என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
கருத்துக்கணிப்பை பொய்யாக்கி முன்னிலை பெற்று வரும் டொனால்டு டிரம்ப்
- 40 எலக்டோரல் வாக்குகளை கொண்ட டெக்சாஸ் மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
- கருத்துக்கணிப்புகளை மீறி வெற்றியை டிரம்ப் நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி பதவி என்பது சர்வ சக்திவாய்ந்தது. தற்போதைய ஜனாதிபதியாக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் உள்ளார். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெறும்.
அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜோ பைடனின் பதவிகாலம் வருகிற 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக ஆயத்த பணிகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டது.
ஜனாதிபதி வேட்பாளர்களாக ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியாக இருக்கும் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர். பல கட்சி வேட்பாளர்கள் போட்டியில் இருந்தாலும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக கமலா ஹாரிஸ்-டிரம்ப் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
கருத்துக்கணிப்புகளிலும் யாரை யார் முந்துகிறார்கள் என்பதும் கணித்து கூறமுடியாத அளவுக்கு இருந்தது. அமெரிக்க ஜனாதிபதியை மக்கள் நேரடியாக தேர்ந்து எடுப்பதில்லை. எலக்டோரல் காலேஜ் (தேர்வுக்குழு உறுப்பினர்கள்) முறைப்படி வாக்குப்பதிவு நடக்கிறது. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.
அமெரிக்காவில் 16 கோடியே 50 பேர், வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள். இதில் 7 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர். அவர்கள் தபால் மூலமும், இ-மெயில் மூலமும் வாக்களித்து இருந்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
40 எலக்டோரல் வாக்குகளை கொண்ட டெக்சாஸ் மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். காலை 8 மணி நிலவரப்படி டொனால்டு டிரம்ப் 198 வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 99 வாக்குகள் பெற்று பின்தங்கி வருகிறார்.
முன்னதாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலான வாக்காளர்கள் கமலா ஹாரிஸ் அதிக வாக்குகள் பெறுவார் எனக் கூறப்பட்டது. நாடு முழுவதும் 48 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஸுக்கு சாதகமான கருத்தை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் 44 சதவீதம் பேர் டிரம்பை ஆதரித்தனர்.
ஜனநாயகம், பொருளாதாரம், கருக்கலைப்பு, குடியேற்றம் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகிய ஐந்து விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் டொனால்டு டிரம்ப் அதிக இடங்களில் முன்னணி பெற்று வருகிறார். இதன்மூலம் கருத்துக்கணிப்புகளை மீறி வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
காலை 9 மணி நிலவரப்படி டொனால்டு டிரம்ப் 52.சதவீத வாக்குகளும், கமலா ஹாரிஸ் 46.3 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்