search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம், இந்தியா தோல்வி
    • இன்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிக்கு போராடும் என எதிர்பார்ப்பு

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

    முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் இன்றைய  ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனைகள் தீவிரமாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

    • குரூப் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியா, வேல்ஸ் அணிகள் மோதின.
    • இதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், இந்தியா- வேல்ஸ் அணிகளுக்கிடையே ஹாக்கி போட்டி நடைபெற்றது. அதில் மகளிர் ஹாக்கி ஏ பிரிவில் நடந்த போட்டியில் வேல்ஸ் அணியை 3-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இதன்மூலம் தொடர்ந்து 2-வது வெற்றியை இந்திய மகளிர் அணி பதிவு செய்துள்ளது.

    ஏற்கனவே 5-0 என்ற கோல் கணக்கில் கானா அணியை இந்திய மகளிர் அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    • காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பிந்த்யாராணி வெள்ளி வென்றார்.
    • காமன்வெல்த் போட்டிகளில் இது இந்தியாவுக்கு 2வது வெள்ளி ஆகும்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளில் பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது.

    இந்நிலையில், பளு தூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் 202 கிலோ எடையை தூக்கி இரண்டாமிடம் பிடித்தார் பிந்த்யாராணி. இதையடுத்து, அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இதன்மூலம் காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரே நாளில் 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது. 

    • காமன்வெல்த் போட்டியில் இந்தியா 3 பதக்கங்களை பெற்றுள்ளது.
    • குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

    இந்நிலையில், 70 கிலோ குத்துச்சண்டை எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    நியூசிலாந்தின் ஏரியன் நிக்கல்சனை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    வரும் புதன்கிழமை காலிறுதிப் போட்டி நடைபெற உள்ளது. அரையிறுதிக்கு முன்னேறுவதன்மூலம் லவ்லினா போர்கோஹெய்னுக்கு காமன்வெல்த் போட்டியில் பதக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா இன்று 3 பதக்கங்களை வென்றுள்ளது.
    • பளு தூக்குதலில் மீராபாய் சானு தங்கம் வென்றார்.

    புதுடெல்லி:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளில் பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது.

    பளு தூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார் மீராபாய் சானு. காமன்வெல்த் போட்டிகளில் மீராபாய் சானுவுக்கு இது 3வது பதக்கமாகும்.

    இந்நிலையில் பளு தூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதேபோல், விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்றார்.
    • காமன்வெல்த் போட்டிகளில் இது இந்தியாவுக்கு முதல் தங்கமாகும்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது.

    இந்நிலையில், பளு தூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார் மீராபாய் சானு. காமன்வெல்த் போட்டிகளில் மீராபாய் சானுவுக்கு இது 3வது (2014 - வெள்ளி, 2018 - தங்கம், 2022 - தங்கம்) பதக்கமாகும்.

    இதன்மூலம் காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரே நாளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்றுள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் இது இந்தியாவுக்கு முதல் தங்கமாகும்.

    • 55 கிலோ எடைப்பிரிபு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கெத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றார்
    • கடந்த சீசனில் இந்திய பளுதூக்கும் வீரர்கள் 6 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்றனர்.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. 55 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கெத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் இறுதிச் சுற்றில் மொத்தம் 248 கிலோ (113கி +135கி ) எடை தூக்கி 2ம் இடம்பிடித்தார்.

    மலேசியாவின் முகமது அனிக் 249 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கமும், இலங்கையின் திலங்கா இசுரு குமார 225 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    கடந்த சீசனில் இந்திய பளுதூக்கும் வீரர்கள் 6 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்றனர். இந்த ஆண்டும் ஆதிக்கம் செலுத்துவார்கள என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிரதமருக்கான தேர்தல் களத்தில், ரிஷி சுனக், லிஸ் டிரஸ் இடையே கடும் போட்டி
    • நேரடி விவாதத்திற்கு பிறகு லிஸ் டிரசுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக தகவல்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் புதிய பிரதமர் தேர்வுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்நாட்டின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரே நாட்டின் அடுத்த பிரதமராக முடியும். இதற்கான தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நிதி மந்திரியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் அடுத்த வாரம் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க உள்ளனர். இந்த நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி பிரதமராகும் வாய்ப்பு லிஸ் டிரசுக்கு 90 சதவீதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிஷி சுனக்கிற்கான வாய்ப்பு 10 சதவீதம் குறைந்துள்ளது. இவர்கள் இருவரை தவிர பிறருக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என கணக்கிடப்பட்டுள்ளது.

    அண்மையில் நடைபெற்ற நேரடி விவாதத்தின்போது பேசிய லிஸ் டிரஸ், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுவதை விரும்பவில்லை என தெரிவித்திருந்தார். இதையடுத்து அவருக்கான ஆதரவு சதவீதம் ரிஷி சுனக்கை விட அதிகரித்து விட்டதாக கருதப்படுகிறது.

    • குரூப் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியா, கானா அணிகள் மோதின.
    • இதில் இந்தியா 5- 0 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தியது.

    லண்டன்:

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. குருப் ஏ பிரிவில் இந்தியா, கானா அணிகள் இடம்பிடித்துள்ளன.

    முதல் நாளில் நடந்த மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா, கானா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் குர்ஜித் கெளர் (3,39), நேகா (28), சங்கீதா குமாரி (36), சலிமா டேடே (56) ஆகியோர் கோல்களை அடித்தனர்.

    • ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டு உள்ளது.
    • டிரஸ்சை விட ரிஷி சுனக் சற்றே முன்னிலை பெற்றிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

    லண்டன் :

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித்தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்து இருக்கிறது.

    இதில் முன்னாள் நிதி மந்திரியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகியோர் இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டு உள்ளது.

    இதில் நாட்டின் புதிய பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் அடுத்த வாரம் முதல் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக கன்சர்வேட்டிவ் கட்சியை ஆதரித்த வாக்காளர்களிடம் ரிஷி சுனக் ஆதரவு பெற்று உள்ளார்.

    மொத்தம் 4,946 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ரிஷி சுனக் ஒட்டுமொத்த நிகர சாதகமான மைனஸ் 30 மதிப்பெண்ணை கொண்டுள்ளார். அதேநேரம் ட்ரஸ்ஸின் நிகர சாதகத்தன்மை மைனஸ் 32 ஆகும்.

    இதன் மூலம் டிரஸ்சை விட ரிஷி சுனக் சற்றே முன்னிலை பெற்றிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

    • பிரதமர் நாற்காலியைப் பிடிக்க ரிஷி சுனக்கிற்கும், லிஸ் டிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
    • ரிஷி சுனக் தனது பிரசார அறிக்கையை வெளியிட்டுப்பேசி உள்ளார்.

    லண்டன் :

    இங்கிலாந்து நாட்டில் கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவியில் இருந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ள நிலையில், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

    பிரதமர் நாற்காலியைப் பிடிக்க இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கிற்கும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி லிஸ் டிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில் ரிஷி சுனக் தனது பிரசார அறிக்கையை வெளியிட்டுப்பேசி உள்ளார். அதில் அவர் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் முற்றிலும் வீழ்த்தப்படுகிற வரையில் அவை தேசிய அவசர நிலையாகக்கருதப்படும். 2 பெண் குழந்தைகளின் தந்தையாக அவர்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் மாலையில் நடைப்பயிற்சியும், இரவில் கடைகளுக்கும் சென்ற வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    * நான் இன்னும் அடுத்த நிலைக்கு செல்கிறேன். பெண்களின் அனுமதியின்றி அவர்களை அந்தரங்க படங்கள் எடுத்து துன்புறுத்தினால், அதைக் கிரிமினல் குற்றம் ஆக்கி, அந்த கும்பல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பெண்களை வேட்டையாடுகிற ஆபத்தான குற்றவாளிகளைப் பிடிப்பதில் இருந்து நம்மைத் தடுக்க முடியாது. பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையைக் பாதுகாப்பாகவும், பத்திரமாகமும் வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குகிறவரையில் நான் ஓய மாட்டேன்.

    * நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், சிறுமிகளின் தொலைபேசி எண்களை சந்தேக நபர்கள் வைத்திருந்தால், எதற்காக அவர்கள் அந்த எண்கள், தொடர்பு விவரங்களை வைத்துள்ளனர் என்பதை விளக்கும்படி கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    * ஆபத்தான குற்றவாளிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் நீதித்துறை மந்திரிக்கு வழங்கப்படும்.

    * மனித உரிமைகள் சட்டத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டு குற்றவாளிகள் தங்கள் மீதான நாடு கடத்தும் உத்தரவை ஏமாற்றுவதைத் தடுக்க உரிமைகள் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றுவேன்.

    இவ்வாறு ரிஷி சுனக் கூறி உள்ளார்.

    இது அவருக்கு பெண்கள் மத்தியில் புதிய ஆதரவு அலைகளை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 207 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 149 ரன்களை எடுத்து தோற்றது.

    கார்டிப்:

    தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி கார்டிப்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை குவித்தது. அந்த அணியின் ரிலே ருசோவ் அதிரடியாக ஆடி 55 பந்துகளில் 5 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட 96 ரன்களை குவித்தார். ஹென்ரிக்ஸ் 53 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. பேர்ஸ்டோவ் அதிகபட்சமாக 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி விரைவில் அவுட்டானார். அவர் 14 பந்தில் 29 ரன் எடுத்தார்.

    மொயீன் அலி 28 ரன்னும், ஜேசன் ராய் 20 ரன்னும் எடுத்து வெளியேறினர். சீரான இடைவெளியில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், இங்கிலாந்து 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் பெலுகுவாயோ, ஷம்சி ஆகியோர் தலா 3 விக்கெட்டும், நிகிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் இரு அணிகளும் அணி 1-1 என சமனிலை வகிக்கிறது.

    ×