search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்க அதிபர் தேர்தல்: 40 நிமிடம் வரிசையில் நின்று வாக்களித்த அதிபர் ஜோ பைடன்
    X

    அமெரிக்க அதிபர் தேர்தல்: 40 நிமிடம் வரிசையில் நின்று வாக்களித்த அதிபர் ஜோ பைடன்

    • முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றன.
    • சக்கர நாற்காலியிலிருந்த பெண் முன்னாள் செல்ல உதவி செய்தார்.

    அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சிறப்புரிமை மூலம் தபால் ஓட்டு உள்ளிட்ட, முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றன.

    அந்த வகையில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் தனது சொந்த ஊரான டெலாவேரின் வில்மிங்டன் பகுதியில் தனது வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று தனது வாக்கை பதிவு செய்தார்.

    வாக்களிக்கக் காத்திருந்தவர்களுடன் சேர்ந்து வரிசையில் நின்ற ஜோ பைடன் அவர்களுடன் சகஜமாகப் பேசினார். மேலும் அங்கு சக்கர நாற்காலியிலிருந்த பெண் முன்னாள் செல்ல உதவி செய்தார்.

    தொடர்ந்து 40 நிமிட காத்திருப்புக்கு பின்னர் இறுதியில் தனது வாக்கினை செலுத்தினார். 81 வயதாகும் ஜோ பைடன் வயது மூப்பு காரணமாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×