதக்கம் வென்றது.

    இதையடுத்து, இந்திய அணி 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

    • காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 9 பதக்கங்களை வென்றுள்ளது.
    • டேபிள் டென்னிசில் நைஜீரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிக்கு முன்னேறியது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

    முதல் போட்டியில் இந்தியாவின் ஹர்மித் தேசாய் - சத்யன் ஞானசேகரன் ஜோடி 11 - 6, 11 - 7, 11 - 7 என்ற கணக்கில் நைஜீரியா ஜோடியை

    இரண்டாவது போட்டியில் இந்தியாவின் சரத் கமல் 3-1 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தினார்.

    மூன்றாவது போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் 11 - 9, 4 - 11, 11 - 6, 11 - 8 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தினார்.

    இதன்மூலம் ஆண்கள் குழு டேபிள் டென்னிஸ் போட்டியில் நைஜீரியாவை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

    இறுதிப்போட்டியில் இந்திய அணி சிங்கப்பூர் அணியை எதிர்கொள்கிறது. இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

    • பளு தூக்குதலில் இந்தியா 3 தங்கப் பதக்கம் வென்றது.
    • பளு தூக்குதலில் இந்தியா 2 வெண்கலம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு 2வது வெண்கலம் கிடைத்துள்ளது.

    காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலம் வென்றார். பெண்களுக்கான 71 கிலோ எடைப்பிரிவில் 212 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் மூன்றாம் இடம்பிடித்து வெண்கலம் வென்றார். பளு தூக்குதலில் இதுவரை 7 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

    இதன்மூலம் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றுள்ளது.

    • இந்திய அணி பளு தூக்குதலில் ஒரு வெண்கலம் வென்றுள்ளது.
    • இந்நிலையில் இன்று ஜூடோவில் வெண்கலம் வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது.

    நான்காவது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆண்கள் ஜூடோ 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் விஜய்குமார் யாதவ் வெற்றி பெற்று பதக்கத்தை உறுதி செய்தார். சைப்ரசின் பெட்ரோசை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இன்றைய தினத்தில் இந்திய அணி ஜூடோவில் 2வது பதக்கத்தை வென்றுள்ளது.

    காமன்வெல்த் போட்டியில் இதுவரை இந்திய அணி 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களை வென்றுள்ளது.

    • இந்திய அணி பளு தூக்குதலில் 2 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.
    • இந்நிலையில் ஜூடோவில் இன்று வெள்ளி வென்றுள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்தியா இதுவரை 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.

    நான்காவது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதுவரை இன்றைய நாளின் சிறப்பம்சமாக லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதிசெய்து வரலாறு படைத்தது.

    இதற்கிடையே, இன்று நடைபெற்ற மகளிர் ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சுஷிலா தேவி வெற்றி பெற்று பதக்கத்தை உறுதி செய்தார். மொரீஷியஸின் பிரிசில்லாவை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இந்நிலையில், இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் மைக்கேலா வைட்பூவிடம் வீழ்ந்து சுஷிலா தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    காமன்வெல்த் போட்டியில் இதுவரை இந்திய அணி 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது.

    • கானாவுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி அபார வெற்றி பெற்றது.
    • இந்தியா சார்பில் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் ஹாட்ரிக் கோல் அடித்தார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்துவருகிறது.

    இத்தொடரின் ஆண்களுக்கான ஹாக்கியில் இந்திய அணி தனது முதல் போட்டியில் கானாவை சந்தித்தது. ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இந்தியா சிறப்பாக விளையாடியது. தொடர்ந்து கோல் மழை அடித்து அசத்தியது.

    இறுதியில், இந்திய அணி 11 - 0 என்ற கணக்கில் கானாவை அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் மொத்தம் எட்டு வீரர்கள் கோல் அடித்தனர். இந்தியா சார்பில் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் ஹாட்ரிக் கோல் அடித்தார். ஹர்மன்பிரீத் சிங் 3, ஜுக்ராஜ் சிங் 2, அபிஷேக், ஷம்ஷேர் சிங், ஆகாஷ்தீப் சிங், நீலகண்ட் சர்மா, வருண் குமார், மன்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

    • காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் கலப்பு குழு போட்டி நடைபெற்றது.
    • இதில் தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்தியா இதுவரை பளுதூக்குதலில் 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.

    இந்நிலையில், பேட்மிண்டன் கலப்பு குழு ஆட்டத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா 3-0 என்ற புள்ளிக்கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    முதல் சுற்றில் ஆடிய சும்த் ரெட்டி - அஷ்வினி பொன்னப்பா ஜோடி 21-9, 21-11 என்ற கணக்கில் வென்றது.

    2வது சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 21-5, 21-6 என்ற கணக்கில் வென்றார்.

    இதையடுத்து, 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்ற பிறகு, பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 21-11, 21-16 என்ற செட் கணக்கில் வென்றார்.

    இதன்மூலம் பேட்மிண்டன் கலப்பு குழு போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    • சார்லஸ் அறக்கட்டளை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்து வருகிறது.
    • பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இளவரசர் சார்லஸ் தனது அறக்கட்டளைக்கு நிதி பெற்றதாக செய்தி வெளியானது.

    லண்டன்:

    அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன். அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான பின்லேடனை கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்கா சுட்டுக் கொன்றது.

    இதற்கிடையே, சர்வதேச அளவில் பயங்கரவாதியாக அறியப்பட்ட பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பணம் பெற்றதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒசாமா பின்லேடனின் சகோதரர்களான பாக்ரி மற்றும் ஷஃபீக்கிடம் இருந்து இளவரசர் சார்லஸ் நடத்தி வரும் அறக்கட்டளை கடந்த 2011 -ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 1 மில்லியன் பவுண்டுகளை நன்கொடையாக பெற்றதாக லண்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

    பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் இளவரசர் சார்லஸ் தலைமையிலான அறக்கட்டளை நன்கொடை பெறலாமா என பிரிட்டன் பத்திரிகைகள் கடுமையாக தாக்கி செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்நிலையில், சார்லஸ் அறக்கட்டளை தலைவர் சர் அயன் செஷர் கூறியதாவது:

    சார்லஸ் அறக்கட்டளை பிரிட்டனில் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் திட்டங்களுக்கு நன்கொடை அளித்து வருகிறது.

    ஒசாமா பின்லேடனுக்கும், அவரது உறவினர்களுக்கும் 1994 முதல் எந்தத் தொடர்பும் இல்லை. பின்லேடன் சகோதரர்கள் சார்லஸ் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தது உண்மை. பின்லேடன் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக நன்கொடை தந்திருக்கலாம். இந்த பணம் சட்டப்படி உரிய விதிமுறைகளைப் பின்பற்றி பெறப்பட்டுள்ளது.

    அனைத்து அமைப்புகளிடம் தெரிவித்து ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளது. எல்லாம் வெளிப்படையாக நடந்துள்ளது. இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. இந்த நன்கொடையை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குவது ஏன் எனத் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

    • பெண்கள் பிரிவில் மீராபாய் சானு ஏற்கனவே தங்கப் பதக்கம் வென்றார்.
    • ஆண்களுக்கான பிரிவில் ஜெரேமி லால்ரின்னுங்கா தங்கம் வென்றார்.

    பர்மிங்காம்:

    காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு 3-வது தங்கம் கிடைத்துள்ளது.

    காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார். ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 313 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் அச்சிந்தா ஷூலி முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.

    ஏற்கனவே மீராபாய் சானு, ஜெரேமி தங்கம் வென்றுள்ள நிலையில், பளு தூக்குதலில் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றுள்ளார்.

    இதன்மூலம் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றுள்ளது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 191 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 101 ரன்களில் சுருண்டது.

    சவுத்தாம்ப்டன்:

    தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    இதையடுத்து நடந்த டி20 தொடரின் இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை எடுத்தது.

    அந்த அணியின் ஹென்ரிக்ஸ் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 70 ரன்களை எடுத்தார். மார்க்ரம் 51 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து அணி சார்பில் டேவிட் வில்லி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 27 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 17 ரன், கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் 14 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    சீரான இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில், இங்கிலாந்து 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 90 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ஷம்சி 5 விக்கெட்டும், மகராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா 2-1 என டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது ஷம்சிக்கும், தொடர் நாயகன் விருது ஹென்ரிக்சுக்கும் அளிக்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்க உள்ளது.

    • இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றுள்ளது.
    • ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முன்னேறினார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நியூசிலாந்தின் கேட்லின் வாட்ஸை எதிர்கொண்டார்.

    இந்தப் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா 11-8, 9-11, 11-4, 11-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    ×