search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா பயணம்: அதிபர், துணை அதிபரை சந்திக்கிறார்
    X

    ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா பயணம்: அதிபர், துணை அதிபரை சந்திக்கிறார்

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்.
    • அங்கு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கிறார்.

    வாஷிங்டன்:

    உக்ரைன், ரஷியா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ளது. ரஷியாவுக்கு எதிராகப் போரிடும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா சென்று, அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்கிறார்.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை வரும் 26-ம் தேதி வெள்ளை மாளிகையில் சந்திக்கிறார். துணை அதிபர் ஹாரிஸ் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியை தனித்தனியாகச் சந்திப்பார்.

    உக்ரைனின் மூலோபாய திட்டமிடல் மற்றும் ரஷிய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்க ஆதரவு உட்பட ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் நிலை குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள்.

    இந்தப் போரில் உக்ரைன் வெற்றிபெறும் வரை உக்ரைனுடன் நிற்பதற்கான அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அதிபரும், துணை அதிபரும் வலியுறுத்துவார்கள் என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×