search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்த தாக்குதலோடு இஸ்ரேல்- ஈரான் பதில் தாக்குதல் முடிவுக்கு வரவேண்டும்: அமெரிக்கா
    X

    இந்த தாக்குதலோடு இஸ்ரேல்- ஈரான் பதில் தாக்குதல் முடிவுக்கு வரவேண்டும்: அமெரிக்கா

    • அக்டோபர் 1-ந்தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
    • ஈரானின் நேரடி தாக்குதலுக்கு இன்று காலை இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஈரான் மண்ணில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலுக்கு சரியான பாடம் புகட்டுவோம் என ஈரான் தெரிவித்திருந்தது. ஆனால் உடனடியாக தாக்குதல் ஏதும் நடத்தவில்லை. கடந்த 1-ந்தேதி திடீரென சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் அனைத்து ஏவுகணைகளையும் வான்பாதுகாப்பு சிஸ்டத்தால் தடுத்து முறியடித்தது.

    அதில் இருந்து ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சுமார் 25 நாட்கள் கழித்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதனால் ஈரான் எப்போது வேண்டுமென்றாலும் பதிலடி தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் சூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதலுடன் பதிலடி தாக்குதல் முடிவுக்கு வரவேண்டும். பழிக்குப்பழி வாங்கப்படும் என ஈரான் தாக்குதல் நடத்தினால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

    இந்த தாக்குதலுடன் இருநாடுகளுக்கு இடையிலான நேரடி தாக்குதல் முடிவடைய வேண்டும் என்பதில் கூட்டணி நாடுகளும் உடன்படுகின்றன என நம்புவதாக தெரிவித்துள்ளது.

    Next Story
    ×